கே. கல்யாணசுந்தரமையர்
கே. கல்யாணசுந்தரமையர் ( K. Kalyanasundaramier) அல்லது கல்யாணசுந்தரம் ஐயர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த முன்னணி வழக்கறிஞரும், கொடையாளரும், அரசியல்வாதியும் ஆவார்.
இவர் 1892 முதல் 1897 வரை சட்ட மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் 1840 ஆண்டில் எங்கு பிறந்தார் என்பது தெரியவில்லை. இவர் தனது தந்தையை மிக இளம் வயதிலேயே இழந்தார். இவரது தாயார் அலமேலு அவர்களின் சொந்த கிராமமான கதிராமங்கலத்தில் வளர்க்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது. இவரது தலைப்பெழுத்து கே. என்பது அவரது சொந்த கிராமத்தின் முதல் எழுத்தைக் குறிக்கிறது.
கடுமையான உழைப்பின் மூலம் இவர் சட்டப் படிப்பை படித்து முடித்தார். தாமதமாக சட்டப் பயிற்சியில் சேர்ந்தாலும் கதிராமங்கலம், நன்னிலம் ஆகிய கிராமங்களில். தஞ்சையில் முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்தார். 1891 இல், தஞ்சையில் ஒரு புதிய பள்ளிக்காக தனது நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அதன் பின்னர் அப்பள்ளிக்கு கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி என்று இவரது பெயரிடப்பட்டு இன்னும் இயங்கி வருகிறது. இவர் டாக்டர் டாக்டர் உ. வே. சுவாமிநாத ஐயரின் நம்பிக்கைக்குரியவராகவும் நல்ல நண்பராகவும் இருந்தார். சுவாமிநாத ஐயரின் சுயசரிதை என் சரித்திரம், ஆகியவற்றில் இவருடன் உள்ள நட்பை எழுதியுள்ளார். 1892 இல் கதிராமங்கலத்தில் கல்யாணசுந்தரமையர் புதிதாகக் கட்டப்பட்ட இல்லத்தின் கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொள்ள உ. வே. சாமிநாத ஐயர் சென்றதையும் குறிப்பிடுகிறது.
அரசியல் வாழ்க்கை
தொகு1892 இல், தமிழ்நாடு சட்ட மேலவைக்கு இராவ் பகதூர், ச.அ. சாமிநாத ஐயரை விட கே. கல்யாணசுந்தரமையர் நகராட்சித் தொகுதியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டார்.[சான்று தேவை].இவர் அடுத்த 3 பருவங்களுக்கு அதே பதவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டார்.[சான்று தேவை] இவர் 1897 வரை அதே சட்டமன்றத்தில் பணியாற்றினார். இவர் 1893 இல், இராவ் பகதூர் எஸ்.ஏ. சாமிநாத ஐயருக்குப் பிறகு தஞ்சை நகராட்சி மன்றத் தலைவரானார். இவர் கதிராமங்கலத்தில் உள்ள தட்சிண திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஒரு மண்டபத்தினை இவரின் அன்னையின் பெயரில் அமைத்தார். கதிராமங்கலத்தில் ஆங்காங்கு ஒரு சில கிணறுகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தோண்டினார்.[எவ்வாறு?] இவரது கிராமத்திலிருந்து பிரதான சாலையான கும்பகோணம்-மாயவரம் சாலை வரை இவர் தனது சொந்த பணத்தில் சாலை அமைத்தவர் என்று பெயர் பெற்றவர் ஆவார்.[சான்று தேவை]
குடும்ப வாழ்க்கை
தொகுஇவருக்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் கே. இராமரத்தினம் ஐயர், பி.ஏ. என்பவரும் மற்றொருவர் கே.பாலசுப்ரமணியம் ஐயர் என்பவரும் ஆவார்கள். இவரது மகனான கே. இராமரத்தினம் ஐயர் ஒரு தமிழறிஞர் ஆவார். அவர் குறுந்தொகைக்கு முந்தைய நவீனகால விளக்கத்தை எழுதினார். இவர் 1930 ஏப்ரல் முதல் திசம்பர் வரை சேசாசலம் ஐயர் எழுதிய கலாநிலையம் வார இதழில் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
கல்யாணசுந்தரமையர் 1890 இன் பிற்பகுதியில் தனது 54வது வயதில் காலமானார்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hemingway, F. R. (1907). Madras district gazetteers, Volume 1. Superintendent, Government Press. p. 231.
மேலும் படிக்க
தொகு- K. C. Markandan (1964). Madras Legislative Council; Its constitution and working between 1861 and 1909. S. Chand & CO. p. 51.