கொமொரோசு பச்சைப் புறா

கொமொரோசு பச்சைப் புறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. தெய்சுமானீ
இருசொற் பெயரீடு
தெரெரான் தெய்சுமானீ
பென்சன், 1960

கொமொரோசு பச்சைப் புறா (Comoro green pigeon)(தெரெரான் கிரிவௌடி)[2] கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது மடகாசுகர் பச்சைப் புறாவினை (தெரெரான் ஆசுடிராலிசு) ஒத்த இனமாக இருப்பதாக முன்னர் கருதப்பட்டது.

புவியியல் வரம்பு

தொகு

தெரெரான் கிரிவௌடி தற்போது கொமொரோசுவில் உள்ள மாவாலி தீவிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இருப்பினும் இது கடந்த காலத்தில் காசிதிஜா மற்றும் நுசுவானியில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

வாழ்விடம்

தொகு

கொமொரோசு பச்சைப் புறா, பசுமையான காடுகளிலும், இரண்டாம் நிலை காடுகளிலும், உயரமான இடங்களில் தென்னந் தோட்டங்களிலும் காணப்படுகிறது.

பாதுகாப்பு

தொகு

சட்டப்பூர்வமாக கொமொரோசு பச்சைப் புறாக்கள் பாதுகாக்கப்பட்ட போதிலும், வேட்டையாடுதல் இன்னும் நடைபெறுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் வாழ்க்கைக்குப் பொருத்தமான காடுகள் தீவின் 5% பகுதியில் மட்டுமே உள்ளது. எலிகள் போன்ற அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் முட்டைகளை வேட்டையாடுபவையாக உள்ளன. இதன் எண்ணிக்கை 2,500க்கும் குறைவானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Treron griveaudi". IUCN Red List of Threatened Species 2016: e.T22728176A94973134. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22728176A94973134.en. https://www.iucnredlist.org/species/22728176/94973134. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Pigeons". International Ornithological Congress. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமொரோசு_பச்சைப்_புறா&oldid=4054332" இலிருந்து மீள்விக்கப்பட்டது