நிறைவுறாக் கொழுப்பு

நிறைவுறாக் கொழுப்பு (unsaturated fat) என்பது கொழுப்பு அமிலத் தொடரியில் குறைந்தபட்சம் ஒரு இரட்டைப்பிணைப்பினைக் கொண்ட கொழுப்பு அல்லது கொழுப்பு அமிலத்தினைக் குறிக்கும். கொழுப்பு மூலக்கூறில், ஒரு இரட்டைப்பிணைப்பு இருந்தால் அதை ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட இரட்டைப்பிணைப்பினைக் கொண்டவை பல்நிறைவுறாக் கொழுப்பு என்றும் அழைக்கப்படுகின்றன. இரட்டைப்பிணைப்புகள் உருவாகும் இடங்களில், ஹைட்ரசன் அணுக்கள் நீக்கப்படுகின்றன. இதனால், நிறைவுற்ற கொழுப்பில் இரட்டைப்பிணைப்புகள் கிடையாது. இவற்றில், அதிகப் பட்ச எண்ணிக்கையில் ஹைட்ரசன்கள் கார்பனுடன் பிணைந்திருக்கும் என்பதால் இவை, ஹைட்ரசன் அணுக்களுடன் நிறைவுற்றவை எனப்படுகின்றது. உயிரணு வளர்சிதைமாற்றத்தில் நிறைவுறாக் கொழுப்பு மூலக்கூறுகள், அதே அளவு நிறைவுற்ற கொழுப்புடன் ஒப்பிடும்போது, குறைந்த அளவு சக்தியினைக் (குறைந்த கலோரிகளை) கொண்டுள்ளன. பெருமளவு நிறைவுறா தன்மையினைக் கொண்டிருக்கும் ஒரு கொழுப்பு அமிலமானது (அதாவது அதிகமான இரட்டைப்பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலம்) அதிக அளவு கொழுமியபெராக்சைடேற்ற தாக்கத்திற்கு உட்படுகின்றது (சிக்கடித்துப் போகிறது). நிறைவுறாக் கொழுப்புகளை எதிர்உயிர்வளிகள் கொழுமியபெராக்சைடேற்றதிலிருந்து (கெட்டுப்போவதிலிருந்து) பாதுகாக்கின்றன.

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

பல்வேறு உணவுகளில் கொழுப்பு பொதிவுகள்

தொகு
உணவு நிறைவுற்ற கொழுப்பு ஒற்றைநிறைவுறா கொழுப்பு பல்நிறைவுறா கொழுப்பு
மொத்தக் கொழுப்பில் எடை சதவிகிதம் (%)
சமையல் எண்ணெய்கள்
காட்டுக்கடுகு எண்ணெய் 7 59 29
சோள எண்ணெய் 13 24 59
ஆலிவ் எண்ணெய் 13 74 8
சூரியகாந்தி எண்ணெய் 10.3[1] 19.5[1] 65.7[1]
சோயா அவரை எண்ணெய் 15 24 58
தேங்காய் எண்ணெய் 92 6 2
பால் பொருட்கள்
வழக்கமான பாலாடைக்கட்டி 64 29 3
இலகுவான பாலாடைக்கட்டி 60 30 0
முழுமையான பால் 62 28 4
பால், 2% 62 30 0
உயர்தர பனிகுழைமம் (ஐஸ்கிரீம்) 62 29 4
இலகுவான பனிகுழைமம் (ஐஸ்கிரீம்) 62 29 4
இறைச்சிகள்
மாட்டிறைச்சி 33 38 5
மாட்டின் இடுப்பு மேற்பகுதி இறைச்சி (அரைக்கப்பட்டது) 38 44 4
பன்றி இறைச்சி 35 44 8
பன்றித் தொடைக்கறி 35 49 16
கோழி மார்பு 29 34 21
கோழி 34 23 30
வான்கோழி மார்பு 30 20 30
வான்கோழி தொடைக்கறி 32 22 30
மீன் 23 15 46
சால்மான் மீன் 28 33 28
மாட்டிறைச்சி துரித உணவு (ஹாட் டாக்) 42 48 5
வான்கோழி துரித உணவு (ஹாட் டாக்) 28 40 22
பர்கர் (துரித உணவு) 36 44 6
பாற்கட்டிபர்கர் (துரித உணவு) 43 40 7
கோழி கறியுடன் இடையீட்டு ரொட்டி 20 39 32
தீயில்வாட்டப்பட்ட கோழி கறியுடன் இடையீட்டு ரொட்டி 26 42 20
போலந்து தொத்திறைச்சி 37 46 11
வான்கோழி தொத்திறைச்சி 28 40 22
தொத்திறைச்சி பீத்சா 41 32 20
பாற்கட்டி பீத்சா 60 28 5
கொட்டைகள்
வறுத்த வாதுமை (பாதாம் பருப்பு) 9 65 21
வறுத்த முந்திரி 20 59 17
வறுத்த மகடாமியா 15 79 2
வறுத்த வேர்க்கடலை (கச்சான்) 14 50 31
வறுத்த பேக்கான் 8 62 25
ஆளிவிதை (அரைக்கப்பட்டது) 8 23 65
எள் 14 38 44
சோயா அவரை 14 22 57
சூரியகாந்திவிதை 11 19 66
வறுத்த அக்ரூட் பருப்பு 9 23 63
இனிப்புகள் மற்றும் சுட்ட பொருள்கள்
சாக்லெட் மிட்டாய் 59 33 3
பழ சவச்சி மிட்டாய் 14 44 38
ஓற்சுமா (காடைக்கண்ணிக் கூழ்) உலர் திராட்சை பணியாரம் 22 47 27
சாக்லெட் பணியாரம் 35 42 18
மஞ்சள் நிற இனியப்பம் (கேக்கு) 60 25 10
டேனிய (டேனிஷ்) மாப்பசை 50 31 14
சமைக்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ சேர்ப்பவை
வெண்ணெய் துண்டு 63 29 3
பாற்சாரமடித்த வெண்ணெய் 62 29 4
மார்கரின் (செயற்கை வெண்ணெய்), துண்டு 18 39 39
மார்கரின் (செயற்கை வெண்ணெய்), அதிக அளவு 16 33 49
மார்கரின் (செயற்கை வெண்ணெய்) , குறைந்த அளவு 19 46 33
பன்றிக் கொழுப்பு 39 45 11
காய்கறி நெய் (டால்டா) 25 45 26
கோழிக் கொழுப்பு 30 45 21
மாட்டுக் கொழுப்பு 41 43 3
பால்திரட்டி கலவை 16 54 25
இலகுவான இத்தாலியன் கலவை 14 24 58
மற்றவை
முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு 36[2] 44[2] 16[2]
குறிப்பிடப்படாத இடங்களில் மேற்கோள்: [3]
 
தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு வகைகளின் அளவுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 .nutritiondata.com --> Oil, vegetable, sunflower Retrieved on September 27, 2010
  2. 2.0 2.1 2.2 .nutritiondata.com --> Egg, yolk, raw, fresh Retrieved on August 24, 2009
  3. Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids Northwestern University. Retrieved on August 24, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறைவுறாக்_கொழுப்பு&oldid=2201838" இலிருந்து மீள்விக்கப்பட்டது