கேலங்கா
கேலங்கா (Kelanga) என்பது இந்திய மாநிலமான அரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கலிங்கா என்ற பெயராலும் இக்கிராமம் அறியப்படுகிறது. பிவானி மாவட்ட தலைமையக நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) வடகிழக்கில் இக்கிராமம் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த கிராமத்தில் 2,628 குடும்பங்கள் இருந்தன. இதில் மொத்தம் 13,910 மக்கள் வாழ்ந்து வந்தனர். இம்மக்கள் தொகையில் 7,404 ஆண்களும் 6,506 பெண்களும் இருந்தனர். கலிங்கா கிராமம் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பனாகு -சவாய் பனா, ராச்சூ பனா, அம்ரு பனா என்பவை அம்மூன்று பிரிவுகளாகும். ஒவ்வொரு பனாவும் அதன் சொந்த பஞ்சாயத்தைக் கொண்டுள்ளது. இந்த கிராமத்தில் 3 அரசு பள்ளிகள், 1 ஆயுர்வேத மருத்துவமனை, 1 கால்நடை மருத்துவமனை மற்றும் ஒரு தபால் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் கல்வியறிவு விகிதம் 72.62% ஆகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 80.82% ஆகவும், பெண்களின் கல்வியறிவு சதவீதம் 63.32% ஆகவும் உள்ளது.[1]
கேலங்கா
Kelanga கலிங்கா | |
---|---|
ஆள்கூறுகள்: 28°52′12″N 76°19′43″E / 28.8700°N 76.3285°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பிவானி |
வட்டம் (தாலுகா) | பிவானி |
அரசு | |
• நிர்வாகம் | கிராமம் பஞ்சாயத்து |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,910 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் |
சுதந்திர போராட்ட வீரர் பண்டிட் நெகிராம் சர்மா கலிங்கா கிராமத்தைச் சேர்ந்தவர். கிராம மக்கள் பாபா குகா, தேவி மா, சதி தாதி, பாபா மவுனி தேவ் ஆகியோரை வணங்குகிறார்கள்.[2] குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று கலிங்கா கிராமத்திற்கு வந்திருந்தார். இதன் விளைவாக, கிராமம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இந்த கிராமம் மத்திய அரசின் ஆதர்சு காவ்ன் என்ற திட்டத்திற்கு உட்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[3] ஒவ்வோர் ஆண்டும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பல இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால், இந்த கிராமத்தின் இளைஞர்கள் பாதுகாப்புப் படைகளில் சேர பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kelanga Village Population - Bhiwani - Bhiwani, Haryana". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
- ↑ "Kelanga village". Census of India. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.
- ↑ "25 मई 2007 को गांव कलिंगा में आए थे डॉ. एपीजे अब्दुल कलाम". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.