கேப்ரியல் டி'அனுன்சியோ

இத்தாலிய எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், போர்வீரர் அரசியல்வாதி (1863-1938)

ஜெனரல் கேப்ரியல் டி'அனுன்சியோ, மான்டினெவோசோவின் இளவரசர் (General Gabriele D'Annunzio, Prince of Montenevoso, 12 மார்ச் 1863 - 1 மார்ச் 1938), சில சமயங்களில் d'Annunzio எழுதப்படுகிறது. [1] என்பவர் ஒரு இத்தாலிய கவிஞர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், பத்திரிகையாளர், பிரபு, முதல் உலகப் போரின் போது இத்தாலிய இராணுவ அதிகாரியாக இருந்தவர். இவர் 1889 முதல் 1910 வரை இத்தாலிய இலக்கியத்திலும், பின்னர் 1914 முதல் 1924 வரை இத்தாலிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்தார். இவர் பெரும்பாலும் இல் வாட் ("கவிஞர்"), [2] அல்லது இல் ப்ரோஃபெட்டா ("தீர்க்கதரிசி") என்ற அடைமொழிகளில் குறிப்பிடப்பட்டார்.

கேப்ரியல் டி'அனுன்சியோ
Gabriele D’Annunzio Edit on Wikidata
பிறப்பு12 மார்ச்சு 1863
பெஸ்கெரா
இறப்பு1 மார்ச்சு 1938 (அகவை 74)
Gardone Riviera
கல்லறைVittoriale degli italiani
படித்த இடங்கள்
  • Sapienza University of Rome
  • Convitto Nazionale Cicognini
பணிநாடகாசிரியர், அரசியல்வாதி, இராணுவ பணியாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், வானோடி, librettist
கையெழுத்து

டி'அனுன்சியோ தனது இலக்கியப் படைப்புகளில் மறைகுறி மரபு இயக்கத்துடன் தொடர்புடையவர். இது பிரெஞ்சு குறியீட்டியம் மற்றும் பிரித்தானிய அழகியல்வாதம் ஆகியவற்றுடன் நெருக்கமாக இருந்தது. இத்தகைய படைப்புகள் முந்தைய இயல்பான தன்மைக்கு எதிரானதான கற்பனைக் கனவுகளில் ஒரு திருப்பத்தை கொண்டதாக இருந்தது. இவர் பிரீட்ரிக் நீட்சேவின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். அது இவரது இலக்கிய மற்றும் பிற்கால அரசியல் வாழ்வில் வெளிப்பட்டது. எலியோனோரா டூஸ் மற்றும் லூயிசா கசாட்டி உட்பட பல பெண்களுடனான இவரது விவகாரங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.

முதல் உலகப் போரின் போது, இத்தாலியில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளினால் இலக்கியவாதி என்ற நிலையிலிருந்து ஒரு தேசிய போர் வீரனாக மாறினார். [3] இவர் இத்தாலிய இராணுவத்தின் உயரடுக்கு ஆர்டிடி புயல் துருப்புக்களுடன் தொடர்புடையவராகவும், வியன்னா மீதான வானூர்தி தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றாராகவும் இருந்தார். 1919 ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாட்டிற்கு எதிரான இத்தாலிய தேசியவாத எதிர்வினையின் ஒரு பகுதியாக, இவர் ஃபியூம் நகரை மையமாக கொண்டு இத்தாலிய ரீஜென்சி ஆஃப் கர்னாரோ அரசை அமைத்தார். கர்னாரோவின் சாசனம் இசையை அரசின் அடிப்படைக் கோட்பாடாக மாற்றியது. இது இயற்கையில் கார்ப்பரேட்டிசமாக இருந்தது. [4] டி'அனுன்சியோ இத்தாலிய எல்லைகடந்த தேசியத்தை போதித்தாலும், தன்னை ஒரு பாசிசவாதி என்று சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும், இத்தாலிய பாசிசத்தை ஓரளவு உருவாக்கியதற்காக இவர் புகழப்படுகிறார். [5] இவரது கருத்துக்கள் மற்றும் அழகியல் இரண்டும் பெனிட்டோ முசோலினியின் மீது தாக்கத்தை உண்டாக்கியது. 1924இல் இவர் 'இளவரசர்' பட்டம் பெற்றார்.

குறிப்புகள் தொகு

  1. As he used to sign himself (Guglielmo Gatti, Vita di Gabriele d'Annunzio, Firenze, 1956, pp. 1–2).
  2. The Italian vate directly stems from Latin vates.
  3. "D'Annunzio and "Carnaro" irredentism". Archived from the original on 22 April 2016. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017.
  4. La sinistra fascista. 
  5. D'Annunzio: the First Duce. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியல்_டி%27அனுன்சியோ&oldid=3676214" இலிருந்து மீள்விக்கப்பட்டது