கே. வி. சாந்தி
சாந்தி என்ற மேடைப் பெயரால் அறியப்பட்ட கே. வி. சாந்தி (25, சூன், 1937 - செப்டம்பர் 21, 2020) என்பவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகை ஆவார். இவர் 1950களின் பிற்பகுதி, 1960கள் மற்றும் 1970களில் இந்தியத் திரைப்படங்களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாகவும், நடனக் கலைஞராகவும் இருந்தார். 1956 ஆம் ஆண்டு சோரி சோரி உள்ளிட்ட பிரபலமான இந்தி படங்களில் நடித்தார்.
கே. வி. சாந்தி | |
---|---|
பிறப்பு | கோட்டயம், கேரளம், இந்தியா | 25 சூன் 1937
இறப்பு | 21 செப்டம்பர் 2020 | (அகவை 83)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1953–1975 |
வாழ்க்கைத் துணை | ஜி. சசிகுமார், திருவனந்தபுரம். |
பின்னணி
தொகுஇவர் கேரளத்தின் கோட்டயத்தில் உள்ள சம்கிராந்தியில் பிறந்தார், பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சியாம் குமார் என்ற மகன் உள்ளார்.[1] மெர்ரிலேண்ட் ஸ்டுடியோவின் திரைப்படங்களின் நிரந்தர நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் 50 இக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களிலும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகியமொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2]
திரைப்படவியல்
தொகுநடித்த சில தமிழ்ப் படங்கள்
- பெண்குலத்தின் பொன் விளக்கு (1959)
- மருதநாட்டு வீரன் (1961)
- எல்லாம் உனக்காக (1961)
- ஆடிப்பெருக்கு (1962)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Innalathe Tharam: K. V. Shanthi". amritatv.com. Archived from the original on 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 10 July 2014.
- ↑ ശാന്തി കെ.വി [Santhi K. V.] (in மலையாளம்). Archived from the original on 27 September 2013.
Santhi K. V has acted in many films including Singing Pinkili, Wild Jasmine, Black Hand, Daughter, Teacher, Son of the Elephant Raised Vanambadi. And Tamil films. Left the scene. (Google translation)