கொய்யா (குடும்பம்)
கொய்யா | |
---|---|
கொய்யா (Psidium guajava) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
துணைவகுப்பு: | Rosidae
|
வரிசை: | Myrtales
|
குடும்பம்: | Myrtaceae
|
துணைக்குடும்பம்: | Myrtoideae
|
சிற்றினம்: | Myrteae[1]
|
பேரினம்: | Psidium |
இனங்கள் | |
About 100, see text |
கொய்யா அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இது ஒரு குறுமரமாகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 இனங்கள் உள்ளன. மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.
பயிரிடத் தேவையான காலநிலை
தொகு- ஈரலிப்பான காலநிலையிலும் அதேபோல் உலர் பிரதேசங்களிலும் பயிரிடப்படக்கூடியது.
- மழை வீழ்ச்சி- 1000 முதல் 4000 மில்லி மீட்டர்.
- உயரம் - கடல் மட்டத்திலிருந்து 1500–2000 மீட்டர்.
- மண்- களி, மணல், இருவாட்டி எதிலும் பயிரிடலாம்.
- கார காடித்தன்மை -pH 4.5-9.0
மேற்கோள்கள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- ↑ "Psidium". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-01-27. Archived from the original on 2009-01-14. பார்க்கப்பட்ட நாள் 2009-02-06.