கொனார்க் நடன திருவிழா

ஒடிசா மாநிலம் கொனார்க்கில் நடைபெறும் நடன விழா

கொனார்க் நடன திருவிழா (Konark Dance Festival) என்பது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதம் 1 முதல் 5 வரை இந்தியாவில் ஒடிசாவில் உள்ள கொனார்க்கில் உள்ள சூரிய கோவிலின் பின்னணியில் நடைபெறும் ஐந்து நாள் நடன விழா ஆகும். இது ஒடிசாவில் நடைபெறும் மிகப்பெரிய நடன விழாக்களில் ஒன்றாகும்.[2]

கொனார்க் நடன திருவிழா
Konark Dance & Music Festival
நிகழ்நிலைசெயலில்
வகைபண்பாட்டு விழா
காலப்பகுதிவருடாந்திர
நிகழ்விடம்கொனார்க் நாட்டிய மண்டபம்
அமைவிடம்(கள்)கொனார்க், ஒடிசா
ஆள்கூறுகள்19°53′46″N 86°05′01″E / 19.896176°N 86.083599°E / 19.896176; 86.083599
நாடுIndia
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1986
துவக்கம்1986
நிறுவனர்குரு கங்காதர பிரதான்
மிக அண்மையதிசம்பர் 1, 2020 (2020-12-01) – 5 திசம்பர் 2020 (2020-12-05) [1]
செயல்பாடுஇந்திய பாரம்பரிய நடனம்
புரவலர்கள்ஒடிசா சுற்றுலா
ஒடிசா ஆய்வு மையம்
மக்கள்கேலுசரண் மொகாபத்ரா
வலைத்தளம்
konarkfestival.com

நிகழ்விடம்

தொகு

இந்த ஆலயத்தின் நேர்த்தியான 'சாலமண்டர்' அல்லது 'நடன மண்டபம்' ஒரு கட்டிடக்கலை அதிசயம். இதன் சுவர்களின் ஒவ்வொரு அங்குலமும் பழங்காலத்தின் சிறந்த கலை வடிவமைப்புகளால் செதுக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்கள் செவிப்பறைகள், சங்குகள் மற்றும் பிற இசைக்கருவிகளை வாசித்து ஒடிசி நடனமாடி அலங்கரிக்கின்றனர்.[3]

பங்கேற்பு

தொகு

நாடு முழுமையிலுமிருந்து பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் இந்த அரங்கில் நடனமாடுகிறார்கள். 1986ஆம் ஆண்டு முதல், இந்த திருவிழாவை ஒடிசா சுற்றுலா[4] மற்றும் ஒடிசி ஆராய்ச்சி மையம்[5] இணைந்து மாநிலத்தில் பல்வேறு இந்திய நடன பாரம்பரியத்தை மேம்படுத்துவதோடு, கொனார்க் கோயில் மற்றும் ஒடிசாவை ஒரு சுற்றுலாத் தலமாகப் பிரபலப்படுத்தவும் ஏற்பாடு செய்கின்றன.[6]

மணற்சிற்ப விழா

தொகு

இதனுடன், இதே காலகட்டத்தில், பன்னாட்டு மணல் கலை விழாவும் நடைபெறுகிறது.[7]

மணல் திருவிழா திறமையான மணல் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மணல் சிற்பங்களைக் கொண்டாடுகிறது. பாரம்பரிய மணல் சிற்பங்கள் மட்டுமல்ல, திறமையான மணல் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மணல், கல், வெண்கலம் அல்லது மரம் ஆகியவற்றையும் இத்திருவிழாவின்போது காணலாம். பன்னாட்டு மணல் கலைஞர் திருவிழா இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த மணல் கலைஞர்களின் கண்கவர் காட்சிகளைக் கொண்டாடுகிறது. இந்த விழாவில் 30 இந்திய மற்றும் 10 வெளிநாட்டுக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மெக்சிகோ, ஸ்பெயின், சிங்கப்பூர், பிரான்ஸ், நார்வே, செருமனி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறந்த மணல் கலைஞர்கள் இந்தியாவின் பல்வேறு பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் மணற் கலைஞர்கள் சந்திரபாகாவின் தங்கக் கடற்கரையை அலங்கரிக்கின்றனர்.

இந்தியாவின் ஒடிசா மாநிலம் கொனார்க், புரியிலிருந்து சிறிது தொலைவில் உள்ள சந்திரபாகா கடற்கரையில் பன்னாட்டு மணல் கலை விழா 2015-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், கலைஞர்களுக்கான கருப்பொருளாகப் பூமியின் வளர்ந்து வரும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களை வடிவமைக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Five-day Konark festival begins with Odissi, Kathak traditional dance performances in Odisha". Gov Webcast. 2020-12-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  2. "Konark Festival | Odisha Tourism". odishatourism.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-09-20. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  3. Nayak, Prakash. "Konark Dance & Music Festival". konarkfestival.com.
  4. "Odisha Tourism". www.odishatourism.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2016-12-23. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
  5. "Welcome to Guru Kelu Charan Mohapatra Odissi Research Centre". www.odissiresearchcentre.org.
  6. "Orissa CM Naveen Patnaik inaugurates 21st Konark Dance Festival, Orissa Current News". Archived from the original on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2011.
  7. "Odisha Tourism : International Sand Art Festival". odishatourism.gov.in. Archived from the original on 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனார்க்_நடன_திருவிழா&oldid=4110491" இலிருந்து மீள்விக்கப்பட்டது