கொடுவாய் நாகேஸ்வரர் சுவாமி கோவில்

கொடுவாய் நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவில் (Nageswaraswami temple, Koduvai) என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் கொடுவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும்.

நாகேஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:திருப்பூர், கொடுவாய், திருப்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பூர்
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:நாகேஸ்வரர்
தாயார்:கோவர்த்தனாம்பிகை
உற்சவர்:சிவன்
உற்சவர் தாயார்:பார்வதி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை
வரலாறு
கட்டிய நாள்:பதினொன்றாம் நூற்றாண்டு

ஆலய வரலாறு

தொகு

சுமார்1200 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் கண்பார்வையற்றவர் வாழ்ந்தார். இவருக்கு பிறவியிலேயே பார்வையில்லை. காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகம்பரநாதர் மீது ஆழ்ந்த இறை பக்தி கொண்டவர். தினமும் ஏகம்பரநாதர் ஆலயம் சென்று இறைவனை வணங்கி தனக்கு பார்வை கிடைக்க அருள் புரிய வேண்டும் என வேண்டி வந்தார். இவருடைய வேண்டுதலை ஏற்று ஒரு கண்ணிற்கு பார்வை வழங்கி மற்றொரு கண்ணை கொடுவாயில் கோவர்த்தனாம்பிகை உடன் நாகேஸ்வர் என பெயரால் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை வழிப்பட்டால் பார்வை கிடைக்கும் என அருள்பாலித்தார்.அவ்வாறே வழிபட்டு பார்வை பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.[2]

மேற்கோள்

தொகு
  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "Nageswaraswami Temple : Nageswaraswami Nageswaraswami Temple Details | Nageswaraswami- Koduvai | Tamilnadu Temple | நாகேஸ்வரசுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-04.