கோங்கிடி சுனிதா

கோங்கிடி சுனிதா மகேந்திர ரெட்டி (Gongidi Sunitha Mahender Reddy) (பிறப்பு 16 ஆகஸ்ட் 1969) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் அலைர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினராகவும், அரசு கொறடாவாகவும் உள்ளார். [1] [2] இவர் பாரத் இராட்டிர சமிதி (முன்பு தெலுங்கானா இராட்டிர சமிதி) கட்சியை சேர்ந்தவர்.

கோங்கிடி சுனிதா
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொறடா
தெலங்காணா சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூன் 2014
தொகுதிஅலைர் சட்டமன்றத் தொகுதி, தெலங்காணா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 ஆகத்து 1969 (1969-08-16) (அகவை 54)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
துணைவர்மகேந்திர ரெட்டி
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கரிங்குலா சுனிதா ராணி 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் சரளா மற்றும் நரசிம்ம ரெட்டிக்கு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். [3] இவர் தனது பள்ளிப்படிப்பை சிக்கந்தராபாத் வெஸ்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், உசுமானியா பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

சுனிதா ரெட்டி, தனது பட்டப்படிப்புக் காலத்தில் குடும்பத்தை நடத்துவதற்காக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். திருமணத்திற்குப் பிறகும் இவர் அரசியல் பிரவேசம் வரை தனது பணியில் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் 2001 ஆம் ஆண்டு 2001 தெலுங்கு இராட்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். 2001 முதல் 2006 வரை யாதகிரிகுட்டா மண்டல பரிசத் உறுப்பினராகவும் பணியாற்றினார். 2002-ஆம் ஆண்டில் தெலுங்காணா இராட்டிர சமிதி கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். 2006 - 2011ல் வாங்கப்பள்ளியில் இருந்து கிராமத் தலைவர் பதவியை வென்றார். இவர் 2009-ஆம் ஆண்டு தெலுங்காணா இராட்டிர சமிதி ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினராக உள்ளார். [4]

இவர் 2014 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் புத்திதா பிக்சுமாயா கௌடுவை விட 30,000 க்கும் அதிகமான வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். [5] 2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் 33086 வாக்குகள் பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்தங்கிய பெண்களின் வேலை வாய்ப்புக்காக வேலை செய்யும் “ஹெல்ப்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் இவர் பணியாற்றினார்.

தேர்தல் புள்ளிவிவரங்கள் தொகு

தேர்தல் முடிவுகள்
ஆண்டு தேர்தல் தொகுதி கட்சி எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் பெரும்பான்மை முடிவு மேற்கோள்
2014 2014 ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் அலைர் சட்டமன்றத் தொகுதி பாரத் இராட்டிர சமிதி புத்திதா பிக்சுமாயா கௌடு (இதேகா) 31148 வெற்றி
201 2014 ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் அலைர் சட்டமன்றத் தொகுதி பாரத் இராட்டிர சமிதி புத்திதா பிக்சுமாயா கௌடு (இதேகா) 33086 வெற்றி

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சுனிதா 2001-ஆம் ஆண்டில் தெலுங்கு இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கொங்கிடி மகேந்தர் ரெட்டியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Gongidi Sunitha prays for timely rains".
  2. "DC discusses if women in state Cabinet can ensure social justice". http://www.deccanchronicle.com/141221/nation-current-affairs/article/dc-discusses-if-women-state-cabinet-can-ensure-social-justice. பார்த்த நாள்: 14 May 2016. 
  3. "Member's Profile - SMT. GONGIDI SUNITHA". பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
  4. Politburo | Telangana Rashtra Samithi
  5. TRS releases list of ‘69’ candidates for Assembly polls - The Hindu
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்கிடி_சுனிதா&oldid=3814758" இலிருந்து மீள்விக்கப்பட்டது