கொலம்பினா (புறா)

கொலம்பினா
* ரூடி தரை புறா, கொலம்பினா தல்பாக்கோட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இக்தினியா

இசுபிக்சு, 1825
மாதிரி இனம்
கொலம்பினா பிகுய்[1]
இசுபிக்சு, 1825
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்

கொலாம்பிகாலினா
இசுகார்டாபெல்லா

கொலம்பினா (Columbina) என்பது புதிய உலகில் வாழும் கொலம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த சிறிய புறாக்களின் பேரினமாகும். இவை தென் ஐக்கிய நாடுகளில் தென் அமெரிக்காவிலிருந்து நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவில் பெரும்பகுதியிலும் காணப்படுகின்றன. கொலம்பினா புறாக்கள் பொதுவாக இணையாகவோ சிறிய மந்தைகளாகவோ காணப்படுகின்றன. பொதுவாக இவை திறந்த வெளிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பழுப்பு நிறக் கருவிழிகள் மற்றும் இளஞ்சிவப்பு கால்களைக் கொண்டுள்ளன. பறக்கும் போது, சில சிற்றினங்களின் இறக்கைகளில் செம்பழுப்பு நிறத்தில் தனித்துவமான ஒளிர்தலைக் கொண்டுள்ளன. பிற சிற்றினங்கள் கருப்பு மற்றும் வெள்ளை இறக்கை வடிவங்களைக் கொண்டுள்ளன.

இந்தப் பேரினம் 1825ஆம் ஆண்டில் செருமன் இயற்கை ஆர்வலர் ஜோகன் பாப்டிசுட் வான் இசுபிக்சால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பெயர் இலத்தீன் மொழியான கொலம்பினசு என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் "புறா" அல்லது "புறா போன்றது" என்பதாகும். 1841ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் ஜோர்ஜ் இராபர்ட் கிரே என்பவரால் இதன் மாதிரி இனம் கொ. இசுட்ரெபிட்டான்சு அறிவிக்கப்பட்டது. இந்த உயிரலகு இப்போது பிகுய் தரை புறா கொலம்பினா இசுட்ரெபிடான்சு சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்படுகிறது.[2]

இப்பேரினத்தின் கீழ் ஒன்பது சிற்றினங்கள் உள்ளன.[2]

  • இன்கா புறா, கொலம்பினா இன்கா
  • செதில் புறா, கொலம்பினா இசுகம்மட்டா
  • தரை புறா, கொலம்பினா பாசாரினா
  • வெண்மார்பு தரை புறா, கொலம்பினா மினுட்டா
  • ஈக்வடோரிய தரை புறா, கொலம்பினா பக்லி
  • ரூடி தரை புறா, கொலம்பினா தல்பாக்கோட்டி
  • பிகுய் தரை புறா,கொலம்பியா பிகுய்
  • குரோக்கிங் தரை புறா கொலம்பினா குரூசியானா
  • நீலக் கண் தரை புறா, கொலம்பினா சயனோபிசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Columbidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. 2.0 2.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலம்பினா_(புறா)&oldid=4050123" இலிருந்து மீள்விக்கப்பட்டது