கேரள மாட்டிறைச்சி வறுவல்

கேரள உணவு

கேரளா மாட்டிறைச்சி வறுவல் என்பது மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட ஒரு உணவாகும், இது மசாலா, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை கொண்டு தேங்காய் எண்ணெயில் மெதுவாக வறுக்கப்படும் உணவாகும். இந்த உணவானது மாட்டிறைச்சி உலர்த்தியது என கேரளாவில் பிரபலமாக அழைக்கப்படுகிறது.

கேரளா மாட்டிறைச்சி வறுவல்
மாட்டிறைச்சி வறுவல்
மாற்றுப் பெயர்கள்மாட்டிறைச்சி உலர்த்தியது
வகைமெதுவாக வறுக்கப்படும் இறைச்சி
தொடங்கிய இடம்கேரளா, இந்தியா
பரிமாறப்படும் வெப்பநிலைசூடான நிலை
முக்கிய சேர்பொருட்கள்இறைச்சி, வாசனை பொருட்கள், வெங்காயம், தேங்காய்
வேறுபாடுகள்மாட்டிறைச்சி உலர்த்தியது

தோற்றம்

தொகு

இவ்வுணவின் தோற்றமானது கி.பி 52 ஆம் ஆண்டிலிருந்து, சிரியன் கிறித்தவர்கள் கேரளாவில் குடியேறியதில் இருந்து அறியப்படுகிறது. முதல் யூத குடியேற்றக்காரர்கள் கி.மு 6 ஆம் ஆண்டின் முன்பகுதியில் கேரளாவிற்கு வந்தனர். மேலும் அவர்கள் கோசர் கால்நடைப் படுகொலை நுட்பங்களை கொண்டு வந்தனர். இது உணவின் வளர்ச்சி செயல்முறைக்கு வழிவகுத்திருக்கலாம்.[1]

செய்முறை

தொகு

இந்த உணவானது மஞ்சள், கொத்தமல்லி, கரம் மசாலா, கருப்பு மிளகு, சிவப்பு மிளகாய், வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றின் கலவையுடன் இறைச்சி துண்டுகளை சேர்த்து சமைக்கப்படுகிறது. தேங்காய் துருவல் மற்றும் தேங்காய் எண்ணெயில் பொறித்த கருவேப்பிலைகள் இவ்வுணவினை அழகுபடுத்த உதவுகிறது. மசாலா கலவையுடன் சேர்த்து வறுக்கப்படுவதற்கு முன் பொதுவாக இறைச்சி பிரஷர் குக்கரில் வேகவைக்கப்படுகிறது. அப்பொழுது இறைச்சி மென்மையாவதுடன் உலர்ந்த நிலையை அடையும்.[2]

சேர்க்கைகள்

தொகு

கேரளா மாட்டிறைச்சி வறுவல் பொதுவாக கேரளா பரோட்டாவுடன் சேர்த்து உண்ணப்படுகிறது,[3] மேலும் இவ்வுணவானது திருப்புனிதூரா போன்ற பகுதிகளில் பழம் பொரியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இந்த உணவு வகைகள் இப்பகுதியில் பிரபலமான இணையாகும்.[4]

சர்ச்சைகள்

தொகு

இந்தியாவில் கேரளா மாட்டிறைச்சி வறுவலானாது பல சர்ச்சைகளுக்கு மத்தியில் உள்ளது. மத்திய அரசு கால்நடைகளை வெட்ட தடை விதித்துள்ளது. இருப்பினும் ஆளுங்கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் வாக்காளர்களுக்கு மிகவும் சுகாதாரமான நிலையில் மாட்டிறைச்சி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.[5]

மாட்டிறைச்சி மற்றும் பசுக்கொலை தடையை ஆதரிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கே.சுரேந்திரன் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாட்டிறைச்சி சாப்பிடும் நிழற்படம் மிகவும் பிரபலமானது. இருப்பினும் அவர் அதை வெங்காய கறி என்று கூறி மறுத்தார்.[6] ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடுவது சரிதான் என சோபா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Anand, Karen (6 July 2019). "Savouring Beef Ularthiyathu at Forte Kochi". Hindustan Times. HT Media Ltd. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  2. Roberts, Adam (August 2012). Secrets of the Best Chefs. Artisan. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57965-439-9. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  3. Arya, Divya (18 July 2016). "The Indian state that is obsessed with beef fry". BBC. https://www.bbc.com/news/world-asia-india-36366140. பார்த்த நாள்: 22 December 2019. 
  4. "Where to eat like a local in Kochi". Conde Nast Traveller. 8 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 November 2019.
  5. K, Nisar. "In Kerala, a Beef Fry Dilemma For the BJP". https://thewire.in/culture/kerala-beef-fry-bjp. பார்த்த நாள்: 22 November 2019. 
  6. "Kerala: Photo of K Surendran eating beef goes viral; BJP leader swears it was just onion curry". IBT. International Business times. பார்க்கப்பட்ட நாள் 5 April 2022.
  7. "Eating beef is okay: Shobha Surendran". The Hindu. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 April 2022.