கேரள சிவப்பு மழை நிகழ்வு

தென்னிந்திய மாநிலத்தில் கோடைகாலங்களில் அவ்வப்போது காணப்படும் நிகழ்வு

கேரள சிவப்பு மழை நிகழ்வு (Red rain in Kerala) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் 15 ஜூலை 1957 திங்கட்கிழமை அன்று நிகழ்ந்த சிவப்பு மழை நிகழ்வாகும். பின்னர் அதன் நிறம் மஞ்சளாக மாறியது. [1] 25 ஜூலை முதல் 23 செப்டம்பர் 2001 வரை சிவப்பு மழை பெய்தது. கேரளாவில் ஆங்காங்கே பிற வண்ண மழையும் பெய்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடைகள் மாறின.[2] மஞ்சள், பச்சை மற்றும் கருப்பு மழையும் பதிவாகியுள்ளது. [3][4][5] 1896 ஆம் ஆண்டும் கேரளாவில் வண்ண மழை பதிவாகியுள்ளது.[6] மிக சமீபத்தில் ஜூன் 2012 இல்,[7] மற்றும் 15 நவம்பர் 2012 முதல் 27 டிசம்பர் 2012 வரை இலங்கையின் கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் இம்மாதிரியான நிக்ழவுகள் பதிவாகியுள்ளன.[8] [9] [10] [11]

மழை நீர் மாதிரி (இடது) மற்றும் துகள்கள் கலந்த நீர் (வலது). உலர்ந்த வண்டல் (மையம்)

2001 இல் ஒரு ஒளி நுண்ணோக்கியால் செய்யப்பட்ட பரிசோதனையைத் தொடர்ந்து, மழையானது ஒரு கற்பனையான விண்கல் வெடிப்பின் வீழ்ச்சியால் வண்ணமயமானது என்று முதலில் கருதப்பட்டது.[6] ஆனால் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், திரென்டெபோலியா பேரினத்தைச் சேர்ந்த உள்நாட்டில் செழிப்பான நிலப்பச்சை பாசியிலிருந்து காற்றில் பரவும் வித்துகளால் மழைக்கு வண்ணமயம் ஏற்பட்டது என முடிவு செய்யப்பட்டது.[6]

நிகழ்வு

தொகு
 
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அதிக சிவப்பு மழை பெய்த பகுதி

கேரளாவின் வண்ண மழை 25 ஜூலை 2001 அன்று, மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பெய்யத் தொடங்கியது. மஞ்சள், பச்சை மற்றும் கருப்பு மழையும் பதிவானது.[3][12][13]

பின்னர் செப்டம்பர் பிற்பகுதி வரை குறைந்த அதிர்வெண்ணுடன் சிவப்பு மழையின் மேலும் பல நிகழ்வுகள் அடுத்த பத்து நாட்களில் பதிவாகின.[12] உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, முதல் வண்ண மழைக்கு முன்னதாக பலத்த இடி மற்றும் மின்னல் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மரங்களின் இலைகள் கருகி அதன் சாம்பல் உதிர்ந்தாகவும் அறியப்பட்டது. திடீர் கிணறுகளும் உருவானது.[14][15][16] இந்நிகழ்வு பொதுவாக சிறிய அளவிலான இடங்களிலேயே பதிவானது. சிவப்பு மழை பொதுவாக 20 நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்தது.[12] ஒவ்வொரு மில்லிலிட்டர் மழைநீரிலும் சுமார் 9 மில்லியன் சிவப்பு துகள்கள் இருந்தன. இந்த புள்ளிவிவரங்களை பொழிந்ததாக மதிப்பிடப்பட்ட மொத்த சிவப்பு மழையின் அளவைப் பிரித்து, கேரளாவில் 50,000 கிலோகிராம் (110,000 lb) சிவப்பு துகள்கள் விழுந்ததாக மதிப்பிடப்பட்டது. [12]

 
சிவப்பு மழை மாதிரியிலிருந்து துகள்களின் ஒளிப்பட வரைபடம்

மேற்கோள்கள்

தொகு
  1. https://eparlib.nic.in/bitstream/123456789/1523/1/lsd_02_02_06-08-1957.pdf p. 25
  2. Gentleman, Amelia (5 March 2006). "Red rain could prove that aliens have landed". http://observer.guardian.co.uk/world/story/0,,1723913,00.html. 
  3. 3.0 3.1 "JULY 28, 2001, The Hindu: Multicolour rain". Hinduonnet.com. 2001-07-29. Archived from the original on 6 September 2010. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  4. Godfrey Louis; A. Santhosh Kumar (2006). "The red rain phenomenon of Kerala and its possible extraterrestrial origin". Astrophysics and Space Science 302 (1–4): 175–87. doi:10.1007/s10509-005-9025-4. Bibcode: 2006Ap&SS.302..175L. 
  5. Venkatraman Ramakrishnan (30 July 2001). "Colored rain falls on Kerala". http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1465036.stm. 
  6. 6.0 6.1 6.2 Sampath, S.; Abraham, T. K; Sasi Kuma; V.; Mohanan, C.N. (2001). "Coloured Rain: A Report on the Phenomenon". Cess-Pr-114-2001 (Center for Earth Science Studies and Tropical Botanic Garden and Research Institute). http://www.geocities.com/iamgoddard/Sampath2001.pdf. பார்த்த நாள்: 30 August 2009. 
  7. "Morning shower paints rural Kannur red". 29 June 2012 இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130921113613/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-29/kozhikode/32472196_1_kannur-red-rain-rainwater. 
  8. "Red Rain in Sri Lanka in 2012". Fabpretty.com. 2012-12-31. Archived from the original on 20 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  9. Gamini Gunaratna, Sri Lanka News Paper by LankaPage.com (LLC) (2012-11-16). "Sri Lanka to investigate the cause of red rain received in some parts". Colombopage.com. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  10. "No meteoritic or alien connection with Red rain". Dailynews.lk. 2012-11-17. Archived from the original on 19 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  11. Chandra Wickramasinghe says yellow rain is young red rain before growth:
  12. 12.0 12.1 12.2 12.3 Godfrey Louis; A. Santhosh Kumar (2006). "The red rain phenomenon of Kerala and its possible extraterrestrial origin". Astrophysics and Space Science 302 (1–4): 175–87. doi:10.1007/s10509-005-9025-4. Bibcode: 2006Ap&SS.302..175L. 
  13. Venkatraman Ramakrishnan (30 July 2001). "Colored rain falls on Kerala". BBC இம் மூலத்தில் இருந்து 15 May 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060515220912/http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1465036.stm. 
  14. Radhakrishnan, M. G. (2001). "Scarlets of Fire". India Today. Archived from the original on 26 December 2004. பார்க்கப்பட்ட நாள் 6 March 2006.
  15. Mystery of the scarlet rains and other talesTimes of India, 6 August 2001
  16. Now wells form spontaneously in KeralaTimes of India, 5 August 2001 (from the Internet Archive)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_சிவப்பு_மழை_நிகழ்வு&oldid=4107964" இலிருந்து மீள்விக்கப்பட்டது