கே. பி. கோபாலன்
கே. பி. கோபாலன் (K. P. Gopalan) ஒரு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், விடுதலைப் போராட்ட வீரரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் முதன்முதலில் 1952-ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில், இவர் மாநிலத்தின் முதல் தொழில்துறை மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கே. பி. கோபாலன் | |
---|---|
தொழிற்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் ஏப்ரல் 5, 1957 – செப்டம்பர் 31, 1959 | |
பின்னவர் | கே. ஏ. தாமோதர மேனன் |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1956 | |
தொகுதி | பையனூர் |
சட்டமன்ற உறுபு்பினர், கேரள சட்டமன்றம் | |
பதவியில் 1957–1959 | |
தொகுதி | கண்ணூர்-2 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1908 புதியபரம்பா, மலபார் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | ஏப்ரல் 20, 1977 | (அகவை 68–69)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வாழ்க்கை வரலாறு
தொகுகே.பி.கோபாலன் 1908 ஆம் ஆண்டு, இன்றைய கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள புதியபரம்பாவில் பிறந்தார். [1] இவரது பெற்றோர் மாங்கில் கண்ணன் மற்றும் கோடியத் கல்யாணி. [2] இவர் சிரக்கல் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளியிலும், கண்ணூர் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
இவர் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் இயற்கை எய்தினார்.[1]
தொழில் மற்றும் செயல்பாடு
தொகுகோபாலன் 1935 முதல் தொழிற்சங்க இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். இவர் பாம்பன் மாதவனுடன் இணைந்து கண்ணூரில் நெசவாளர்களை ஒழுங்கமைக்க முயன்றார், ஆனால், அந்த முயற்சியில் தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் பி. கிருஷ்ணப்பிள்ளை என்பவருடன் இணைந்து ஃபாரூக் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். ஒரு தொழிற்சங்கவாதியாக இவர் கேரள தொழிற்சங்க காங்கிரஸின் தலைவர் மற்றும் அகில இந்திய மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தார்.[3]
விடுதலைக்குப் பிறகு 1952 பொதுத் தேர்தலில் பையனூர் தொகுதியில் இருந்து சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும், அந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பணியாற்றினார்.[1] 1957 பொதுத் தேர்தலில், கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில், கண்ணூர்-2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் நம்பூதிரிப்பாட அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சரானார். கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்டபோது, கண்ணூரில் அரசியல் செயல்பாட்டில் கவனம் செலுத்தினார், அங்கு இவர் கட்சித் தலைமையிலான மாலை செய்தித்தாளான ஜனமுன்னணி தலைமையை ஏற்றார். 1964இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தபோது, இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில உறுதியாக இருந்தார், ஆனால் பின்னர் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரிவில் சேர்ந்தார்.
இவரைப் பற்றிய புத்தகங்கள்
தொகு2021 ஆம் ஆண்டில் கேரள பாஷா நிறுவனம் கோபாலனின் சுயசரிதையை கே. பி. கோபாலம் ஜீவிதமும் ராஷ்ட்ரேயவும் என்ற பெயரில் வெளியிட்டது, இதன் பொருள் 'கே. பி-கோபாலன்-வாழ்க்கை மற்றும் அரசியல்' என்பதாகும். புத்தகத்தின் அறிமுகத்தில், எழுத்தாளர் டாக்டர் சிந்தவிலா முரளி, தனது வாழ்க்கையின் இறுதி வரை ஏழைகளுக்காக போராடி, ஒரு ஏழை மனிதனாக வாழ்ந்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட புரட்சியாளரைப் பற்றியது என்று விவரிக்கிறார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Suresh, Sreelakshmi. "Kerala State - Everything about Kerala". www.stateofkerala.in (in ஆங்கிலம்).Suresh, Sreelakshmi. "Kerala State - Everything about Kerala". www.stateofkerala.in.
- ↑ C., Bhaskaran (2010). Keralathile Communist Prasthanam, Adya pathikar. Chintha Publishers. pp. 206–211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-262-0482-6.
- ↑ "Members - Kerala Legislature". www.niyamasabha.org.
- ↑ Muraḷi, Chinthavila (March 2021). K.P. Gopalan Jeevithavum Rashtreeyavum. Tiruvanantapuraṃ: Kerala Bhasha Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789390520190.