கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி

கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி (Colombo West Electorate) என்பது இலங்கையில் சூலை 1977 முதல் பெப்ரவரி 1989 வரையில் தேர்தல் நோக்கங்களுக்காக நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதி ஆகும். இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொழும்பு நிருவாக மாவட்டத்தில் இந்தத் தொகுதி அமைந்திருந்தது. கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு கிழக்கு, மற்றும் கொழும்பு மேற்கு என இரு புதிய தொகுதிகளாக சூலை 1977 இல் உருவாக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி 1989 தேர்தலில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1977 நாடாளுமன்றத் தேர்தல்கள் தொகு

இலங்கையின் 8வது நாடாளுமன்றத்துக்காக 1977 சூலை 21 இல் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள்[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
ஜே. ஆர். ஜெயவர்தனா ஐதேக யானை 21,707 79.22%
எம். சந்திரலால் சல்காடோ கை 3,769 13.75%
எஸ். டி. விஜேசிங்க திறப்பு 1,803 6.58%
எச். நவரத்ன பண்டா கதிரை 70 0.26%
கே. ஏ. தாப்ரூ வண்ணத்துப்பூச்சி 53 0.19%
செல்லுபடியான வாக்குகள் 27,402 100.00%
நிராகரிக்கப்பட்டவை 107
மொத்த வாக்குகள் 27,509
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,983
வாக்களித்தோர் வீதம் 72.42%

மேற்கோள்கள் தொகு