கொடிக்கவி

14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று.

கொடிக்கவி, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். தில்லை எனப்படும் சிதம்பரத்தில் கொடியேற்றுவதற்காகப் பாடப்பட்டதனால் இதற்குக் கொடிக்கவி என்னும் பெயர் ஏற்பட்டது. மிகச் சிறிய நூலாக இருந்தபோதும் சைவ சித்தாந்தத்தின் உட்கருத்தை விளக்குவதாக இது அமைந்துள்ளது.

உசாத்துணைகள் தொகு

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • உமாபதி சிவாச்சாரியார், நெஞ்சுவிடு தூது பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

மதுரைத் திட்டம் பக்கத்தில் கொடிக்கவி பரணிடப்பட்டது 2008-02-27 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடிக்கவி&oldid=3241801" இலிருந்து மீள்விக்கப்பட்டது