கே. என். ராவ்
கே.என்.ராவ் (கோட்டம்ராஜு நாரயண ராவ் - K.N.RAO) இந்தியாவின் பிரபலமான சோதிடர்,எழுத்தாளர் ,சோதிட ஆய்வு ஆலோசகரும் ஆவார்.
கே.என்.ராவ் | |
---|---|
பிறப்பு | கோட்டம்ராஜு நாரயண ராவ் அக்டோபர் 12, 1931 ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டிணம் |
இருப்பிடம் | புது தில்லி |
தேசியம் | இந்தியா |
பணியகம் | பாரதிய வித்யா பவனில் ஜோதிட கல்வி(INSTITUTE OF ASTROLOGY) |
அறியப்படுவது | சோதிடர் , சோதிட ஆய்வு ஆலோசகர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | தாய் கே.சரஸ்வணி தேவி, தந்தை கோட்டம்ராஜு ராம ராவ் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகே.என்.ராவ் அக்டோபர் 12,1931 -ல் ஆந்திர மாநிலம்,மச்சிலிப்பட்டிணம் கிராமத்தில் பிறந்தவர்.
இவருடைய தாய் திருமதி.கே.சரஸ்வணி தேவி அவர்களின் மூலம் 12 வயதில் ஜோதிடம் இவருக்கு அறிமுகமானது.இந்திய ஜோதிடத்தில் பல அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டு அதனை தன்னுடய புத்தகங்களின் மூலமாகவும்,ஜோதிட ஆய்விதழ்கள் மூலமாகவும் வெளிப்படையாக நிரூபித்துள்ளார்.சுமார் 50000 நபர்களுடைய ஜாதகங்களை அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான 10 நிகழ்வுகளின் தகவல்களோடு சேகரித்து பல ஜோதிட ஆய்வுகளைச் செய்துள்ளார்.
தொழில் முயற்சி
தொகுமிகச்சிறந்த இந்திய ஜோதிடராக பல நாடுகளில் அறியப்படுபவர்.இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையில் பணியாற்றி 1990 நவம்பரில் பொது இயக்குனராக ஓய்வு பெற்றவர்.தணிக்கை துறையில் பணியாற்றுவதற்கு முன் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
1987-ம் ஆண்டு புது தில்லி பாரதிய வித்யா பவனில் ஜோதிட கல்வி நிறுவனத்தை (INSTITUTE OF ASTROLOGY)1 நிறுவியிருக்கிறார்.கடந்த 26 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் ஜோதிட ஆய்வு ஆலோசகராக உள்ளார்.இங்கு பல இளைஞர்கள்,பெண்கள் ஜோதிட கல்வி பயின்று பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இவ்வாய்வுகள் இவ்வமைப்பின் ஜோதிட ஆய்விதழ் (JOURNAL OF ASTROLOGY)2 மூலம் வெளியிடப்படுகின்றது.பல இந்திய பல்கலைகழகங்களில் ஜோதிடக் கல்வியை கொண்டுவர உதவியவர். இவருடைய ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமெரிக்கா,ரஷ்யா மற்றும் ஜப்பானிலும் உள்ளார்கள்.
ஜோதிடத்துறை ஈடுபாடு/கணிப்புகள்
தொகுதிரு. கே.என்.ராவ் தன்னுடைய ஜோதிட குருவாக தன்னுடைய தாய் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த யோகி பாஸ்கராணந்தா மேலும் சுவாமி மூர்க்காணந்தாஜி ஆகியோரையும் மந்த்ர குருவாக வங்காளத்தைச் சார்ந்த சுவாமி பரமாணந்த சரஸ்வதியையும் குறிப்பிட்டுள்ளார்.
கே.என்.ராவ் பல முக்கியமான நிகழ்வுகளை ஜோதிட ரீதியாக முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.
1989 ல் மத்திய அரசில் ஏற்பட்ட மாற்றங்கள்,2001 குஜராத் நிலநடுக்கம்,சோனியா காந்தியின் அரசியல் வாழ்வில் 1998 க்கு பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்கள்,பெனாசிர் பூட்டோவின் மரணம்,அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மேலெழுந்த பாலியல் விவகாரம் போன்றவற்றை முன்னரே கூறியுள்ளார்.இவருடைய ஒரு சில கணிப்புகள் நிகழாமல் சென்றுள்ளன.
அமெரிக்கா,ரஷ்யா,ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு தலைமை அழைப்பாளராக சென்று தன் ஆய்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். ஜெய்மினி ஜோதிட முறையில் புதிய நுணுக்கத்தை தன்னுடைய ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
குறிக்கோள்
தொகுஆன்மீக மயமான,தூய்மையான வாழ்க்கை முறை ஜோதிடர்களுக்கு வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தக்கூடியவர்.ஜோதிடம் என்பது ஆன்மீக சாதனைகளில் ஒன்று எனக்கருதுபவர் . இன்றைய இளைஞர்கள் மூலம் இந்திய ஜோதிடத்தை மேம்பட்ட ஆய்விற்கு எடுத்துச்சென்று பல புதிய கருத்துக்களை வெளிக்கொண்டு வரவேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.
வெளியிட்ட நூல்கள்
தொகுஇவருடைய கீழ்கண்ட புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவந்துள்ளன
*1 Learn Hindu Astrology Easily
|
|
மேலும் இவர் ஆலோசகராக இருந்து வெளிவந்த புத்தகங்கள் |
---|
1 Finer Techniques of astrological prediction |
2 Saadhe saati, a balanced view |
3 Famous Women |
4 Mystery of Rahu in Horoscope |
5 Chor Prashna |
ஆதாரங்கள்
தொகு- https://en.wikipedia.org/wiki/K._N._Rao
- 1.http://www.bvbdelhi.org/ins_astro/books.html
- 2.http://www.journalofastrology.co
- https://www.youtube.com/watch?v=szLcaX-hI4c
- http://www.astrojyoti.com/knraoprofile.htm
- http://www.astroamerica.com/v-rao.html
- 25th year siver jubilee book,Institute of Astrology,BVB,New Delhi