கொய்லி தேவி

கொய்லி தேவி மாதேமா (Koili Devi Mathema) (சி. 1929-2007) நேபாளி இசைத் துறையில் முதல் பெண் பாடலாசிரியராகவும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்தார். அதோடு இவர் 'குயில் பறவை' எனவும் குறிப்பிடப்படுகிறார். இது நேபாளியில் 'கொய்லி' என்ற பெயரின் அர்த்தத்திலிருந்து பெறப்பட்ட தலைப்பாகும். தனது அத்தையின் உதவியுடன், நேபாள மன்னர் சிங் சம்சேர் ஜங் பகதூர் ராணாவின் அரண்மனைக்கு 11 வயதில் உதவியாளராக நுழைந்தார். இவரது மெல்லியக் குரலைக் கேட்டபின் ராணா இவரை கொய்லி என்று குறிப்பிட்டார். அதன் பிறகு இவர் கொய்லி தேவி என்று அறியப்பட்டார். இது இவருக்கு வெற்றிகளையும் புகழையும் அளித்தது. இவர், சிங்க அரண்மனையில்]] பாடுவதையும், நடனமாடுவதையும் வழக்கமாகத் கொண்டிருந்தார். 2007 ஆம் ஆண்டு நாட்டில் ஜனநாயகம் நிறுவப்பட்ட பின்னர், இவர் நேபாள வானொலியில் ஒரு பாடகியானார். இவர் தொழில்முறை பாடகர்களாக மாறிய நேபாள பாடகர்களின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். இவரது பாடல்கள் நாடு முழுவதும் பல திரைப்படங்களிலும், நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. [1] [2]

கொய்லி தேவி
இயற்பெயர்இராதா பாஸ்நெட்
பிறப்பு1929 செப்டம்பர்
சிசாபானி காடி, மக்வான்பூர் மாவட்டம், நேபாளம்
இறப்பு2007
காட்மாண்டு, நேபாளம்
தொழில்(கள்)பாடுதல்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் உள்ள மக்வான்பூர் மாவட்டத்தின் சிசாபானி காடியில் நிலம் பாஸ்நெட் மற்றும் இராம்பஹதூர் பாஸ்நெட்டின் மகளாக பிறந்த இவருக்கு இராதா பாஸ்நெட் என முதலில் பெயரிடப்பட்டது. இவரது பெயர் இராதா என்றாலும், சிறுவயதில் 'பன்டாரி' என்று அழைக்கப்பட்டார், காட்மாண்டுவில் மக்கான் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் பள்ளியில் சேர இதே பெயரைப் பயன்படுத்தினார். இவருக்கு ஒரு வயது இருக்கும் போது இவரது தாய் இறந்துவிட்டார். ஐந்து வயதில் இவர் தனது அத்தையுடன் (தந்தையின் சகோதரி) காத்மாண்டு சென்றார். அங்கு இவரது அத்தை இவருக்கு இசையைக் கற்றுக் கொடுத்தார். [3]

தொழில்முறை வாழ்க்கையும் விருதுகளும்

தொகு

2007ஆம் ஆண்டு நாட்டில் ஜனநாயகம் நிறுவப்பட்ட பின்னர், நேபாள வானொலியில் ஒரு சுயாதீன பாடகியாக ஆனார். அங்கு இவரது இசை வாழ்க்கைத் தொடங்கியது. 1950இல் பதிவு செய்யப்பட்ட "சான்சர்கோ ஜமேலா லக்தாச்சா க்யோ யோ மேளா" என்பது இவரது முதல் பாடலாகும். நவீன மற்றும் தேசபக்தி பாடல்கள் மற்றும் சேவா மற்றும் சமர்பன் போன்ற இசைத் தொகுப்புகள் உட்பட 4,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.

நேபாள வானொலியில் சிறந்த இசைக்கலைஞர் விருது, சுபா ராயாபிசேக் பதக், கோர்கா தக்சின் பாகு வி, சின்னலதா இசை விருது போன்றவை இவருக்கு வழங்கப்பட்டன. "மாதேமா" என்ற தனது பாடல்களுக்காகவும் இவர் நினைவுகூரப்படுகிறார். "ஜாஹி ரா ஜூஹி புல் மாலா கன்சி துவைல் லான்லா" மற்றும் "ஜிந்தகி பாரி நாச்சுத்தீன் காரி சைனோ ஜோதன்லா" போன்ற பிரபலமான பாடல்களை இவர் பாடியுள்ளார். [4]

44 ஆண்டுகளாக நேபாள வானொலியில் பணிபுரிந்த இவர், துறை அதிகாரியாக படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். வானொலி நிலையத்தில் இசை இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர், ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த இவர், ஆர்மோனியம், கைம்முரசு இணை, தம்புரா போன்ற தனது இசைக்கருவிகளை இந்திரா சங்கீதத் மகாவித்யாலயாவுக்கு வழங்கினார். [5]

இறப்பு

தொகு

கொய்லி தேவி மாதேமா காத்மாண்டுவில் 21 திசம்பர் 2007 அன்று தனது 78 வயதில் இறந்தார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Personality Of the Week: Koili Devi Mathema". Nepali Radio Texas. 18 January 2012. பார்க்கப்பட்ட நாள் 11 December 2016.
  2. 2.0 2.1 "Singing legend Koili Devi dies at 78". The Himalayan. 22 December 2007. பார்க்கப்பட்ட நாள் 11 December 2016.
  3. "Koili Devi, singer with the cuckoo voice". பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  4. "Singing legend Koili Devi dies at 78". The Himalayan Times. 21 December 2007. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  5. https://www.facebook.com/nephindi/posts/koili-devione-of-the-most-famous-nepali-singers-koili-devi-is-popular-for-her-me/493064404120298/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொய்லி_தேவி&oldid=3107055" இலிருந்து மீள்விக்கப்பட்டது