டெக்கேனால்
வேதிச் சேர்மம்
டெக்கேனால் (Decanal) என்பது C9H19CHO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பத்து கார்பன் அணுக்களால் ஆன ஒர் எளிய ஆல்டிகைடு சேர்மத்திற்கு இது உதாரணமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெக்கேனால்
| |
வேறு பெயர்கள்
டெசைல் ஆல்டிகைடு, கேப்ரினால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
112-31-2 | |
ChEBI | CHEBI:31457 |
ChemSpider | 7883 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C12307 |
பப்கெம் | 8175 |
| |
UNII | 31Z90Q7KQJ |
பண்புகள் | |
C10H20O | |
வாய்ப்பாட்டு எடை | 156.2 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.83 கிராம்/மில்லி |
கொதிநிலை | 207 முதல் 209 °C (405 முதல் 408 °F; 480 முதல் 482 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோற்றம்
தொகுடெக்கேனால் இயற்கையாகவே தோன்றுகிறது வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டிகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள் [1]
ஆக்டனால், சிட்ரால் மற்றும் சினென்சால் ஆகியனவற்றுடன் சேர்ந்து டெக்கேனால் கிக்சிலியின் முக்கியமான பகுதிப்பொருளாகக் காணப்படுகிறது.
புளித்த மாவின் நெடிக்கும் டெக்கேனால் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது [2].
கொத்தமல்லி மூலிகையின் (கொரியண்டம் சாடிமம்) அத்தியாவசிய எண்ணெயிலும் பிரதானமான மூலப்பொருளாக (17%) டெக்கேனால் உள்ளது [3].
தயாரிப்பு
தொகுடெக்கேனால் ஆல்ககாலை ஆக்சிசனேற்றம் செய்து டெக்கேனாலைத் தயாரிக்க இயலும் [4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Rychlik, Schieberle & Grosch Compilation of Odor Thresholds, Odor Qualities and Retention Indices of Key Food Odorants, Lichtenbergstraße, Germany, 1998.
- ↑ "Identification of buckwheat (Fagopyrum esculentum Moench) aroma compounds with GC-MS". Food Chemistry 112: 120. 2008. doi:10.1016/j.foodchem.2008.05.048.
- ↑ ESSENTIAL OIL COMPOSITION OF THE CORIANDER (Coriandrum sativum L.) HERB DEPENDING ON THE DEVELOPMENT STAGE, Renata Nurzyńska-Wierdak. ACTA AGROBOTANICA Vol. 66 (1), 2013: 53–60. https://pbsociety.org.pl/journals/index.php/aa/article/view/aa.2013.006
- ↑ R. W. Ratcliffe (1988). "Oxidation with the Chromium Trioxide-Pridine Complex Prepared in situ: 1- Decanal". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV6P0373.; Collective Volume, vol. 6, p. 373