கொழுப்பு ஆல்டிகைடு

கொழுப்பு ஆல்டிகைடுகள் (Fatty aldehydes) என்பவை திறந்த சங்கிலி வகை சேர்மங்களாகும். நீண்ட-சங்கிலி ஆல்டிகைடுகளான இவை மோனோ அல்லது ஒற்றை நிறைவுறா அல்லது பாலிநிறைவுறா சேர்மங்களாக இருக்கலாம். ஆக்டேனால், நோனேனால், டெக்கேனால், டோடெக்கேனால் அல்லது பன்னிருடெக்கேனால் உள்ளிட்ட ஆல்டிகைடுகள் கொழுப்பு ஆல்டிகைடுகள் வகையைச் சேர்ந்தவையாகும். ஆல்க்கேன்களை அடிப்படையாகக் கொண்டு கொழுப்பு ஆல்டிகைடுகளுக்கான பெயரிடல் முறை வருவிக்கப்படுகிறது. ஆல்டிகைடு குழுவுடன் ’ஆல்’ என்ற விகுதி சேர்க்கப்பட்டு இவற்றினுடைய பெயர் அடையாளப்படுத்தப்படுகிறது.

கொழுப்பு ஆல்டிகைடின் வேதிக் கட்டமைப்பு, பன்னிரு டெக்கேனால்

தோற்றம்

தொகு

பல்வேறு சிட்ரசு வகை பழங்களின் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற பல இயற்கை பொருட்களில் கொழுப்பு ஆல்டிகைடுகள் என்பவை இயற்கைப் பகுதிப்பொருள்களாகும். ஆரஞ்சு பழத்தோலில் ஒரு கூறாக டெக்கேனால் கானப்படுகிறது[1]. பலவகையான பூச்சி இனங்கள் சுரக்கும் பிரமோன்களில் கொழுப்பு ஆல்டிகைடு காணப்படுகிறது[2]. இவை தவிர பாலூட்டிகளின் இதயத் தசைகளிலும் கொழுப்பு ஆல்டிகைடுகள் காணப்படுகின்றன[3].

தயாரிப்பு

தொகு

தாமிர-துத்தநாக வினையூக்கிகளைப் பயன்படுத்தி கொழுப்பு ஆல்ககால்களை ஐதரசன் நீக்கல்வினைக்கு உட்படுத்தி கொழுப்பு ஆல்டிகைடுகளைத் தயாரிக்கிறார்கள்[4]. ஆல்க்கீன்களிலிருந்து ஆக்சோ செயல்முறை மூலமாக கொழுப்பு ஆல்டிகைடுகளை பெருமளவில் தயாரிக்கிறார்கள்[5].

பயன்கள்

தொகு

ஐதரோபார்மைலேற்றம் வழியாக ஆக்சோ செயல்முறையில் பெருமளவில் தயாரிக்கப்படும் கொழுப்பு ஆல்டிகைடுகள் நேரடியாக கொழுப்பு ஆல்ககால்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பல கொழுப்பு ஆல்டிகைடுகள் நறுமணப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிரெஞ்சு நாட்டவரான கோகோ சேனல் அறிமுகப்படுத்திய முதலாவது வாசனைத் திரவியத்தின் குறிப்பீட்ட ஒரு மணமாக 2-மெத்திலன்டெக்கேனால் இருந்தது ஓர் உதாரணமாகும். உணவுப்பொருட்கள் மற்றும் நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இனிப்பான டெக்கேனால் முறையே நறுமணப்பொருளாகவும் வாசனைத்திரவியமாகும் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் இது ஆரஞ்சுப் பழத்தோலின் வாசனையையும் நினைவூட்டுகிறது [6].

மேற்கோள்கள்

தொகு
  1. Kehai Liu, Qiulin Chen, Yanjun Liu, Xiaoyan Zhou, Xichang Wang: "Isolation and Biological Activities of Decanal, Linalool, Valencene, and Octanal from Sweet Orange Oil". In: Journal of Food Science 77, 2012, S. C1156–C1161, doi:10.1111/j.1750-3841.2012.02924.x.
  2. Gerhard Kasang, Karl Ernst Kaißling, Otto Vostrowsky, Hans Jürgen Bestmann: "Bombykal, eine zweite Pheromonkomponente des Seidenspinners Bombyx mori L." In: Angewandte Chemie. 90, 1978, S. 74–75, doi:10.1002/ange.19780900132.
  3. John R. Gilbertson et al.: "Natural occurrence of free fatty aldehydes in bovine cardiac muscle". In: Journal of Lipid Research 13.4 (1972): S. 491–499.
  4. DE 10044809, "Verfahren zur Herstellung von Aldehyden" 
  5. Ernst Wiebus, Boy Cornils: "Die großtechnische Oxosynthese mit immobilisiertem Katalysator" In: Chemie Ingenieur Technik 66, 1994, S. 916–923, doi:10.1002/cite.330660704.
  6. "Chemistry in its element - 2-Methylundecanal" (in German). பார்க்கப்பட்ட நாள் 2014-06-20. {{cite web}}: Cite has empty unknown parameters: |day=, |month=, and |deadurl= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுப்பு_ஆல்டிகைடு&oldid=2555836" இலிருந்து மீள்விக்கப்பட்டது