கொம் மாகாணம்

ஈரானின் மாகாணம்

கொம் மாகாணம் (Qom Province, பாரசீக மொழி : استان قم‎, Ostān-e Qom ), இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்திய கோமிஷன் / கோமிஷன், என்பது ஈரானின் 31 மாகாணங்களில் ஒன்றாகும். இது 11,237 கிமீ² பரப்பளவு கொண்டதாகும். இது ஈரானின் மொத்த பரப்பளவில் 0.89% ஆகும். இந்த மாகாணம் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ளது. மாகாணத்தின் தலைநகராக கும் நகரம் உள்ளது. இந்த மாகாணமானது தெஹ்ரான் மாகாணத்தின் ஒரு பகுதியைப் பிரித்து 1995 இல் உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 1,151,672 ஆகும், இதில் 95.2% மக்கள் நகர்ப்புறங்களிலும், 4.8% மக்கள் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றனர். மாகாணத்தின் உள்ள நகரங்களானது கும், ஜஃபாரியே, தஸ்ட்ஜெர்ட், கஹாக், கானாவத் மற்றும் சலாஃப்சேகன் ஆகியவை ஆகும். கோம் கவுண்டியானது மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு மாவட்டமாகும்.

2014 சூன் 22 அன்று ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக மாகாணங்களை ஐந்து பகுதிகளாகப் பிரித்தத பின்னர், இந்த மாகாணம் பகுதி 1 இன் ஒரு பகுதியாக வைக்கப்பட்து.

நிலவியல் தொகு

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
19561,60,981—    
19661,79,862+11.7%
19762,93,620+63.2%
19866,16,963+110.1%
19917,57,147+22.7%
19968,53,044+12.7%
200610,46,737+22.7%
201111,51,672+10.0%
ஆதாரம்: [1]

கோம் மாகாணத்தின் தட்பவெட்பமானது பாலைவன மற்றும் அரை பாலைவன காலநிலைக்கு இடைப்பட்டதாக உள்ளது. இதன் நிலப்பரப்பானது மலைப்பகுதிகள், மலைச்சாரல்கள் மற்றும் சமவெளிகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த மாகாணமானது நாட்டின் வறண்ட பகுதிக்கு அருகிலும், உள்நாட்டிலும் அமைந்திருப்பதால், இங்கு வறண்ட காலநிலையே உள்து. மேலும் குறைந்த ஈரப்பதம் மற்றும் குறைந்த மழைப்பொழிவு கொண்டபகுதியாகவும் உள்ளது. எனவே, இதன் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக உப்பு ஏரி பகுதிகளுக்கு அருகில் வேளாண்மை சாத்தியமில்லை. கோம் மாகாணத்தில் இரண்டு பெரிய உப்பு ஏரிகள் உள்ளன,[2] அவற்றில் ஒன்று ஹோவ்ஸ் இ சோல்டன் ஏரி,[3] இது   கோமுக்கு வடக்கே 36 கி.மீ. தொலைவில் உள்ளது. அடுத்து கோமுக்கு 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நமக் ஏரி  ஆகும். நாமக் ஏரியின் ஐந்தில் ஒரு பங்கு கோம் மாகாணத்திற்குள் உள்ளது.

வரலாறு தொகு

 
கி.மு. முதல் மில்லினிய காலத்தின் கோமின், கஹாக் நகரைச் சேர்ந்த கலன்.

கும் நகரானது இஸ்லாமியத்திற்கு முந்தைய காலங்களில் இருந்து உள்ளதாக கருதப்படுகிறது. தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலமாக கிமு 5 ஆம் மில்லினியத்திலிருந்து கொமில் குடியிருப்புகள் இருந்ததாக தெரியவருகிறது. இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்திய எஞ்சிய தொல்லியல் சின்னங்கள் மற்றும் வரலாற்று நூல்களின்படி, கும் ஒரு பெரிய நகரமாக இருந்தது. 'கும்' என்பது கும் நகரத்தின் பண்டைய கோபுரத்தின் பெயர், இதனால், அரேபியர்கள் பாரசீகத்தை வெற்றிகொண்ட போது அதை கும் என்று அழைத்தனர்.

இரண்டாவது கலீபாவான உமறு இப்னு அல்-கத்தாப் ஆட்சியின் போதுதான் முஸ்லிம்கள் கொம் பகுதியைக் கைப்பற்றினர். பொ.ச. 644-645ல், அபு மூசா ஆஷாரி தலைமையிலான முசுலீம் படைகள் படையெடுத்து வந்தன. படையெடுத்துவந்த அரேபியர்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன.

அப்பாசியக் கலீபகம் மற்றும் உமையா கலீபகம் போன்றவற்றால் அலிவிட்ஸ் (வட ஈரானின் அலிட் வம்சங்கள் ஆன்ட ஷியா இசுலாமிய அரசு) கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டபோது அவர்கள் தப்பியோடி நிரந்தரமான கோமிலேயே தங்கிவிட்டனர். கி.பி 825 ஆம் ஆண்டில் கலீப் அல்-மமுன் கோமிற்கு படைகளை அனுப்பினார், இதன் விளைவாக பொதுமக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் நகரமும் அழிக்கப்பட்டது.

அல்-மமுனின் மறைவையடுத்து, கோமில் வசிப்பவர்கள் திரண்டெழுந்து, கி.பி 831 இல் கலீபாவின் பிரதிநிதியைத் தூக்கியெறிந்தனர். இருப்பினும், அல்-மமுனின் வாரிசான அல்-முத்தாசிம், இந்தக் கலகத்தைத் தடுப்பதற்காக கோமிற்கு படைகளை அனுப்பினார். நகரம் மீண்டும் எரிந்தது. அலவிட் சமூகத்தைச் சேர்ந்த புவாய்ஹிட் வம்ச (பாரசீக மொழியில் அல் இ பூயே ) ஆட்சிக்கு வரும் வரை இங்கு அமைதியின்மை தொடர்ந்தது. புவாய்ஹிட் வம்ச ஆட்சியின் போது தான் கோம் நகரம் விரிவடைந்து செழித்தது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்_மாகாணம்&oldid=3551739" இருந்து மீள்விக்கப்பட்டது