கோணசீமா மாவட்டம்
கோணசீமா மாவட்டம் (Konaseema district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமலாபுரம் நகரம் ஆகும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அமலாபுரம், இராமச்சந்திராபுரம் மற்றும் கொத்தப்பேட்டை வருவாய்க் கோட்டகளைக் கொண்டு கொனசீமா மாவட்டம் 4 ஏப்ர்ல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2]
கோணசீமா மாவட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | அமலாபுரம் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://konaseema.ap.gov.in |
52,4011 வீடுகளும், சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட கோணசீமா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17,19,093 ஆகும். அதில் ஆண்கள் 8,62,000 மற்றும் பெண்கள் 8,57,093 ஆக உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம்
தொகுகொனசீமா மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 17 மண்டல்களையும், 316 வருவாய் கிராமங்களையும் கொண்டது. மேலும் அமலாபுரம் மாநகராட்சியும் கொண்டுள்ளது.
மண்டல்கள்
தொகுஇம்மாவட்டத்தின் அமலாபுரம் வருவாய் கோட்டத்தில் 10 மண்டல்களும், இராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டத்தில் 6 மண்டல்களும் கொண்டுள்ளது.
# | இராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டம் | அமலாபுரம் வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | இராமச்சந்திராபுரம் | மும்முடிவரம் |
2 | கஜுலுரு | ஐ. போலாவரம் |
3 | கங்காவரம் | கத்திரினிகோனா |
4 | மண்டப்பேட்டை | அமலாபுரம் |
5 | இராயபுரம் | உப்பலகுப்தம் |
6 | கபிலேஸ்வரபுரம் | அல்லாவரம் |
7 | ரசோல் | |
8 | மலிகிபுரம் | |
9 | சகிநெதிப்பள்ளி | |
10 | மாமுடிகுருரு |
அரசியல்
தொகுகொனசீமா மாவட்டம், அமலாபுரம் மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:[3]
- இராமச்சந்திராபுரம் சட்டமன்றத் தொகுதி
- மும்முடிவரம் சட்டமன்றத் தொகுதி
- அமலாபுரம் சட்டமன்றத் தொகுதி
- ரசோல் சட்டமன்றத் தொகுதி
- கன்னாவரம் (தனி) சட்டமன்றத் தொகுதி
- கொத்தபேட்டை சட்டமன்றத் தொகுதி
- மண்டப்பேட்டை சட்டமன்றத் தொகுதி