கேப்ரியல் சூறாவளி

2022–23 ஆத்திரேலியா மண்டலம் மற்றும் தென் பசுபிக் சூறாவளிப் பருவத்தின் ஒரு பகுதி

கேப்ரியல் சூறாவளி (Cyclone Gabrielle) 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்து மற்றும் நோர்போக்கு தீவை தாக்கியது. கடுமையான வெப்பமண்டல சூறாவளியான கேப்ரியலின் தாக்குதலால் நியூசிலாந்தில் குறைந்தது 46,000 வீடுகள் மின்சாரத்தை இழந்தன. கனமழை மற்றும் காற்று வீசும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த காரணத்தால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில பகுதிகளில் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது. கேப்ரியல் புயல், வடக்கு தீவுக்கு அருகில் நிலைக்கொண்டிருந்ததால், சில பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.[1] ஆக்லாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், வரலாறு காணாத மழை பொழிந்து ஏற்பட்ட வெள்ளத்தால் நான்கு பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகின.

கேப்ரியல் சூறாவளி
Severe Tropical Cyclone Gabrielle
Category 3 severe tropical cyclone (Aus scale)
Category 2 (சபிர்-சிம்ப்சன் அளவு)
கடுமையான வெப்பமண்டல சூறாவளி கேப்ரியல் பிப்ரவரி 10 அன்று அதன் உச்ச தீவிரத்திற்கு அருகாமையில் உள்ளது
தொடக்கம்6 பிப்ரவரி 2023
மறைவுதற்போது செயலில் உள்ளது
உயர் காற்று10-நிமிட நீடிப்பு: 150 கிமீ/ம (90 mph)
1-நிமிட நீடிப்பு: 165 கிமீ/ம (105 mph)
தாழ் அமுக்கம்958 hPa (பார்); 28.29 inHg
சேதம்அறியப்படவில்லை $
பாதிப்புப் பகுதிகள்பிரதானமாக நியூசிலாந்து மற்றும் நோர்போக் தீவு
2022–23 ஆத்திரேலியா மண்டலம் மற்றும் தென் பசுபிக் சூறாவளிப் பருவத்தின் ஒரு பகுதி-இன் ஒரு பகுதி

2022-23 ஆம் ஆண்டின் ஆத்திரேலிய மண்டல சூறாவளி பருவத்தின் ஐந்தாவது பெயரிடப்பட்ட புயலாகவும் 2022-23 தென் பசிபிக் சூறாவளி பருவத்தின் முதல் கடுமையான வெப்பமண்டல சூறாவளியாகவும் இப்புயல் கருதப்படுகிறது. சாலமன் தீவுகளுக்கு தெற்கே நிலைகொண்டிருந்த போது, பிப்ரவரி 6 அன்று கேப்ரியல் முதலில் ஒரு வளரும் வெப்பமண்டல தாழ்வு நிலையாகக் குறிப்பிடப்பட்டது. வெப்பமண்டல சூறாவளி என வகைப்படுத்தப்படுவதற்கு முன்பு ஆத்திரேலிய வானிலை ஆய்வு மையம் இதற்கு கேப்ரியல் என்று பெயரிட்டது. இந்தச் சூறாவளி தெற்கு பசிபிக் படுகையில் நகர்வதற்கு முன், 3 ஆம் வகை கடுமையான வெப்பமண்டல சூறாவளியை அடைந்தது. பின்னர் பிப்ரவரி 11 இல் ஒரு துணை வெப்பமண்டல தாழ்வு நிலையாக விரைவாக சிதைந்தது.

நியூசிலாந்தின் வடக்குத் தீவு முழுவதும் கனமழை மற்றும் காற்று எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையில், கேப்ரியல் நெருங்கி வந்ததால் நோர்போக் தீவு சிவப்பு எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. 2023 வடக்குத் தீவு வெள்ளத்தின் விளைவாக ஆக்லாந்து மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏற்கனவே இருந்த அவசர நிலைகள் நீட்டிக்கப்பட்டன. மேலும் பிற பகுதிகளில் புதிய அவசரகால நிலைகள் அறிவிக்கப்பட்டன. பிப்ரவரி 12 அன்று நியூசிலாந்து நாடு கேப்ரியல் சூறாவளியின் விளைவுகளை உணரத் தொடங்கியது. அதன் தாக்கம் மேலும் தொடர்ந்து, பிப்ரவரி 14 அன்று நாட்டில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

வானிலை வரலாறு

தொகு
 
சூராவளியின் பாதை

பிப்ரவரி 6 ஆம் தேதி, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BoM) சாலமன் தீவுகளுக்கு அருகிலுள்ள வடகிழக்கு பவழக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பருவ மழைக்காலப் பள்ளத்தாக்கில் வெப்பமண்டல தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக அறிவித்தது.[2][3] இந்த நிலையில், 10-30 கிமீ/ம (5-15 மைல்) குறைந்த செங்குத்து காற்று 29-30° செல்சியசு வெப்பநிலை (84-86 °பாரன்கீட்டு) கடல் மேற்பரப்பு வெப்பநிலையுடனான வளர்ச்சிக்கு சாதகமான சூழல் அமைந்திருந்தது.[2][4] இச்சூழலமைப்பு அடுத்த இரண்டு நாட்களில், ஆத்திரேலியாவின் குயின்சுலாந்தை நோக்கி உயர் அழுத்த முகடு வழியாக தென்மேற்கு நோக்கி நகர்ந்ததால் அமைப்பு படிப்படியாக மேலும் வளர்ச்சியடைந்தது. அமெரிக்காவின் டைஃபூன் எச்சரிக்கை மையம் ஆலோசனைகளைத் தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதியன்று இதை ஒரு வெப்பமண்டல சூறாவளி என வகைப்படுத்தியது. [5][6] அதே நேரத்தில், ஆத்திரேலிய வெப்பமண்டல சூறாவளி தீவிரத்தன்மை அளவில் 1 வகை வெப்பமண்டல சூறாவளியாக உருவானது. ஆத்திரேலிய வானிலை ஆய்வு நிறுவனம் இதற்கு கேப்ரியல் என்று பெயரிட்டது.[6][7]

ஆழமான வெப்பச்சலனம் ஒருங்கிணைக்கப்பட்ட போது கேப்ரியல் சூறாவளி மெதுவாக தெற்கு நோக்கி நகர்ந்தது. வகை 2 வெப்பமண்டல சூறாவளியாக தரம் வகைப்படுத்தப்பட்டது.[8] கூட்டு புயல் எச்சரிக்கை மையம் 120 கி.மீ/மணி (75 மைல்/மணி) வேகத்தில் காற்று வீசக்கூடிய ஒரு வகை ஒன்றுக்கு சமமான சூறாவளி என கேப்ரியல் சூறாவளியை மேம்படுத்தியது. பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று புயல் தொடர்ந்து தீவிரமடைந்து, விரைவில் 3 ஆம் வகை கடுமையான வெப்பமண்டல சூறாவளியாக மாறியது.[9] அடுத்த நாளின் பிற்பகுதியில், சூறாவளி பின்னர் 160° கிழக்கு நோக்கிச் சென்று ஆத்திரேலியப் பகுதியிலிருந்து வெளியேறி தெற்கு பசிபிக் படுகைக்கு நகர்ந்தது. அங்கு இது வகை 2- சூறாவளிக்கு சமமான ஒரு சூறாவளியாக மாறியது.[10] பின்னர் வடமேற்கு செங்குத்து காற்றாக மாற்றமடைந்து வகை 1- என்ற தரநிலைக்குச் சமமான சூறாவளியாக தரமிறங்கியது. பிப்ரவரி 10 ஆம் தேதியன்று கேப்ரியல் சூறாவளி கண்காணிப்பு நியூசிலாந்தின் வானிலை ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது.[11] கூட்டு புயல் எச்சரிக்கை மையம் தன்னுடைய எச்சரிக்கை செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. நியூசிலாந்து வானிலை ஆய்வு நிலையம் கேப்ரியலை இரண்டாம் வகை வெப்ப மண்டல சூறாவளியாக தரமிறக்கியது. பிப்ரவரி 11 அன்று சூறாவளி நார்போக் தீவை நேரடியாகக் கடந்து சென்ற பிறகு, வானிலை ஆய்வு மையம் கேப்ரியல் ஓர் ஆழமான மிதவெப்ப மண்டல தாழ்வு நிலையாக மாறியதாக அறிவித்தது.[12][13]

தயாரிப்பு

தொகு
 
பிப்ரவரி 8-9 தேதிகளில் ஆத்திரேலியாவின் கடற்கரையில் கேப்ரியல் புயல் தீவிரமடைகிறது

நோர்போக்கு தீவு

தொகு

நோர்போக்கு தீவின் ஆத்திரேலியப் பகுதி, கேப்ரியல் சூறாவளி நெருங்கி வரும்போது சிவப்பு எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. புயலின் மையம் தீவைக் கடக்கும் அல்லது தீவுக்கு அருகில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டது.[14] ஆத்திரேலிய இராணுவம் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.[15] நோர்போக்கு தீவின் அவசரக்கால மேலாண்மை அமைப்பு சனிக்கிழமை பிற்பகலில் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டது. மக்களை வீட்டுக்கு உள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தியது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவித்தது.[16]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cyclone Gabrielle: Three dead after New Zealand declares state of emergency". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-02-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  2. 2.0 2.1 Tropical Cyclone Outlook for The Coral Sea February 6, 2023 00:47 UTC (Report). Australian Bureau of Meteorology. 6 February 2023. Archived from the original on 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.
  3. Tropical Climate Update February 7, 2023 (Report). Australian Bureau of Meteorology. 7 February 2023. Archived from the original on 13 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.
  4. Significant Tropical Weather Advisory for the Western and South Pacific Oceans February 6, 2023 02:30 UTC (Report). United States Joint Typhoon Warning Center. 6 February 2023. Archived from the original on 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.
  5. Prognostic Reasoning for Tropical Cyclone 12P (Twelve) Warning No 1 (Report). United States Joint Typhoon Warning Center. 8 February 2023. Archived from the original on 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023. {{cite report}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  6. 6.0 6.1 Tropical Cyclone Technical Bulletin February 8, 2023 07:04 UTC (Report). Australian Bureau of Meteorology. 6 February 2023. Archived from the original on 11 February 2023. {{cite report}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  7. Ocean Wind Warning for Metarea 10 February 8, 2023 03:41 UTC (Report). Australian Bureau of Meteorology. 6 February 2023. Archived from the original on 11 February 2023.
  8. "Tropical Cyclone Technical Bulletin (Eastern Region)". Australian Bureau of Meteorology. 8 February 2023. Archived from the original on 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் 8 February 2023.
  9. "Tropical Cyclone Technical Bulletin (Eastern Region)". Australian Bureau of Meteorology. 9 February 2023. Archived from the original on 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  10. "Tropical Cyclone Technical Bulletin (Eastern Region)". Australian Bureau of Meteorology. 10 February 2023. Archived from the original on 10 February 2023. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
  11. "Tropical Cyclone Bulletin for Severe Tropical Cyclone Gabrielle". MetService. 10 February 2023. Archived from the original on 10 February 2023. பார்க்கப்பட்ட நாள் 10 February 2023.
  12. "Tropical Cyclone Bulletin for Tropical Cyclone Gabrielle". MetService. 11 February 2023. Archived from the original on 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.
  13. "Tropical Cyclone Technical Bulletin (Eastern Region)". Australian Bureau of Meteorology. 11 February 2023. Archived from the original on 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  14. "Watch: Power goes down on Norfolk Island as Cyclone Gabrielle tracks towards NZ". NZ Herald (in New Zealand English). Archived from the original on 11 February 2023. பார்க்கப்பட்ட நாள் 11 February 2023.
  15. "Last flight leaves Norfolk Island as Cyclone Gabrielle bears down" (in en). 1 News இம் மூலத்தில் இருந்து 11 பிப்ரவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230211072224/https://www.1news.co.nz/2023/02/11/last-flight-leaves-norfolk-island-as-cyclone-gabrielle-bears-down/. 
  16. "Australia's Norfolk Island braces for Cyclone Gabrielle impact" (in en). Reuters. 11 February 2023 இம் மூலத்தில் இருந்து 12 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230212045722/https://www.reuters.com/business/environment/australias-norfolk-island-braces-cyclone-gabrielle-impact-2023-02-10/. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியல்_சூறாவளி&oldid=3824431" இலிருந்து மீள்விக்கப்பட்டது