இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்பு

இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்பு (Interesterified fat) என்பவை ஒரு டிரைகிளிசரைடு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மாற்றப்பட்ட கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஒருவகை எண்ணெய்களாகும். இடைமணமியமாக்கப்படும் வினையானது கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில்லை. பொதுவாக, உருகுநிலையை மாற்றுவதற்கும்,[1] கொழுப்பு அழுகலைத் தாமதப்படுத்துவதற்கும், பொரித்தலுக்கு மிகவும் ஏற்ற எண்ணெயை உருவாக்குவதற்கும், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைக் கொண்ட நல்ல சுவையான மார்கரின் தயாரிப்பதற்கும், இந்த இடைமணமியமாக்கப்படும் வினையானது உதவுகின்றது. மாறுபக்க கொழுப்புகளை உருவாக்கும் பகுதியாக ஐட்ரசனேற்றப்பட்ட எண்ணெய்களைப் போலன்றி, உணவுத் தொழிலகங்களில் உபயோகப்படுத்தப்படும் இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்புகளை, எளிமை மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக, ஐட்ரசனேற்றப்பட்ட கொழுப்புகளிலிருந்துப் பெற முடியும்.[2]

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

தொகு
  1. Costales-Rodriquez, R.; Gibon, V.; Verhe, R.; De Greyt, W. (2009), "Chemical and Enzymatic Interesterification of a Blend of Palm Stearin: Soybean Oil for Low Trans-Margarine Formulation.", J Am Oil Chem Soc, 86 (7): 681–697, doi:10.1007/s11746-009-1395-2
  2. Hui, Y.H. (2006), Handbook of Food Science, Technology, and Engineering, Vol.1, Boca Raton: Taylor & Francis, ISBN 1-57444-551-0