கோட்ரசு
கோட்ரசு (Codrus, கிரேக்கம் : Κόδρος , Kódros ) என்பவர் ஏதென்சின் அரை-தொன்மவியல் கடைசி மன்னராவார் (கி.மு. r. ca 1089 - 1068 ). இவர் நாட்டுப்பற்று மற்றும் தியாகத்திற்கான பண்டைய முன்மாதிரியாக இருந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் மேடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால் மன்னராக அல்ல, ஆனால் ஏதென்சின் முதல் அர்க்கோனாக இருந்து ஆண்டார் என்று கூறப்படுகிறது. [1] [2]
கோட்ரசு | |
---|---|
போலோக்னாசின் அட்டிக் சிவப்பு உருவக் கோப்பையில் கோட்ரசின் உருவம் | |
பட்டம் | ஏதென்சின் மன்னர் |
பிள்ளைகள் | மெடோன் அகாசுடசு |
கோட்ரசின் கதையின் ஆரம்ப பதிப்பு ஏதென்சின் லைகர்கஸ் எழுதிய அகெய்னஸ்ட் லியோக்ரேட்டசின் 4 வது சொற்பொழிவில் இருந்து வருகிறது. [3] இவர் அரசராக இருந்த காலத்தில் ஏதென்சின் மீது பெலோபொன்னெச்சின் டோரியர்கள் படையெடுத்து ( கி.மு. 1068 ) வந்தனர். இப்போட்சின் மகனான அலெட்சின் கீழ் திரண்டிருந்த டோரியர்கள் டெல்பிக் ஆரக்கிளில்லில் போரில் தங்களுக்கு வெற்றி கிட்டுமா என்று குறிகேட்டனர். அதில் மன்னர் கோர்டசுக்கு தீங்கு நேராவிட்டால் படையெடுப்பு வெற்றிபெறும் என்று தீர்க்கதரிசனம் கூறப்பட்டது. ஏதென்சின் ஏதென்சின் மன்னரின் மரணம் மட்டுமே ஏதென்சை பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது இந்த தீர்க்கதரிசனத்தின் செய்தியாகும். இச்செய்தி ஏதென்சின் மன்னரான கோட்ரசின் காதுகளுக்கு வந்தடைந்தது. தன் மக்களைக் காக்க முடிவு செய்த கோட்ரசு ஒரு விவசாயி போல் வேடமிட்டு, டோரியன் முகாமுக்கு அருகில் சென்றார். அங்கு இவர் டோரியன் வீரர்கள் இருவரைச் சந்தித்தார். அதில் ஒருவனை வேண்டுமென்றே கொன்றார். இடனே மற்றொருவனால் இவர் கொல்லப்படார். தாங்கள் கொன்றது மன்னர் கோட்ரசையே என்பதை உணர்ந்த டோரியன்கள், தாங்கள் கேட்ட தீர்க்கதரிசனத்தின்படி தங்களுக்கு தோல்வி கிட்டும் என்று அஞ்சி பின்வாங்க முடிவு செய்தனர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ஏதன்சுக்கு அரசனாக கோட்ரசுக்குப் பிறகு இருக்க தகுதியுடையவர்கள், அரசனாக அழைக்கபடுவதற்குரியகள், வேறொருவரும் கிடையாது எனேதனியர்கள் தீர்மானித்தனர். அதனால் அரசர் என்ற பட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக ஆர்கோன் என்ற பதவி உருவாக்கப்படது.
அரிசுட்டாட்டில், ஏதெனியர்களின் அரசியலமைப்பில், கோட்ரசுக்குப் பிறகு அவரது மகன்கள் மெடோன் பின்னர் அகாசுடசு மன்னரானார் என்ற மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார். [4]
குறிப்புகள்
தொகு