ஐதரசன் நீக்கல்வினை

ஐதரசன் நீக்கல்வினை (dehydrogenation) என்பது ஒரு மூலக்கூறில் இருந்து ஐதரசனை நீக்கப் பயன்படும் ஒரு வேதி வினையாகும். இவ்வினை ஐதரசனேற்ற வினைக்கு நேரெதிர் வினையாக உள்ளது. தொழிற்முறை மற்றும் ஆய்வகமுறை ஆகியவிரு முறைகளிலும் ஐதரசன் நீக்கல் வினைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்புகளை நிறைவுறாக் கொழுப்புகளாக மாற்றுவதற்கு ஐதரசன் நீக்கல் வினை பயன்படுகிறது. ஐதரசன் நீக்கல் வினையைத் வினையூக்கிகளைப் போலத் தூண்டும் நொதிகள் ஐதரசனேசுகள் எனப்படுகின்றன. சிடைரின் உற்பத்திக்கு உதவும் நுண் வேதிப்பொருட்கள், கொழுப்பு வேதிப்பொருட்கள், பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் அழுக்குநீக்கி தொழிற்சாலைகளில் ஐதரசன் நீக்கல் வினை விரிவாகப் பயன்படுகிறது.

ஐதரசன் நீக்கல்வினை வகைகள் தொகு

கரிமச்சேர்மங்களில் பல்வேறு வகையான ஐதரசன் நீக்கல் வினை செயல் முறைகள் விவரிக்கப்படுகின்றன.

உதாரணங்கள் தொகு

ஐதரசன் நீக்கல் வினைக்கான உதாரணங்களில் ஒன்றாக எத்தில்பென்சீனில் இருந்து சிடைரின் உற்பத்தி செய்யும் தொழிற்முறை தயாரிப்பைக் கூறலாம். இம்முறையில் ஐதரசன் நீக்கல் வினையூக்கியாக இரும்பு (III) ஆக்சைடு பயன்படுகிறது. பொட்டாசியம் ஆக்சைடு அல்லது பொட்டாசியம் கார்பனேட்டும் பலவாறு பரிந்துரைக்கப்படுகின்றன.

C6H5CH2CH3 → C6H5CH=CH2 + H2

மெத்தனாலில் இருந்து தொழில் முறையில் பார்மால்டிகைடு தயாரிக்கும் முறையும் ஒரு ஐதரசன் நீக்கல் வினையாகக் கருதப்படுகிறது. இங்கு ஆக்சிசன் ஏற்பியாக பயன்படுகிறது. இவ்வினைக்கு வெள்ளி உலோகம் அல்லது இரும்பு மற்றும் மாலிப்டினக் கலவை அல்லது வனேடியம் ஆக்சைடுகள் பொதுவான வினையூக்கிகள் ஆகும். பொதுவாகப் பயனாகும் பார்மாக்சு வினையில் மெத்தனால் மற்றும் ஆக்சிசன் 250 – 400 பாகை வெப்பநிலையில் வினைபுரிந்து பார்மால்டிகைடு உருவாகிறது:[1]. இவ்வினைக்கான சமன்பாடு

2 CH3OH + O2 → 2 CH2O + 2 H2O

மேற்கோள்கள் தொகு

  1. Günther Reuss, Walter Disteldorf, Armin Otto Gamer, Albrecht Hilt “Formaldehyde” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a11_619
  2. "Polypropylene Production via Propane Dehydrogenation part 2, Technology Economics Program". by Intratec, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0615702162, Q3 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_நீக்கல்வினை&oldid=3237051" இலிருந்து மீள்விக்கப்பட்டது