கொடைக்கானல் வரலாறு

கொடைக்கானல் (Kodaikanal) இந்தியாவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமும் நகரமும் ஆகும்.[1]  கொடைக்கானலின் தொடக்க காலம் முதலே குடியிருந்து வருபவர்கள் பளியர் இன மக்களேயாவர். சங்க இலக்கியங்களில் மிகவும் முந்தைய காலத்தில் கொடைக்கானல் மற்றும் பழனி மலைகள் தொடர்பான தனிப்பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன.[2]

1821 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் பி. எஸ். வார்டு, என்ற பிரித்தானிய நில அலவையாளர், கொடைக்கானலுக்கு வருகை தந்த முதலாவது ஐரோப்பியராவார். 1834 ஆம் ஆண்டில், மதுரை ஆட்சியர் தேவதானப்பட்டியிலிருந்து ஏறி, கொடைக்கானலில் ஒரு சிறிய பங்களாவைக் கட்டினார். 1863 ஆம் ஆண்டில், மதுரை ஆட்சியர் சர் வேர் ஹெண்டி லீவினி, கொடைக்கானலில் ஏரி ஒன்றை 60 ஏக்கர் நிலத்தில் உருவாக்கினார். இதற்காக இப்பகுதியில் ஓடிய நீரோடைகளை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரியாக மாற்றினார். அவர் துாத்துக்குடியிலிருந்து இந்த ஏரியில் சவாரி செய்வதற்கான முதல் படகுகளையும் கொண்டு வந்தார். 1890 ஆம் ஆண்டில் கொடைக்கானலில் படகு மன்றம் ஒன்று அமைக்கப்பட்டது.[3] நவீன கால கொடைக்கானலானது அமெரிக்க சமய பரப்புக்குழுவினர்களால், சமவெளிப் பகுதிகளில் உள்ள உயர் வெப்பநிலையிலிருந்தும், அயனமண்டல நோய்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் பொருட்டு 1845 ஆம் ஆண்டு ஒரு மலை வாழிடமாக உருவாக்கப்பட்டது.[4]

20 ஆம் நூற்றாண்டில் ஒரு சில உயர்குடி இந்தியர்கள் இந்த இடத்தின் அழகான இயற்கையை இரசிக்க வந்தனர். அவர்கள் இந்த இடத்தை மறுசீரமைப்பு செய்தனர். கொடைக்கானல் சில நேரங்களில் மலை வாழிடங்களின் இளவரசி என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைவிடத்தின் பொருளாதாரம் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு பணிபுரியும் விருந்தோம்பல் துறை சார்ந்ததாகவே உள்ளது.[5]

கொடைக்கானல் பஜார் சாலை,
(அன்னை சாலை), 1910

பண்டைய காலம்

தொகு
 
ஓவியர் ராஜா ரவி வர்மாவால் வரையப்பட்ட முருகக் கடவுள்

தொல்லியல் சார்ந்த ஆய்வாதாரங்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே மனிதர்கள் குடியேற்றம் இருந்திருந்ததாக கூறுகின்றன. தொடக்க சேரர் கால பெருங்கற்கால கல்திட்டைகள். மண்பாண்டங்கள் மற்றும் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் கொடைக்கானலில் தொடக்க கால குடியிருப்பு வாசிகள் பளியர் இன பழங்குடி மக்கள் என்பதை நிரூபிக்கின்றன. சில உள்ளூர் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், பளியர் இன மக்களின் எச்சங்கள் ஆகியவற்றை செண்பகனூர் அருங்காட்சியகத்தில் காண முடியும்.[6]

தொடக்க கால கிறித்தவ சகாப்தத்திற்கு முன்னதாக கொடைக்கானல் மற்றும் பழனி மலைகள் இருந்ததற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.[2] பழந்தமிழ் கவிதை நூலான குறுந்தொகை, பாடல் திரட்டு வரிசையில் இரண்டாவது நூலான எட்டுத்தொகை ஆகியவை காதலையும் பிரிவையும் பற்றி கையாள்கின்றன. இவ்விலக்கியங்களில் குறிஞ்சித்திணை பற்றிய வருணனைகள் இடம் பெறுகின்றன. காதலர்கள் இரவில் சந்திக்கும் இடங்களைப் பற்றிய வருணனையில் ஏரிகளுடன் கூடிய காடு, அருவிகள், தேக்கு, மூங்கில், சந்தன மரங்கள் ஆகியவை சூழ்ந்த மலைப்பகுதிகளாக உள்ளன.

இத்தகைய பின்னணியில் முருகன், மற்றும் அவரது துணைவி வள்ளி, (குறிஞ்சி மலைவாசியினுடைய தேன் சேகரிக்கும் மகள்) இவர்களின் காதலால் முன்னுதாரணக் காதலாக உள்ளது. முருகனின் வாகனமாக மலைப் பறவையான இந்திய மயில் குறிப்பிடப்படுகிறது. இந்த இடத்தின் பெயரான, குறிஞ்சி என்பது, தமிழ் தேசத்தின் உயர்ந்த மலைகளில் மட்டுமே காணப்படும் குறிஞ்சிப்பூவின் பெயரிலிருந்து வருவிக்கப்பட்டதாக உள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. city definition: Town#India
  2. 2.0 2.1 Mitchell Nora, Indian Hill Station: Kodaikanal, University of Chicago, Dept. of Geography, Kodaikanal Sangam, p97, 1972 Original from the University of California Digitized 28 Jan 2008
  3. http://www.kodaikanal.com/
  4. Mitchell Nora, Indian Hill Station: Kodaikanal, University of Chicago, Dept. of Geography, ch 2, Rational for Tropical Hill Stations, pp13-15, 1972. Original from the University of California Digitized 28 Jan 2008
  5. Tamil Nadu Tourism Development Corporation and Department of Tourism, Kodaikanal Princess of Hill Stations[தொடர்பிழந்த இணைப்பு]
  6. http://travelincredibleindia.blogspot.in/2007/07/kodaikanal-tamil-word-kodaikanal-which.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடைக்கானல்_வரலாறு&oldid=3028063" இலிருந்து மீள்விக்கப்பட்டது