கொட்டாக்குளம்

கொட்டாகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம். இங்கு வயல்வெளிகள், தென்னந்தோப்புகள் , மாந்தோப்புக்கள் அதிகமாக உள்ளன. தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர், குற்றாலத்தில் இருந்து 4 கிலோமீட்டர், செங்கோட்டையில் இருந்து 3 கிலோமீட்டர். இந்த 3 நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இந்த கிராமம். திருநெல்வேலியை மாவட்டதில் செங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.

கொட்டாக்குளம்
—  நகரம்  —
கொட்டாக்குளம்
இருப்பிடம்: கொட்டாக்குளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°57′58″N 77°16′22″E / 8.966111°N 77.272778°E / 8.966111; 77.272778
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 3,600 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இந்த கிராமத்திருக்கு மற்றொறு பெயர் உண்டு அது சுமைதீர்ந்தபுரம். இந்த பெயர் வர காரனம் இங்கு சாலை பகுதியில் பயணிகள் உட்காருவதற்கு ஆங்காங்கு கற்களால் ஆன இருக்கைகள் வைக்க பட்டிருக்கும். அந்த காலத்தில் நடந்து செல்லும் பயணிகள் இந்த கற்களில் அமர்ந்து செல்வர். அவர்களின் சுமையை குறைத்த காரணத்தினால் இதற்கு இந்த பெயர் வந்தது. (கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தை சுக பிரசவமாக பிறப்பதற்காக இக்கல் வைக்க பட்டதாக கூறுவார்கள்) கொட்டாகுளம், வல்லம் கிராமத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து சுமைதீர்ந்தபுரம் என்ற ஊராட்சியாக இருந்து வருகிறது. மேலும் 6 வார்டுகள் உள்ளன. இவ்வூராட்சியின் தலைமையிடமாக கொட்டாகுளம் இருந்து வருகிறுது. இங்குதான் ஊராட்சி அலுவலகம், நுகர்வோர் அங்காடி, நூலகம் , அஞ்சல் அலுவலகம், சமுதாய நல கூடம் ஆகியவை இருந்து வருகிறது. கிராம நிர்வாக அலுவலகம் வாஞ்சி நகரில் அமைந்துள்ளது. கொட்டாகுளத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் சிற்றாறு இந்த கிராமத்தின் வழியாக பாய்கிறது. இங்கு ஒரு சிறிய அணைகட்டு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் பகுதிகள் வண்ணாந்துறை, பூசதுறை என்ற பெயரால் மக்களால் அழைக்க படுகிறது. மேலும் இங்கு இரண்டு குளங்கள் உள்ளன அவை மேல குளம், கீழ குளம். இதில் மேல குளம் ஊரின் வடக்கு திசையில் உள்ளது. கீழ குளம் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ளது.

இங்கு பல கோவில்கள் அமைந்துள்ளன. அவை இரண்டு சிற்றாற்று வீரியம்மன் திருக்கோவில்கள் , இசக்கியம்மன் திருக்கோவில், இரண்டு பிள்ளையார் கோவில்கள், சுடலை மாடசாமி திருக்கோவில , இரண்டு காளியம்மன் திருக்கோவில்கள் , ஆற்றோரத்தில் அமைந்துள்ள சீவலப்பேரி சுடலை மாடசாமி திருக்கோவில், மேலும் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள மற்றொறு சீவலப்பேரி சுடலை மாடசாமி திருக்கோவில், கிருஷ்ணன் திருக்கோவில் ஆகியவை இங்குள்ள கோவில்களாகும். மேலும் இங்கு கிருஸ்தவ ஆர்.சி.தேவாலயமும் உள்ளது. கீழ குளக்கரையில் ஒரு மசூதியும் அமைந்துள்ளது. இங்குள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு சமுதாயத்தை சார்ந்த கோவில்களாக உள்ளன. இங்குள்ள இசக்கியம்மன் திருக்கோவில் மிக பிரசித்தி பெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அம்மனை இங்கு வந்து வழிபாடுகிறார்கள். இவ்வூரில் சிற்றாற்று வீரியம்மனுக்கு நடைபெறும் திருவிழாவில் வெள்ளாளர்(பிள்ளை), தேவர் மண்டகபொடி சிறப்பாக இருக்கும். இவ்வூரில் அம்மன் பெயரில் பலருக்கு, பெயர் வைக்கின்றனர் எ.கா இசக்கிமுத்து, இசக்கியம்மாள்.

இங்கு இந்துக்கள் அதிக அளவு வசிக்கிறார்கள். அதற்கு அடுத்தாக கிருஸ்தவர்கள் இருகிறார்கள். இந்த இரண்டு மதத்தினர் மட்டும் இங்கு அதிக அளவு உள்ளனர். மேலும் இங்கு வெள்ளாளர்(பிள்ளை),தேவர்(மறவர்), சேனைத்தலைவர், யாதவர், நாடார், மற்றும் தலித் சமுதாய மக்கள் வசித்து வருகின்றார்கள். கிறிஸ்தவர்களில் ஆர்.சி. பிரிவை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றார்கள். இங்கு குஜராத்திகளும் சிலர் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் அணைத்து இந்து பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுவார்கள். குறிப்பாக தீவாளி,பொங்கல் பண்டிகைகளை நன்றாக கொண்டாடுவார்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சிலை வைத்து வழிபடுவார்கள். கோவில் திருவிழா பல்வேறு சமுதாய மக்களால் நடத்த படுகிண்றது. திருவிழாவின் பொழுது இங்கிருந்து வெளியே சென்று வெளியூர்களில் வசிப்பவர்கள் திருவிழாவிற்கு வந்துவிடுவார்கள். இங்கு நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும், இலஞ்சி குமரர் கோவிலிலும் , பிரானூர்-பார்டர் கிருஷ்ணபவன் திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது. சில சமுதாயத்தினர் திருமணம் காளியம்மன் திருமண மண்டபத்திலும் நடை பெருகின்றது. மேலும் இங்குள்ள சமுதாய நல கூடத்திலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இங்குள்ள மக்கள் மத, சாதி வேற்றுமைகளை கடந்து ஒற்றுமையாக தற்பொழுது வாழ்ந்து வருங்கின்றனர். கடந்த காலங்களில் (2000-2003) இங்கு ஜாதி மோதல்கள் நடந்துள்ளன. ஆனால் தற்பொழுது இல்லை. இங்கு சில சமுதாய மக்கள் அவர்களுக்கென்று தனி சமுதாய அமைப்புகளை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்ந்து வருங்கின்றனர்.

இங்குள்ள முக்கிய தெருக்களாக பிள்ளையார் கோவில் தெரு, நாடார் தெரு, சுடலைமாடசாமி கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆர். சி. காலனி ஆகியவை உள்ளன . கொட்டாகுளத்தில் இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று ஆர். சி துவக்கபள்ளி. இங்குள்ள மக்களில் அதிகம் பேர் இங்கு பயின்றவர்களாக உள்ளனர். இப்பள்ளிதான் ஆரம்பகாலத்தில் இருந்து இங்கு அமைந்துள்ளது. இங்கு பயின்ற மாணவர்கள் தற்பொழுது மருத்துவராகவும் , பொறியாளராகவும் , அரசியல்வாதியாகவும் உள்ளனர். மற்றொறு துவக்க பள்ளியாக பீஷ்மா துவக்க பள்ளியும் இங்கு அமைந்துள்ளது. மேலும் இங்கு அரசால் இயக்க படும் குழந்தைகளுக்கான சத்துணவு கூடமும் அமைந்துள்ளது. இங்கு ஐந்து வயதிற்குட்பட்ட ஏழை குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு வழங்கபடுகின்றது.

இங்குள்ளவர்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் இருக்கிறது. மற்றொறு முக்கிய தொழிலாக மரஅறுவை மில்களில் வேலை பார்த்தல் இருக்கிறது. இங்கு மர அறுவை மில்கள் உள்ளன. அவற்றில் பல குஜராத்திகளால் இயக்க பட்டு வருகின்றது. இங்குள்ள பெண்களில் அதிகமானோர் பீடி சுற்றுகிறார்கள். பீடி சுற்றுதல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொழிலாகும். மாடு மேய்த்தல் தொழிலும் இங்கு இருக்கிறது. மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டமான ஊரக வேலைவாய்ப்புதிட்டத்தின் கீழ் அதிக அளவு மக்கள் வேலை பார்க்கின்றனர். மேலும் இங்குள்ள மக்கள் கேரளா மற்றும் பம்பாய்க்கு தொழிலாளர்களாக சென்று வேலை செய்கிறார்கள்.

இங்கு நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் உள்ளன. திருமங்கலம்-கொல்லம் நெடுஞ்சாலைக்கு வலது புறம் நன்செய் நிலமாக ( வயல்வெளிகளாகவும், தென்னந்தோப்புகளாகவும்) இடது புறம் புன்செய் நிலமாக ( விளங்காடு, தென்னதோப்பு ) உள்ளது. தற்பொழுது விளங்காடு அளிக்கபட்டு முற்றிலுமாக குடியிருப்புகளாக மாறி விட்டன. சிற்றாற்று வீரியம்மன் திருக்கோவிலுக்கு இடது புறம் உள்ள வயல்வெளிகளும் தற்பொழுது குடியுருப்பு நிலங்களாக மாறி வருகின்றது. இங்கு மேல பேருந்துநிறுத்தம், கீழ பேருந்துநிறுத்தம் என இரண்டு பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ளன. கொல்லம்-திருமங்கலம் சாலையில் கிராமம் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் சில நகர பேருந்துகள் SAT, 11, 11a, 11b, 20. வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமென்றால் தென்காசி சென்று அங்கிருந்து மாறி செல்லலாம். இக்கிராமம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் சீதோஷண நிலை நன்றாகவே இருக்கும். மே முதல் அக்டோபர் வரை மேற்கு தொடர்ச்சி மழை பரவலாக பெய்யும்.

இங்கிருந்து முக்கிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களுக்கான தொலைவு.

  • தென்காசி பேருந்து நிலையம் – 05 கி. மீட்டர்
  • செங்கோட்டை பேருந்து நிலையம்- 03 கி. மீட்டர்
  • திருநெல்வேலி பேருந்து நிலையம் – 55 கி. மீட்டர்
  • தென்காசி ரயில் நிலையம் – 04 கி. மீட்டர்
  • செங்கோட்டை ரயில் நிலையம் – 04 கி. மீட்டர்
  • திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் – 105 கி. மீட்டர்
  • தூத்துக்குடி விமான நிலையம் – 110 கி. மீட்டர்
  • மதுரை சர்வதேச விமான நிலையம் – 165 கி. மீட்டர்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டாக்குளம்&oldid=2987808" இலிருந்து மீள்விக்கப்பட்டது