கொமோடோ இந்தோனேசிய விலங்குகள் அருங்காட்சியகம் மற்றும் ஊர்வன பூங்கா

இந்தோனேசிய அருங்காட்சியகம்

கொமோடோ இந்தோனேசிய விலங்குகள் அருங்காட்சியகம் மற்றும் ஊர்வன பூங்கா (Komodo Indonesian Fauna Museum and Reptile Park) (இந்தோனேசிய மொழி: Museum Fauna Indonesia Komodo dan Taman Reptilia), இந்தோனேஷியாவில் கிழக்கு ஜகார்த்தாவில் அமைந்துள்ள தாமான் மினி இந்தோனேஷியா இந்தா வளாகத்தில் உள்ள ஒருவிலங்கியல் அருங்காட்சியகம் ஆகும். இந்தோனேசியாவின் விலங்குகளின் பன்முகத்தன்மை பற்றிய தகவல்களையும் தொடர்பானவற்றைம் வழங்குவதற்காக, குறிப்பாக இந்தோனேசியாவின் உள்ளூர் பகுதியில் வாழ்கின்ற, ஒரு குறிப்பிட்ட பூகோள பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரினத்தைப் பற்றிய சேகரிப்புகளை வழங்குவதில் இந்த அருங்காட்சியகம் நிபுணத்துவம் பெற்று அமைந்துள்ளது.[1] கொமோடோ விலங்குகள் அருங்காட்சியகம் தாமன் மினி இந்தோனேசியா இந்தா கலாச்சார பூங்காவின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது.

கொமோடோ இந்தோனேசிய விலங்குகள் அருங்காட்சியகம்
Museum Fauna Indonesia Komodo
கொமோடோ இந்தோனேசிய விலங்குகள் அருங்காட்சியகத்தின் முதன்மைக் கட்டடம்
Map
நிறுவப்பட்டது20 ஏப்ரல் 1978
அமைவிடம்தாமான் மினி இந்தோனேசியா இந்தா, ஜகார்த்தா, இந்தோனேசியா
வகைஇயற்கை வரலாற்று விலங்கியல் அருங்காட்சியகம்
வலைத்தளம்Museum Fauna Indonesia Komodo & Taman Reptil

இந்த அருங்காட்சியகம் "கொமோடோ அருங்காட்சியகம்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தின் முதன்மைக் கட்டிடத்தின் வடிவமைப்பானது கொமோடோ டிராகனின் வடிவத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அவ்வகையான டிராகன் இந்தோனேசிய தீவான கொமோடோ தீவில் காணப்படுகின்ற மிகப் பெரிய உயிரினமான ஒரு பெரிய வகைப் பல்லியாகும்.[1]

சேகரிப்பு

தொகு
 
காப்பாளருடன் வருகை தரும் பார்வையாளர்கள் செல்லப்பிராணிகளுடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் வாழ்கின்ற பல விலங்குகளின் வாழ்விடங்களைப் பற்றிய டியோராமா இந்த அருங்காட்சியகத்தில் திரையிடப்படுகிறது. மேலும் பாடம் செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் எலும்புக்கூடுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு வாக்கில், இந்தோனேசிய தீவுக்கூட்டத்தினைச் சேர்ந்த ஊர்வன மற்றும் நீர்வாழ் மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உடல் மற்றும் எலும்புக்கூடுகளின் தொகுப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகத்தின் முதன்மைக் கட்டிடத்தை சுற்றி அமைந்துள்ள பூங்கா ஒரு ஊர்வன பூங்காவின் தளமாகக் காட்சியளிக்கிறது. இது ஒரு சிறிய மினி மிருகக்காட்சிசாலையாக அமைந்துள்ளது. இங்கு 67 க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்கத்தைச் சேர்ந்த உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு மண் மற்றும் செடிகளை வைத்து மூடிவைக்கப்படும் நிலையிலான கண்ணாடிப் பெட்டிகள் உள்ளன. அவற்றில் பாம்புகள் மற்றும் பல்லிகள் போன்றவை உள்ளன. அவை பெரிய வகை ஊர்வன இனத்தைச் சேர்ந்தவையாகும். உப்பு நீர் முதலை, மலைப்பாம்பு மற்றும் கொமோடோ டிராகன் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆமை, இகுவானா மற்றும் விஷம் இல்லாத பாம்புகள் போன்ற வகையிலான ஊர்வன வகையைச் சேர்ந்த செல்லப்பிராணிகளுக்கான ஒரு பூங்காவும் உள்ளது. அங்கு பார்வையாளர்கள் செல்லப்பிராணிகளைத் தொடவும், அவற்றுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி உண்டு..[1]

வரலாறு

தொகு
 
ஊர்வன பூங்காவில் கொமோடோ டிராகன்

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் வாழ்கின்ற விலங்கினங்களின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக, தமன் மினி இந்தோனேசியா இந்தாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த விலங்கின அருங்காட்சியகம் கட்டப்பட்டது. இதற்கான கட்டுமானம் அக்டோபர் 1, 1975 ஆம் நாளன்று தொடங்கி 1 சூலை 1976 ஆம் நாளன்று நிறைவு பெற்றது. 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாளன்று சுஹார்ட்டோ அவர்களால் இது அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.[1] ஆரம்பத்தில் இந்த அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமத்ரான் புலி, பாபிருசா, கொமோடோ டிராகன் மற்றும் சந்திரவாசி எனப்படுகின்ற சொர்க்க பறவைகள் போன்றவை பாடம் செய்யப்பட்டு காட்சிக்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. அருங்காட்சியகம் பல டியோராமாக்களை திரையிடுகின்றது. அதில் இந்தோனேஷிய தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த உட்பட மழைக்காடுகள், சதுப்புநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற விலங்கினங்களைப் பற்றியவையாக அமைந்துள்ளன.

2000 ஆம் ஆண்டில், அருங்காட்சியகத்தைச் சுற்றியுள்ள பூங்கா ஊர்வன பூங்காவாக மாற்றி அமைக்கப்பட்டது, அதில் வாழும் ஊர்வன உள்ளிட்ட விலங்குகள் உயிரோடு இருந்தன. அதில் விஷ பாம்புகள், பைட்டான்கள், முதலைகள் மற்றும் கொமோடோ டிராகன் உள்ளிட்டவை அடங்கும்.[2]

2015 ஆம் ஆண்டில், அருங்காட்சியகம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு மறுசீரமைப்பிற்கு உள்ளானது. இதன் புதுப்பித்தல் ஆகஸ்ட் 2015 முதல் பிப்ரவரி 2016 வரை நடைபெற்றது.[3]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Museum Fauna Indonesia Komodo & Taman Reptil :: Taman Mini Indonesia Indah". www.tamanmini.com (in இந்தோனேஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-13.
  2. Media, Kompas Cyber. "Kenalan dengan Reptil-reptil Museum Komodo - Kompas.com" (in id). KOMPAS.com. http://travel.kompas.com/read/2014/07/27/080400227/Kenalan.dengan.Reptil-reptil.Museum.Komodo. 
  3. "Bertambah, Koleksi Satwa di Museum Fauna TMII" (in id). SINDOnews.com. https://metro.sindonews.com/read/1093877/171/bertambah-koleksi-satwa-di-museum-fauna-tmii-1458258004. 

வெளி இணைப்புகள்

தொகு