கொ. கோபிநாத்

இந்திய அரசியல்வாதி

கொ. கோபிநாத் (K. Gopinath, பிறப்பு: நவம்பர் 19, 1962) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதற்கு முன் இவர் இத்தொகுதியில் இருந்து இதே கட்சி சார்பாக 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்[1][2]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியில் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டியிடம் தோல்வி அடைந்தார்.[3]

இளமைப்பருவம் தொகு

இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் பிறந்தார். இவர் மணமானவர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "Hosur (Tamil Nadu) Election Results". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  4. "Thiru. K. Gopinath (INC)". Legislative Assembly of Tamil Nadu. Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொ._கோபிநாத்&oldid=3919391" இலிருந்து மீள்விக்கப்பட்டது