இருவனேடியம் ஐயொட்சைட்டு
இருவனேடியம் ஐயொட்சைட்டு (Divanadium pentaoxide) அல்லது வனேடியா (Vanadia) என்பது V2O5 என்ற வேதியியல் வாய்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்வையாகும்.[1] இது மண்ணிறம் அல்லது மஞ்சள் நிறமான திண்மமாகும்.[2] நீர்க் கரைசலிலிருந்து தூயதாக வீழ்படிவாக்கப்படும்போது இது கடுஞ்செம்மஞ்சள் நிறமுடையதாகக் காணப்படும்.[3] உயரொட்சியேற்ற நிலையிலுள்ளதன் காரணமாக இருவனேடியம் ஐயொட்சைட்டானது ஈரியல்புடையதாகக் காணப்படுவதோடு, ஒட்சியேற்றுங் கருவியாகவும் தொழிற்படுகின்றது.[2] ஊக்கியாகப் பயன்படுத்தப்படுவதாலும் வனேடியத்தின் மாழைக் கலவைகளின் ஆக்கத்தில் பயன்படுத்தப்படுவதாலும் கைத்தொழில் நோக்கில் வனேடியத்தின் முக்கியமான சேர்வையாக இது விளங்குகின்றது.[4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருவனேடியம் ஐயொட்சைட்டு
| |
வேறு பெயர்கள்
வனேடியம் ஐயொட்சைட்டு
வனடிக்கமில நீரிலி | |
இனங்காட்டிகள் | |
1314-62-1 | |
ChEBI | CHEBI:30045 |
ChemSpider | 14130 |
EC number | 215-239-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19308 |
பப்கெம் | 14814 |
வே.ந.வி.ப எண் | YW2450000 |
| |
UN number | 2862 |
பண்புகள் | |
V2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 181.8800 கி/மூல் |
தோற்றம் | மஞ்சள் திண்மம் |
அடர்த்தி | 3.357 கி/செமீ3 |
உருகுநிலை | 690 °C (1,274 °F; 963 K) |
கொதிநிலை | 1,750 °C (3,180 °F; 2,020 K) |
0.8 கி/இலீ (20 °C) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Pmmn, இல. 59 |
Lattice constant | a = 1151 பிக்கோமீற்றர், b = 355.9 பிக்கோமீற்றர், c = 437.1 பிக்கோமீற்றர் |
ஒருங்கிணைவு வடிவியல் |
சிதைந்த முக்கோண இருகூம்பகம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0596 |
GHS pictograms | |
GHS signal word | DANGER |
H341, H361, H372, H332, H302, H335, H411 | |
ஈயூ வகைப்பாடு | Muta. Cat. 3 Repr. Cat. 3 Toxic (T) Harmful (Xn) Irritant (Xi) Dangerous for the environment (N) |
R-சொற்றொடர்கள் | R20/22, R37, R48/23, R51/53, R63, R68 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S36/37, S38, S45, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாதது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
10 மிகி/கிகி
|
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | வனேடியம் ஒட்சிமுக்குளோரோட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நையோபியம் ஐயொட்சைட்டு தாண்டலம் ஐயொட்சைட்டு |
வனேடியம் ஒட்சைட்டுகள் தொடர்புடையவை |
வனேடியம் ஈரொட்சைட்டு வனேடியம் மூவொட்சைட்டு வனேடியம் நாலொட்சைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இச்சேர்வையின் கனிம வடிவமான செருபினைட்டானது மிகவும் அரிதாக நீராவித் துளைகளில் கிடைக்கின்றது.[5] நவசொயிட்டு என்ற பெயரில் அறியப்படும் கனிம மூவைதரேற்றான V2O5·3H2O ஆகவும் இருவனேடியம் ஐயொட்சைட்டானது காணப்படுகின்றது.[6]
வேதியியல்புகள்
தொகுவெப்பமேற்றும்போது இருவனேடியம் ஐயொட்சைட்டானது ஒட்சிசனை இழந்து முறையே, V2O4, V2O3, VO ஆகிய ஒட்சைட்டுகளையும் வனேடியத்தையும் தோற்றுவிக்கும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vanadium pentoxide". Chemical Book. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2015.
- ↑ 2.0 2.1 Bernard Moody (1991). Comparative Inorganic Chemistry. pp. 455. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7131-3679-0.
- ↑ "Vanadium Pentoxide, V2O5". Atomistry. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2015.
- ↑ ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. p. 84.
- ↑ "Vanadium(V) oxide (T3D1639)". T3DB. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2015.
- ↑ Alice D. Weeks, Mary E. Thompson & Alexander M. Sherwood. "NAVAJOITE, A NEW VANADIUM OXIDE FROM ARIZONA" (PDF). p. 207. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2015.
- ↑ Alexander Fridman (2008). Plasma Chemistry. Cambridge University Press. p. 436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-84735-3.