கைலாசு புர்யாக்
இராஜ்கேசுவர் புர்யாக் (Rajkeswur Purryag) (பிறப்பு: 1947 திசம்பர் 12) கைலாசு புர்யாக் என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு முன்னாள் மொரிசியசு அரசியல்வாதி ஆவார். இவர் 2012 முதல் மே 2015 வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். [1] [2] மொரிசியசின் தேசிய சட்டமன்றத்தால் ஐந்தாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2012 சூலை 21 அன்று பதவியேற்றார். அனெரூட் ஜக்நாத் 2003 முதல் ஒன்பது ஆண்டுகள் குடியரசுத்தலைவராக இருந்து 2012 மார்ச் மாதம் பதவி விலகிய பின்னர் இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர், முன்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார். இவர் 1976 இல் சிறு வயதிலேயே அரசியல் அரங்கில் அறிமுகமானார். [3] இவரது பெரிய தாத்தா இலட்சுமண் பரியாக் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மொரிசியசுக்கு ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரிந்தார். [4] [5]
மரியாதைக்குரிய கைலாசு புர்யாக் | |
---|---|
மொரிசியசின் ஐந்தாவது குடியரசுத் தலைவர் | |
பதவியில் 21 சூலை 2012 – 29 மே 2015 | |
பிரதமர் | நவின்சந்திரா ராம்கூலம் அனெரூட் ஜக்நாத் |
துணை அதிபர் | மோனிக் ஓசான் பெல்லிபியாவ் |
முன்னையவர் | மோனிக் ஓசான் பெல்லிபியாவ் (பொறுப்பு) |
பின்னவர் | மோனிக் ஓசான் பெல்லிபியாவ் (பொறுப்பு) |
தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் | |
பதவியில் 12 சூலை 2005 – 20 சூலை 2012 | |
முன்னையவர் | பிரேம் ராம்நாத் |
பின்னவர் | இரசாக் பீரோ |
மொரிசியசின் துணைப் பிரதம்ர் | |
பதவியில் 22 திசம்பர் 1997 – 17 செப்டம்பர் 2000 | |
பிரதமர் | நவின்சந்திரா ராம்கூலம் |
முன்னையவர் | பால் பெரெஞ்சர் |
பின்னவர் | பால் பெரெஞ்சர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராஜகேசுவர் புர்யாக் 12 திசம்பர் 1947 பிரித்தானிய மொரிசியசு |
அரசியல் கட்சி | மொரிசியசு தொழிலாளர் கட்சி |
துணைவர் | அனீத் புர்யாக் (1973– தற்போது வரை) |
பிள்ளைகள் | 1 |
சுயசரிதை
தொகுஇவர் 1947 திசம்பர் 12 அன்று மொரிசியசிலுள்ள கேம்ப் போக்ரூக்சில் பிறந்தார். இவர் ஒரு பீகாரி மொரிசியனாவார். இவரது மூதாதையர்கள் இந்திய மாநிலமான பீகாரில் இருந்து வந்தவர்கள். [6] இவர் சிறீ சம்புநாத் அரசுப் பள்ளியிலும் பின்னர் மொரிசியசுக் கல்லூரியிலும் பயின்றார். இவர் 1973 இல் வழக்கறிஞராக பதவியேற்றார். அதே ஆண்டு இவர் மொரிசிய தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். இவர் 1984 இல் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1995 இல் தலைவராகவும் ஆனார். [7] [8]
குறிப்புகள்
தொகு- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-05-29.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kailash Purryag becomes the fifth President of the Republic of Mauritius". KotZot. Archived from the original on 23 July 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ "Mauritius President Rajkeswur Purryag finds his ancestral roots in Bihar". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 16 January 2012.
- ↑ "I'm proud to be a Bihari, says Mauritius president". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-06-18. பார்க்கப்பட்ட நாள் 16 January 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ https://timesofindia.indiatimes.com/india/Im-proud-to-be-a-Bihari-says-Mauritius-president/articleshow/17918798.cms
- ↑ "Purryag for President" (in பிரெஞ்சு). defimedia. Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ "Dans l'intimité du couple présidentiel – Aneetah Purryag : " Je suis tombée amoureuse de Kailash au premier regard "" (in பிரெஞ்சு). defimedia. Archived from the original on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.