கொடநாடு அபயாரண்யம் யானைகள் பயிற்சி மையம்

விலங்குகள் தங்குமிடம்

அபயாரண்யம் (Abhayaranyam) என்பது ஒரு விலங்குகள் தங்குமிடமாகும். ஒரு சிறிய விலங்குக் காட்சிச்சாலையான, இது கேரள அரசின் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. [1] எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துநாடு வட்டத்திலுள்ள கப்ரிகாடு கிராமத்திற்கு அருகில், இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொடநாடு யானைகள் பயிற்சி மையத்தில் உள்ள விலங்குகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், 2011ஆம் ஆண்டு இந்த தங்குமிடம் திறக்கப்பட்டது. [2] கொடநாடு யானைகள் பயிற்சி மையம் கேரளாவின் புகழ்பெற்றதும், மிகப்பெரிய யானை பயிற்சி மையங்களில் ஒன்றாகும். இது 1895 ஆம் ஆண்டு தொடங்கி மேலும் கேரளாவில் முதல் யானை பயிற்சி மையமாக இருந்தது [3] இந்த மையம் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தது. அங்கு விலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அனைத்து விலங்குகளும் படிப்படியாக 123 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட அபயாரண்யத்திற்கு மாற்றப்பட்டன. [4]

கொடநாடு அபயாரண்யம் யானைகள் பயிற்சி மையம்
கொடநாட்டிலுள்ள ஒரு இளம் யானை
Map showing the location of கொடநாடு அபயாரண்யம் யானைகள் பயிற்சி மையம்
Map showing the location of கொடநாடு அபயாரண்யம் யானைகள் பயிற்சி மையம்
அமைவிடம்கப்ரிகாடு எர்ணாகுளம், கேரளம், இந்தியா
அருகாமை நகரம்எர்ணாகுளம்
ஆள்கூறுகள்10°11′N 76°31′E / 10.18°N 76.51°E / 10.18; 76.51
பரப்பளவு123 ஹெக்டேர்கள்
நிறுவப்பட்டது1895 (யானை பயிற்சி மையம்
2011 (விலங்குகள் காப்பகமாகவும் யானைகள் பயிற்சி மையமாகவும் மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டது)
வருகையாளர்கள்ஒவ்வொரு ஆண்டும் 150,000 பேர் (in 2019)
நிருவாக அமைப்புகேரள வனத் துறை

வரலாறு

தொகு

கொடநாடு யானைகள் பயிற்சி மையம்

தொகு
 
கொடநாட்டில் உள்ள புகழ்பெற்ற ஆனைக்கூடு அதன் வளமான வரலாற்றை நினைவூட்டுவதாக உள்ளது

மலையாற்றூர் வனப் பகுதியில் 1895ஆம் ஆண்டு யானை வேட்டையாடுதலும் பயிற்சியும் தொடங்கப்பட்டது. திருவிதாங்கூர் அரசு வனப்பகுதியில் பிடிபட்ட யானைகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்த அதே ஆண்டில், பெரியாறு கரையில் அமைந்துள்ள கொடநாடு யானைப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. 1950 வாக்கில், இது கேரளாவின் மிகப்பெரிய யானை மையங்களில் ஒன்றாக மாறியது. காலப்போக்கில், நூற்றுக்கணக்கான பிற விலங்குகளும், பறவைகளும் இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும் இது ஒரு சிறிய மிருகக்காட்சிசாலையாக உருவாக்கப்பட்டது. யானைகளை அடக்கி கற்பிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பல யானைப்பாகங்கள் இங்கு இருந்தனர். 1977இல் இந்திய அரசு யானை வேட்டையாடுவதைத் தடை செய்தபோது, காடுகளில் இருந்து மீட்கப்பட்ட யானைகளுக்கு, காயம்பட்ட அல்லது மந்தையிலிருந்து பிரிக்கப்பட்ட யானைகளுக்கான மறுவாழ்வு மையமாக இது மாறியது.[5] பயிற்சி மையம் அருகிலுள்ள அபயாரண்யத்திற்கு மாற்றப்பட்டதால், கொடநாடு யானைகள் பயிற்சி மையம் செயல்படாமல் பின்னர் மூடப்பட்டது. தற்போது, இங்குள்ள பிரதான ஆனக்கூடு (யானை அடைப்பு ) அதன் வளமான வரலாற்றை நினைவூட்டுவதாக உள்ளது. [6] தற்போது, நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த இடத்தை பாரம்பரிய நினைவு சின்னமாக மாற்றுவது குறித்தும், யானைகள் குறித்த ஆராய்ச்சிக்கான புதிய மையம் தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இங்கு குட்டி யானைகளுக்கான மீட்பு மையம் திறக்க வேண்டும் என்றும் சில யானை பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[7]

அபயாரண்யம்

தொகு

கொடநாட்டில் விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தபோது, 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான விலங்குகளை வளர்ப்பது குறித்து விலங்கு ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கத் தொடங்கினர். யானைகளையும், பிற விலங்குகளையும் இருநூறு ஏக்கர் பரப்பளவில் உள்ள திறந்தவெளியில், விலங்குகளை பாதுகாப்பாக வைக்க சரியான வேலியுடன் தங்க வைக்கும் நோக்கத்துடன் 18 பிப்ரவரி 2011 அன்று அபயாரண்யம் திறக்கப்பட்டது.[8] அபயாரண்யம் திட்டம் ஒரு- சிறு விலங்குக் காட்சி சாலை- மறுவாழ்வு மையமாக தொடங்கப்பட்டது. மேலும், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இது ஆறு யானைகளும், 300க்கும் மேற்பட்ட மான்களும் வசிக்கும் இடமாக உள்ளது. [9] இந்த மையத்தில் கால்நடை மருத்துவமனை, பிணவறை, நீர் விநியோக நிலையம் போன்ற வசதிகளும் உள்ளன.

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "ആനകളും മാനുകളും കുളിര്‍ കാറ്റും... ഇതാ എറണാകുളത്ത് വണ്‍ഡേ ട്രിപ്പിന് പറ്റിയ സ്ഥലം". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2020-11-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  2. "Abhayaranyam Eco Tourism in Kerala | Eco tourism programmes in Ernakualm". www.keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  3. "കോടനാട് : കേരളത്തിലെ ഏറ്റവും വലിയ ആന പരിശീലന കേന്ദ്രങ്ങളില്‍ ഒന്ന്, അഭയാരണ്യം, കപ്രിക്കാട്, കേരള വിനോദ സഞ്ചാരം". Kerala Tourism (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  4. "സഞ്ചാരികളേ സ്വാഗതം: അഭയാരണ്യം വീണ്ടും തുറന്നു". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  5. "Abhayaranyam, an ideal weekend getaway from Ernakulam". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  6. "അഭയാരണ്യത്തിലും ആനക്കളരിയിലും വികസന പദ്ധതികള്‍". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  7. രമേഷ്, പി. "പ്രയോജനപ്പെടുത്താം, കോടനാടിന്റെ ഹരിതസാധ്യതകള്‍". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  8. "കോടനാട് ആനക്കളരി അഭയാരണ്യത്തിലേക്ക് മാറ്റുന്നു". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
  9. "Kerala: Cleanliness project to turn elephant dung into manure". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.