அகுல்யாசு முனை

(கேப் அகுல்யாசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகுல்யாசு முனை அல்லது கேப் அகுல்யாசு (Cape Agulhas, போர்த்துக்கேய மொழி: காபொ டாசு அகுல்யாசு}}, "ஊசிகளின் முனை") தென்னாப்பிரிக்காவில் மேற்கு கேப்பில் உள்ள பாறைகளாலான தலைநிலமாகும்.

அகுல்யாசு முனையில் அத்திலாந்திக்கையும் இந்தியப் பெருங்கடலையும் பிரிக்கும் அலுவல்முறை கோட்டை குறிப்பிடும் அடையாளக்குறி.

இது ஆப்பிரிக்கக் கண்டத்தின் புவியியல்படியான தென்முனையாகும். இங்கிருந்துதான் பன்னாட்டு நீர்பரப்பிற்குரிய அமைப்பு வரையறுத்துள்ள அத்திலாந்திக்கையும் இந்தியப் பெருங்கடலையும் பிரிக்கும் அலுவல்முறை கோடு துவங்குகின்றது.[1]

இந்த முனை கப்பல் மாலுமிகளிடையே பெரும் ஆபத்தானப் பகுதியாக அறியப்படுகின்றது. இந்த முனைக்கு அருகில் உள்ள ஊர் ல'குல்யாசு எனப்படுகின்றது.

புவியியல்

தொகு
 
நன்னம்பிக்கை முனைக்கும் அகுல்யாசு முனைக்கும் இடையேயுள்ள தொலைவைக் காட்டும் நிலப்படம்.

அகுல்யாசு முனை ஓவர்பெர்கு பகுதியில் அமைந்துள்ளது. கேப் டவுனிலிருந்து தென்கிழக்கே 170 கிலோமீற்றர்கள் (105 மைல்கள்) தொலைவில் உள்ளது. இந்த முனைக்கு போர்த்துக்கேய மாலுமிகள் காபொ டாசு அகுல்யாசுபோர்த்துக்கேய மொழியில் "ஊசிகளின் முனை"—எனப் பெயரிட்டனர்; 1500ஆம் ஆண்டுவாக்கில் இங்கு திசைமானி காட்டுகின்ற காந்த வடபுலமும் உண்மை வடக்கும் ஒன்றிப் பொருந்தியிருந்தன.[2] இந்த அகுல்யாசு முனை தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் மாகாணத்தின் ஓவர்பெர்கு மாவட்டத்தில் அகுல்யாசு முனை நகராட்சியில் உள்ளது.[3] சிறிய வானூர்தி நிலையம் ஆண்ட்ரூசு பில்ட்சு அருகிலுள்ளது.

அகுல்யாசு முனையின் தெற்கே ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடலோரமாக தெற்கு நோக்கி ஓடுகின்ற அகுல்யாசு நீரோட்டம் இந்தியப் பெருங்கடலுள் திரும்புகின்றது. இவ்வாறு திரும்பும்போது பெரும் கடல் எதிர்ச்சுழல்களை உருவாக்குகின்றது. அகுல்யாசு வட்டங்கள் எனப்படும் இவை தெற்கு அத்திலாந்திக்கு பெருங்கடலுள் சுழன்று பெருமளவு வெப்பத்தையும் உப்பையும் பக்கத்து பெருங்கடலுக்கு எடுத்துச் செல்கின்றது. இது உலகளாவிய வெப்பச் சலனம் மற்றும் உப்பு சுழற்சிக்கு முதன்மையான காரணிகளில் ஒன்றாக உள்ளது.

நன்றாக அறியப்பட்ட நன்னம்பிக்கை முனை போல் அல்லாது அகுல்யாசு முனை சுற்றுலாவிற்கு பொருத்தமானதல்ல; மெதுவாக வளையும் கடலோரமும் பாறைகளாலான கடற்கரையும் கொண்டது. சரியான முனையை கண்டுபிடிக்கவியலாத நிலையில் அளவியல் அறிவிப்பு ஒன்று முனையின் இருப்பிடத்தை அடையாளப்படுத்துகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள கடல் ஆழமில்லாதுள்ளது. தென்னாப்பிரிக்காவில் மீன் பிடிக்க இதுவே சிறந்த இடமாகும்.[4][5]

அகுல்யாசு முனையிலுள்ள பாறைகள் மேசை மலை குழுமத்தைச் சேர்ந்தவை; இவை மேசை மலை மணற்பாறைகள் எனப்படுகின்றன. இவை மேசை மலை, கேப் முனை, நன்னம்பிக்கை முனை மலைமுகடுகளை உருவாக்கிய நிலவியல் நிகழ்வுகளுடன் தொடர்புள்ளவை.

வானிலை

தொகு
 
அகுல்யாசு முனையிலுள்ள கலங்கரை விளக்கம் ஆண்டு முழுமையும் பல கப்பல்களை வழிகாட்டியுள்ளது.

இங்குள்ள வானிலை மிகவும் மிதமானது. வெப்பநிலையும் மழைப்பொழிவும் மிக உயர்ந்தோ மிகத் தாழ்ந்தோ இல்லாதுள்ளது. இதனை நிர்வகிக்கும் தென்னாப்பிரிக்க தேசியப் பூங்காக்கள் அறிக்கைப்படி சராசரி மழைப்பொழிவு ஆண்டுக்கு 400–600 மிமி ஆக உள்ளது. இந்த மழை பெரும்பாலும் குளிர்மாதங்களில் பெய்கின்றது.[6] அகுல்யாசு முனை வானிலை தரவுகள் கிடைக்கின்றன,சராசரி வானிலை:

  • சன மீயுயர்: 23.8 °C (தாழ்: 17.7 °C); சூலை மீயுயர்: 16.5 °C (தாழ்: 10.8 °C)
முனையைச் சுற்றி கலங்கரை விளக்கிலிருந்து அகல்பரப்புக் காட்சி

மேற்சான்றுகள்

தொகு
  1. Limits of Oceans and Seas பரணிடப்பட்டது 2015-06-06 at the வந்தவழி இயந்திரம். International Hydrographic Organization Special Publication No. 23, 1953.
  2. Patricia Seed: Discovery of the Coincidence of Magnetic and True North
  3. Cape Agulhas Municipality official home page
  4. http://www.iol.co.za/news/south-africa/western-cape/fury-over-great-white-shark-haul-1.1675105#.U2ruNfldWTM
  5. Cacutt, Lenn. The Big-Game Fishing Handbook. pp. 145–157. பார்க்கப்பட்ட நாள் 2014. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
  7. "South Africa - Cape Agulhas". Centro de Investigaciones Fitosociológicas. Archived from the original on 23 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Climate Statistics for Cape Agulhas, South Africa". பார்க்கப்பட்ட நாள் 22 February 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுல்யாசு_முனை&oldid=3926961" இலிருந்து மீள்விக்கப்பட்டது