கே. எம். மம்மன் மாப்பிள்ளை
கண்டத்தில் எம். மம்மன் மாப்பிள்ளை (K. M. Mammen Mappillai) (1922 நவம்பர் 22 - 2003 மார்ச் 3) இவர் ஓர் இந்திய தொழிலதிபரும், மெட்ராசு இறப்பர் பேக்டரி என்ற நிறுவனத்தின் நிறுவனருமாவார்.
சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1946 இல் சென்னை அருகே ஒரு சிறிய கொட்டகையிலிருந்து ஒரு பொம்மை பலூன் உற்பத்தி அலகு மூலம் தனது தொழில்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். 1952 வாக்கில், மெட்ராசு இறப்பர் பேக்டரி, இரப்பர் தயாரிப்பில் இறங்கியது. அப்போதிருந்து, நிறுவனம் 30 பில்லியன் ரூபாய் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
1992 ஆம் ஆண்டில், மாப்பிள்ளைக்கு தொழில் துறையில் செய்த பங்களிப்புக்காக பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1] இவரது சகோதரர்கள், கே.எம்.செரியன், கே.எம். பிலிப் மற்றும் கே.எம். மேத்யூ மற்றும் மருமகன் மம்மன் மேத்யூ ஆகியோரும் பத்மசிறீ விருது பெற்றவர்கள் ஆவர். மூத்த சகோதரர் கே.எம்.செரியனும் பத்ம பூசண் பெற்றுள்ளார். இவரது உறவினர் எம்.கே.மாதுல்லாவுக்கும் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
சர்ச்சை
தொகுஎல்ஜிடி குழுமம், எல்ஜிடி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் 18 பெயர்களின் பட்டியலில் கே.எம் மம்மன் மாப்பிள்ளை இருப்பதாக நம்பப்படுகிறது. [2]
குறிப்புகள்
தொகு- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://archive.tehelka.com/story_main48.asp?filename=Ne120211The16thname.asp