ஹாம்பர்கர் (hamburger) அல்லது பர்கர் இருரொட்டிகளுக்கிடையே அல்லது வெட்டப்பட்ட ரொட்டித்துண்டின் இடையே நன்றாக அரைத்த இறைச்சி (பொதுவாக மாட்டிறைச்சி, சில நேரங்களில் பன்றியிறைச்சி அல்லது கலவை) வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டியாகும். இவை வழமையாக கீரை, பன்றி இறைச்சிக் குழல், தக்காளி, வெங்காயம், வெள்ளரி, பாலாடைக்கட்டி இவற்றுடன் எள் போன்றவையுடன் அலங்காரப்படுத்தப்பட்டு வழங்கப்படும்.[1] இதனை விரைவு தொடர் உணவகங்கள் உலகளவில் மிகவும் பரப்பி உள்ளன.

ஹாம்பர்கர்
ஹாம்பெர்கர்
பரிமாறப்படும் வெப்பநிலைசாப்பாடு
தொடங்கிய இடம்ஐக்கிய அமெரிக்கா, செருமனி
ஆக்கியோன்பல்வேறு உரிமைகள்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்நன்கு அரைத்த மாட்டிறைச்சி, ரொட்டி

ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் நடுவே வைக்கப்படும் இறைச்சி பேட்டி(patty) மட்டுமே ஹாம்பர்கர் அல்லது பர்கர் என்று வழங்கப்படுகிறது. இதனைக் குறிக்கும் பேட்டி என்ற சொல் இங்கு பயன்படுத்தப்படுவதில்லை. பொதுவாக பொதுநலவாய நாடுகளில் அமெரிக்க உணவகங்களைத் தவிர்த்து ஹாம்பெர்கர் என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை.

சொல்லாக்கம் தொகு

ஹாம்பெர்கர் என்ற சொல் செருமனியின் இரண்டாவது மிகப்பெரும் நகரான ஹாம்பெர்க்கிலிருந்து பெறப்பட்டது. [2] இங்கிருந்து அமெரிக்காவிற்கு பலர் புலம் பெயர்ந்திருந்தனர். பெர்க் என்ற செருமானியச் சொல் பாதுகாக்கப்பட்ட அடைக்கலத்தைக் குறிப்பதாகும்;பல செருமானிய நகரங்களின் விகுதியாகும். ஹாம்பர்கர் என்ற சொல் டாய்ச்சு மொழியில் ஹாம்பெர்கிலிருந்து வந்தவர் என்பதைக் குறிக்கும்.

பர்கர் என்ற சொல் ஹாம்பெர்கரைத் தவிர இதனைப் போன்ற பிற இடையூட்டு ரொட்டிகளுக்கும், சால்மன் பர்கர், காய்கறி பர்கர், பயன்படுத்தப்படுகிறது.[3]

இந்தியாவில் தொகு

 
உருளைக்கிழங்கு மற்றும் மசாலா சேர்த்த வடா பாவ் அல்லது இந்திய பர்கர்.

இந்தியாவில் பர்கர்களில், மாட்டிறைச்சி குறித்த இந்து சமய மற்றும் பன்றிக்கறி குறித்த இசுலாமிய சமய, பண்பாட்டுத் தடைகள் காரணமாக, பொதுவாக கோழி இறைச்சி அல்லது காய்கறி பேட்டிசு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இயங்கத் தொடங்கிய அமெரிக்க விரைவுணவு உணவகத் தொடர் மெக்டொனால்டு அதன் மிகுந்த விற்பனைக்குரிய பிக் மாக்கிற்கு மாற்றாக கோழிக்கறி அடங்கிய மகாராஜா மாக் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய உள்நாட்டுத் தயாரிப்பான மகாராட்டிர வடா பாவ் (வடை ரொட்டி) உருளைக்கிழங்கு போண்டாவை ரொட்டித்துண்டுகளுக்கிடையே வைத்து வழங்குவதும் பிரபலமாக உள்ளது. இவை சட்னி மற்றும் முட்டைகளுடன் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Cooking wizardry for kids, Margaret Kenda, Kenda & Williams, Phyllis S. Williams, Contributor Phyllis S. Williams, Barron's Educational Series, 1990 ISBN 0-8120-4409-6, 9780812044096 page 113 [1]
  2. Harper, Douglas. "hamburger". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2009-10-17.
  3. Burger Merriam-Webster
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கர்&oldid=3710625" இலிருந்து மீள்விக்கப்பட்டது