கொண்டை உழவாரன்

கொண்டை உழவாரன்
Crestedtreeswift.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Apodiformes
குடும்பம்: Hemiprocnidae
பேரினம்: Hemiprocne
இனம்: H. coronata
இருசொற் பெயரீடு
Hemiprocne coronata
(Tickell, 1833)

கொண்டை உழவாரன் (Hemiprocne coronata; Crested treeswift) என்னும் ஒரு வகையான உழவாரக் குருவி அல்லது உழவாரன் (Swift) பறவையானது அபோடிடே (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்குத் தூக்கணாங்குருவி போன்று காணப்படும், ஆனால் இது பறந்து கொண்டே அதன் உணவைப் பிடிக்கும் பழக்கம் கொண்டது.

பார்ப்பதற்குக் கொஞ்சம் ரீங்காரப்பறவை போன்றுகாணப்பட்டாலும் ஹெமபிரிசிடி (Hemiprocnidae) என்ற ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தது. கொண்டையுள்ள உழவாரன் 23 செமீ (9 அங்குலம்) நீள முள்ள ஒரு பெரிய மெல்லிய பறவை ஆகும். இந்த வகை இனங்கள் மேற்புறம் புறா போன்ற சாம்பல் நிறத்திலும், கீழே வெள்ளை நிறத்திலும் உள்ளது. இதன் நீண்ட இறக்கைகள் ஒரு இருண்ட சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆண் பறவையானது பக்கவாட்டில் ஆரஞ்சு நிற முகம் கொண்டது. இந்த இனங்களின் அழைப்பு ஒரு கடுமையான ஒலி அலைப்பு உடையது.

பரம்பல் மற்றும் வாழ்விடம்தொகு

அது இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், சீனா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவை வெளிப்படையான வனப்பகுதி மற்றும் இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றன. இவை இந்தியாவில் பொதுவாக திறந்தவெளி சுற்றுச்சூழல்களில் காணப்படுகின்றன. பெரும்பாலும் பறவைகள் இவை 365 மீ (1,198 அடி) மேற்பட்ட உயரத்தில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றன. கொண்டையுள்ள உழவாரன் மரத்தின் கிளைகளில், ஒரு சிறிய கூடு கட்டி, சமயத்தில் ஒரே ஒரு நீல நிற முட்டை இடுகிறது , ஆண், பெண் பறவைகள் இருபாலரும் அடைகாப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_உழவாரன்&oldid=2477087" இருந்து மீள்விக்கப்பட்டது