கே. எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி
கே. எஸ். ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி (க. செ. இரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி)(K. S. Rangasamy College of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்செங்கோடுக்கு அருகில் உள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் கல்லூரி ஆகும். இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. 1994ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு அரிமா கே. எஸ். ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்ட்டது. இந்த நிறுவனமானது 12 இளநிலை பொறியியல் மற்றும் 14 முதுநிலை பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் வந்து பயில்கின்றனர்.[4] இக்கல்லூரியானது கே. எஸ். ஆர். கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாகும்.
குறிக்கோளுரை | தெரிந்துகொள், சேவையாற்று, முன்னேறு |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1994 | முதல்
தலைவர் | கே. எஸ். ரெங்கசாமி[1] |
முதல்வர் | ரா.கோபாலகிருக்ஷ்ணன் |
பட்ட மாணவர்கள் | 1440[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 613[3] |
அமைவிடம் | , , |
வளாகம் | 400 ஏக்ர் (1.6 km2) |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம், NBA, அ.இ.தொ.க.கு, என்.ஏ.ஏ.சி |
இணையதளம் | www.ksrct.ac.in |
வரலாறு
தொகுஇக்கல்லூரிக்கு அடித்தளமானது 1994 ஆம் ஆண்டு போடப்பட்டது. கல்லூரி பெயரில் உள்ள கே என்பது கருவேப்பம்பட்டியையும், எஸ் என்பது கல்லூரியின் தலைவரான கே. எஸ். ரங்கசாமியின் தந்தையான சென்னிமலை கவுண்டரையும் குறிக்கிறது.
வளாகம்
தொகுஇக்கல்லூரி 400 ஏக்கர்கள் (1.6 km2) பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. இது 12 லட்சம் சதுர அடிக்கு மேலான பரப்பளவில் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவு கொண்ட மாணவர்களில் ஒன்பதாவது இடத்தை ( அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதலின் படி) கொண்டுள்ளது.
அங்கீகாரம்
தொகு- இக்கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (என்ஏஏசி) இக்கல்லூரிக்கு 'ஏ' தர அங்கீகாரம் அளித்துள்ளது.[5]
- இக்கல்லூரியின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளும் ஐஎஸ்ஓ 9001: 2000 (இ) தரங்களுக்கு இணங்குகின்றன.[6]
கல்வி
தொகுஇளநிலைப் பொறியியல் படிப்புகள்
தொகு- பி. இ. இயந்திரப் பொறியியல்
- பி. இ. குடிசார் பொறியியல்
- பி. இ. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்
- பி. இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
- பி. இ. எந்திர மின்னணுவியல்
- பி. இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி. இ. மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல்
- பி. டெக். தகவல் தொழில்நுட்பம்
- பி. டெக். உணவுத் தொழில்நுட்பம்
- பி. டெக். ஜவுளித் தொழில்நுட்பம்
- பி. டெக். உயிர் தொழில்நுட்பம்
- பி. டெக். நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
முதுநிலைப் பொறியியல் படிப்புகள்
தொகு- எம். இ. கேட் (CAD)
- எம். இ. பொறியியல் வடிவமைப்பு
- எம். இ. தொழில்துறை பாதுகாப்புப் பொறியியல்
- எம். இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- எம். இ. மின்ணணு ஆற்றல் மற்றும் செயலிகள்
- எம். இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம். இ. விஎல்எஸ்ஐ வடிவமைப்பு
- எம். இ. கட்டமைப்புப் பொறியியல்
- எம். இ. மின்னாற்றல் அமைப்பு பொறியியல்
- எம். டெக். தகவல் தொழில்நுட்பம்
- எம். டெக். நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- எம். டெக். உயிர் தொழில்நுட்பம்
- எம். பி. ஏ.
- எம். சி. ஏ.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-04.