கோடநாடு எஸ்டேட்

கோடநாடு எஸ்டேட் என்பது தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டமாகும். இந்தத் தோட்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோடநாடு காட்சி முனைக்கு அருகே இந்தத் தோட்டம் அமைந்துள்ளது. இந்தத் தோட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் 1992 ஆம் ஆண்டு ரூபாய் 17 கோடிக்கு வாங்கப்பட்டது. அப்போது இந்தத்தோட்டத்தின் பரப்பளவு சுமார் 900 ஏக்கர் ஆகும். அதன் பின்னர் இந்தத் தோட்டத்தின் பக்கத்திலிருந்த வேறு தோட்டங்கள் வாங்கப்பட்டு இதனுடன் இணைத்து 1,600 ஏக்கராக விரிவாக்கப்பட்டது. இங்கு சுமார் 5,000 சதுர அடி பரப்பிலான பிரம்மாண்ட பங்களா, உலங்கு வானூர்தி தளம், படகு குழாம், தேயிலைத் தொழிற்சாலை, தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள் போன்றவை உள்ளன.

கோடநாடு

இந்த தோட்டத்துக்கு வி. கே. சசிகலா, ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். ஜெயலலிதாவுக்கு இதில் 10 சதவீத பங்குகள் உள்ளன.

ஜெயலலிதா இங்கு பல முறை தங்கி ஓய்வு எடுத்துள்ளார்.[1] இவர்களால் இந்த எஸ்டேட்டை வாங்கப்பட்டதில் இருந்து கோடநாடு பகுதி யில் கடும் கெடுபிடிகள் அரங்கேற்றப்பட்டன. சாமானிய மக்கள் உள்ளே நுழையாத வகையில் தோட்டத்தில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்டேட்டில் இருந்து 500 சதுர மீட்டர் அளவில் இருந்த குடியிருப்பு 99 அறைகள் கொண்ட பிரம்மாண்ட பங்களாவாக புதுப்பிக்கப்பட்டது. இந்த பங்களா வெளியில் இருந்து பார்க்க முடியாதவாறு கட்டப்பட்டது. இந்த எஸ்டேட்டில் சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தொகு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வி. கே. சசிகலா, ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டையும் பறிமுதல் செய்ய அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த எஸ்டேட் அரசுடமையாகும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.[2]

கொலை மர்மங்கள் தொகு

இந்த எஸ்டேட் பங்களாவில் காவலில் இருந்த ஓம் பகதூர் என்பவர், 2017 ஏப்ரல் மாதம் 23 அன்று நள்ளிரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும், அவருடன் காவல் பணியில் இருந்த கிருஷ்ணா என்பவர் படுகாயமடைந்த நிலையில் இருந்தார். இந்தக் குற்றங்கள் எஸ்டேட் பங்களாவில் கொள்ளையடிக்க நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இநிநிகழ்வின், நீட்சியாக இக் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வு தொடர்பாக சந்தேகிக்கப்படும் கனகராஜ் மற்றும் சயான் ஆகியோரை காவல் துறையினர் தேடி வந்தனர். ஆனால், சேலம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் பலியானார். அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு அருகே தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த சயான் என்பவரும் சாலை விபத்தில் சிக்கினார். இதில், சயானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய சயான் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த கொலை மற்றும் கொள்ளை நிகழ்வு தொடர்பாக, தீபு, சதீஷன், சந்தோஷ், உதய குமார், ஜிதின் ஜாய், ஜெம்சீர் அலி, மனோஜ் சமி, வாளயார் மனோஜ், ஜிஜின் உள்ளிட்ட 9 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சயானையும் சேர்த்து இது தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கனகராஜ் என்பவர் உயிரிழந்தார்.[3]

இந்த எஸ்டேடில் நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தெகல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரிரியர் மேத்யு சாமுவேல் ஒரு கானொலியை வெளியிட்டார். இந்தக் கானொளியில் இந்தக் குற்றங்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் க. பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக அரசு கட்டுப்பாட்டில் கோடநாடு எஸ்டேட்? : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எகிறும் எதிர்பார்ப்பு". செய்திக்கட்டுரை. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜெ.வின் கோடநாடு எஸ்டேட் அரசுடமையாகுமா?". செய்திக் கட்டுரை. தி இந்து. 2017 பெப்ரவரி. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்". செய்தி. இந்தியன் எஸ்பிரஸ். 16 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "கோடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு". செய்தி. புதிய தலைமுறை. 14 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடநாடு_எஸ்டேட்&oldid=3929322" இலிருந்து மீள்விக்கப்பட்டது