கொங்கு விரைவு தொடருந்து

12647 மற்றும் 12648 என்ற எண்களில் இந்திய ரெயில்வே துறையினரால் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரம் சந்திப்பு ஆகிய இரு நிலையங்களுக்கு இடையே வாரமொரு முறை இயக்கப்படும் தொடருந்து கொங்கு விரைவு தொடருந்து ஆகும். 2000 ம் ஆண்டு மார்ச் 3 ம் தேதி முதல் இந்த தொடருந்து இயக்கப்பட்டு வருகிறது.

கொங்கு விரைவு தொடருந்து
12647 Kongu Superfast Express at Malkajgiri
கண்ணோட்டம்
வகைவிரைவு தொடருந்து
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், டெல்லி யூனியன் பிரதேசம்
முதல் சேவைஏப்ரல் 3, 2000 (2000-04-03)
நடத்துனர்(கள்)தெற்கு ரயில்வே
வழி
தொடக்கம்கோயம்புத்தூர் நகரம் சந்திப்பு
இடைநிறுத்தங்கள்27
முடிவுநிஜாமுதீன் தொடர்வண்டி நிலையம்
ஓடும் தூரம்2,675 km (1,662 mi)
சராசரி பயண நேரம்47 மணி பத்து நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரம் ஒரு முறை
தொடருந்தின் இலக்கம்12647/12648
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)இரண்டாம் வகுப்பு ஈரோடுக்கு மற்றும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள் பொது பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்வசதி இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்56 km/h (35 mph) நிறுத்தங்களுடன் சராசரியாக
வழிகாட்டுக் குறிப்புப் படம்

பெயர்க்காரணம்

தொகு

கோவைதிருப்பூர்ஈரோடு,  சேலம்தருமபுரி ஆகிய மாவட்டங்களின் வழியாக இந்த தொடருந்து இயக்கப்படுகிறது. பழங்காலத்தில் கிழக்கில் தொண்டை நாடும், தென் கிழக்கில் சோழ நாடும் மற்றும் தெற்கே பாண்டிய நாடு ஆகியவற்றால் சூழப்பட்டு சேரர்களால் ஆளப்பட்ட இந்த மாவட்டங்கள் கொங்குநாடு (Kongu Nadu) அல்லது கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த மாவட்டங்களின் வழியாக இயக்கப்படும் இந்த தொடருந்து கொங்கு விரைவு தொடருந்து என பெயரிடப்பட்டது.

சேவைகள்

தொகு

இந்த கொங்கு விரைவு தொடருந்து ஒவ்வொரு புதன்கிழமைகளில் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையம், டெல்லியில் இருந்தும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரம் சந்திப்பில் இருந்துமாக வாரமொரு முறை இயக்கப்பட்டு வருகிறது. இதன் மொத்த பயணதூரம் 2716 கிலோ மீட்டராகும். அதனை சுமாராக 47 மணி நேரத்தில் கடக்கிறது.[1][2][3]

வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்

தொகு

2000 ம் ஆண்டு ஆரம்பித்த போது ஜோலார்பேட்டை மற்றும் ரேணிகுண்டா வழியாக இயக்கப்பட்ட இந்த தொடருந்து 2001ம் ஆண்டு முதல் பெங்களூரூ வழியாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. கோயம்புத்தூர் நிலையத்திலிருந்து ஆரம்பித்து பெங்களூரூ, காச்சிகுடா, நாக்பூர், போபால், குவாலியர், ஆக்ரா என 27 நிலையங்களைக் கடந்து நிஜாமுதீன் நிலையத்தை நான்கு நாட்கள் பயணித்து வந்து அடைகிறது.

பயணப்பெட்டிகளின் வடிவமைப்பு

தொகு

அதிகபட்ச வேகமான மணிக்கு 110 கிலோமீட்டரைத் தாங்கும் வகையில் இந்த தொடருந்தின் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருந்தின் பெட்டிகள், 12681 மற்றும் 12682 என்ற எண்களின் கீழ் தெற்கு ரெயில்வே துறையால் இயக்கப்படும் கோயம்புத்தூர்- சென்னை சென்ட்ரல் வாரயிறுதி தொடருந்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. ஈரடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட இரு பெட்டிகள், முன்பதிவு மற்றும் படுக்கை வசதி கொண்ட பதினான்கு பெட்டிகள், முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் மூன்று, இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டிகள் இரண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஒன்று என மொத்தம் 24 பெட்டிகளைக் கொண்டு கீழ்க்கண்ட வரிசையில் இணைக்கப்பட்டு இந்த தொடருந்து இயக்கப்பட்டு வருகிறது.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
  GRD GEN S1 S2 S3 S4 S5 S6 S7 S8 S9 S10 S11 S12 S13 S14 BE1 B1 A1 GEN GEN GRD

நாற்பத்து ஏழு மணி நேரம் பயணிக்கும் தொலைதூர பயணிகள் தொடருந்தாக இருப்பினும் மற்ற தொலைதூர தொடருந்தில் இருப்பது போல இந்த வண்டியில் சமையலறைப் பெட்டி இணைக்கப்படவில்லை. மாறாக வெவ்வேறு சந்திப்பு நிலையங்களில் நிறுத்தப்படும் போது பயணிகளுக்கான உணவுகளை ஏற்றி பரிமாறுகின்றனர்.

நேர அட்டவணை

தொகு
வண்டி எண் நிலையக் குறியீடு புறப்படும் நிலையம் புறப்படும் நேரம் புறப்படும் நாள் சேரும் நிலையம் சேரும் நேரம் சேரும் நாள்
12647 CBE கோயம்புத்தூர் 2:55 PM ஞாயிற்றுக்கிழமை நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையம் 2:15 PM செவ்வாய்க்கிழமை
12648 NZM நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையம் 8:35 AM புதன்கிழமை கோயம்புத்தூர் 9:15 AM வெள்ளிக்கிழமை

வண்டி எண் 12647

தொகு

'கொங்கு விரைவு தொடருந்து வண்டியானது கோயம்புத்தூர் சந்திப்பு தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் மதியம் 2.55 மணிக்கு இயக்கப்பட்டு பெங்களூரூ, காச்சிகுடா, நாக்பூர், போபால், குவாலியர், ஆக்ரா என 27 நிலையங்களை மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 47 மணி 20 நிமிடங்களில் ஹஸ்ரத் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்தை மூன்றாம் நாள் மதியம் 2.15 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2682 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தெற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[4]

வண்டி எண் 12648

தொகு

மறுமார்க்கமாக இந்த 12648 என்ற எண்ணைக் கொண்ட தொடருந்து வண்டியானது ஹஸ்ரத் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 08.35 மணிக்கு இயக்கப்பட்டு இருபத்தி ஏழு நிறுத்தங்களைக் கடக்க மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 48 மணி 40 நிமிடங்களில் கோயம்புத்தூர் சந்திப்பு தொடர்வண்டி நிலையத்தை வெள்ளிக்கிழமை காலை 09.15 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2675 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. http://etrain.info/in?TRAIN=12647
  2. http://etrain.info/in?TRAIN=12648
  3. "Indian Railways List of Trains : Kongu Express". Archived from the original on 2007-04-06.
  4. "12647 KONGU EXPRESS Train Route". erail.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  5. "12648 KONGU EXPRESS Train Route". erail.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கு_விரைவு_தொடருந்து&oldid=3734825" இலிருந்து மீள்விக்கப்பட்டது