கைப்பூர் மாவட்டம்

பாக்கித்தானின், சிந்து மாகாண மாவட்டம்


கைப்பூர் மாவட்டம் (Khairpur District) பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் சுக்கூர் கோட்டத்தில் உள்ளது.[2] இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் கைப்பூர் ஆகும். சிந்து மாகாணத்தில் வடக்கிற்கும், மத்தியப் பகுதிக்கும் நடுவில் கைப்பூர் மாவட்டம் அமைந்துள்ளது.

கைப்பூர் மாவட்டம்
خیرپور ڈسٹرکٹ
خیرپور ڈسٹرکٹ
மாவட்டம்
கைப்பூர் மாவட்டம் خیرپور ڈسٹرکٹ خیرپور ڈسٹرکٹ is located in Sindh
கைப்பூர் மாவட்டம் خیرپور ڈسٹرکٹ خیرپور ڈسٹرکٹ
கைப்பூர் மாவட்டம்
خیرپور ڈسٹرکٹ
خیرپور ڈسٹرکٹ
ஆள்கூறுகள்: 27°32′N 68°46′E / 27.533°N 68.767°E / 27.533; 68.767
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து
மாவட்டம்கைப்பூர் மாவட்டம்
நிறுவப்பட்டது1546
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்24,04,334
 • தரவரிசை5th:Sindh
இனங்கள்Khairpuri
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தொலைபேசி குறியீடு0243
வருவாய் வட்டங்கள்8
கிராம ஊராட்சிகள்89

மாவட்ட நிர்வாகம் தொகு

15,910 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கைப்பூர் மாவட்டம் கைப்பூர், தாரி மீர்வா, கோட் திஜி, கிங்கிரி, சோபா தேரா, காம்பத், பைஸ் கஞ்ச், நரா என 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[3]

எல்லைகள் தொகு

கைப்பூர் மாவட்டத்தின் வடக்கில் சிகார்பூர் மாவட்டம் மற்றும் சுக்கூர் மாவட்டங்களும், மேற்கில் லர்கானா மாவட்டம், நௌசரோ பெரோஸ் மாவட்டம் மற்றும் சிந்து ஆறும், தெற்கில் சங்கார் மாவட்டம் மற்றும் நவாப்ஷா மாவட்டங்களும் கிழக்கில் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலமும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புபடி, கைப்பூர் மாவட்ட மக்கள்தொகை 2.4 மில்லியன் ஆகும்.[4] இம்மாவட்ட மக்களில் 32.27% நகர்புறங்களில் வாழ்கின்றனர்.

 • மொழிகள்:

இம்மாவட்ட மக்களில் சிந்தி மொழியை 93.85%, பஞ்சாபி மொழியை 3.16%, உருது மொழியை 1.37%, பலூச்சி மொழியை 0.92% பேசுகின்றனர்.

 • சமயம்:
  • இசுலாம் : 96.86%
  • இந்து சமயம்: 2.93%
  • கிறித்தவம்: 0.09%
  • அகமதியா: 0.07%
  • பிறர்: 0.04%
  • எழுத்தறிவு:
  • எழுத்தறிவு: 90%

மாவட்ட நிர்வாகம் தொகு

கைப்பூர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும், 76 ஒன்றியக் குழுக்களையும், 11 நகராட்சிகளையும், 6800 கிராமங்களையும் கொண்டது.

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைப்பூர்_மாவட்டம்&oldid=2976163" இருந்து மீள்விக்கப்பட்டது