அத்தியாவசிய கொழுப்பு அமிலம்
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் (essential fatty acids; EFAs) மனிதர்களாலும், விலங்குகளாலும் தொகுக்க முடியாத, உடல் நலத்திற்கு தேவையான, கட்டாயம் உட்கொள்ள வேண்டிய கொழுப்பு அமிலங்களாகும்[1]. எரி பொருளாக மட்டும் பயன்படுபவைகளைப் போலல்லாமல், உயிரியல் பணிகளுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையே இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் என்கிறோம்.
உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
---|
இவற்றையும் காண்க |
மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இரண்டு மட்டுமே: ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ஒமேகா-3 கொழுப்பு அமிலம்) மற்றும் லினோலெயிக் அமிலம் (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்)[2][3][4]. பிற கொழுப்பு அமிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பின்வருமாறு: காமா-லினோலெனிக் அமிலம் (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்), லாரிக் அமிலம் (நிறைவுற்ற கொழுப்பு அமிலம்) மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலம் (ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு அமிலம்)[5].
1923-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த இரண்டு அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கண்டறியப்பட்டபோது, இவைகளுக்கு உயிர்ச்சத்து எஃப் என்று பெயரிடப்பட்டது. பின்பு, 1930-ஆம் ஆண்டு எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களை உயிர்ச்சத்தாக இல்லாமல் கொழுப்புகளாக வகைப்படுத்துதலே சிறந்தது என காண்பிக்கப்பட்டது[6].
மேற்கோள்கள்
தொகு- ↑ Modern Nutrition in Health and Disease 6th Ed. (1980) Robert S. Goodhart and Maurice E. Shils. Lea and Febinger. Philadelphia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8121-0645-8. pp. 134-138.
- ↑ Whitney Ellie and Rolfes SR Understanding Nutrition 11th Ed, California, Thomson Wadsworth, 2008 p.154.
- ↑ Enig Mary G. Know your Fats Bethesda Press 2005 p.249
- ↑ Burr, G.O., Burr, M.M. and Miller, E. (1930). "On the nature and role of the fatty acids essential in nutrition" (PDF). J. Biol. Chem. 86 (587). http://www.jbc.org/cgi/reprint/97/1/1.pdf பரணிடப்பட்டது 2007-02-21 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2011-11-20.
- ↑ Enig 2005 p.249
- ↑ Burr, G.O., Burr, M.M. and Miller, E. (1930). "On the nature and role of the fatty acids essential in nutrition" (PDF). J. Biol. Chem. 86 (587). http://www.jbc.org/cgi/reprint/97/1/1.pdf. பார்த்த நாள்: 2007-01-17.