கொடுவாள் பூனை
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
கொடுவாள் பூனை | |
---|---|
மறுஉருவாக்கம் செய்யப்பட்ட S.populator இன் படம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: |
கொடுவாள் பூனை (saber-toothed tiger) முற்றும் அழிந்து போன வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய ஒரு விலங்கு (pre-historic animal). இவை கொடுவாள் புலி என்று தவறாக அறியப்படுகின்றன. இவற்றுள் பூனைக் குடும்பத்தில் உள்ள 3 துணைக்குடும்பங்களும் பைப்பாலூட்டிகளோடு தொடர்புடைய 2 குடும்பங்களும் அடக்கம்.
பண்புகள்
தொகுஇவற்றின் மேல்த்தாடையில் (Maxilla) உள்ள கோரைப் பற்கள்(canine teeth) இரண்டும் கொடுவாள் போல நீண்டுள்ளன. வாயை மூடினாலும் இப்பற்கள் வெளியே நீண்டு தெரியும். இவை கம்பளி யானை போன்ற இதர வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்குகளைக் கொன்று தின்னதாக நம்பப்படுகிறது.
கண்டறிதல்
தொகுடென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் பீட்டர் வில்ஹம் லுண்ட் என்பவர் 1841 இல் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உள்ள சிறு நகரின் குகையில் சி.பாப்புலேட்டர் சிற்றினக் கொடுவாள் பூனை ஒன்றின் தொல்படிமத்தை முதன் முதலாய்க் கண்டறிந்தார்.
அழிவு
தொகு42 மில்லியன் ஆண்டுகாலம் இப்புவியில் வாழ்ந்திருந்த இவ்வுயிரிகள் கி.மு. பத்தாயிரமாம் ஆண்டு வாக்கில் இவை அழிந்ததாய் அறியப்படுகிறது[1][2][3]. இக் காலகட்டத்தில் தான் இதர வரலாற்றுக்கு முந்தைய பெரிய விலங்குகளும் அழிந்தன. இவற்றின் அழிவுக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. மனிதர்களால் நிச்சயமாக இவை அழிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவ்விலங்கு வரலாற்றுக்கு முந்திய கால மனிதனின் கொடுங்கனவாக (nightmare) இருந்தது அவனுடைய குகை ஓவியங்களில் புலனாகிறது. பனி ஊழி முடிவினால் ஏற்பட்ட மாற்றங்கள் இவ்விலங்கின் அழிவைத் தூண்டியிருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
படக்காட்சியகம்
தொகு-
மனித உயரத்துடன் ஒப்புமை
-
S.fatalis
-
சிலை வடிவில்
-
முழு எலும்புக்கூடு
-
தலை மற்றும் கழுத்தெழும்பு
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- முற்றிலும் அழிந்துபட்ட பூனைகள் பரணிடப்பட்டது 2008-03-21 at the வந்தவழி இயந்திரம்