கோணமனேனி அமரேசுவரி

நீதிபதி கோணமனேனி அமரேசுவரி (Konamaneni Amareswari) (1928-2009) உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார்.

கோணமனேனி அமரேசுவரி

அமரேசுவரி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள அப்பிகட்லா கிராமத்தில் பிறந்தார்.[1] 1949 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் அரசியல் மற்றும் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆனார். இவர் 1960-1961 வரை வழக்கறிஞர் கழகத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும், வழக்குரைஞர் கழகத்திலிருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2] 1975-1976 காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1978ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இறப்பு தொகு

இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த இவர், ஜூலை 25, 2009 அன்று புது தில்லியில் இறந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[1][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணமனேனி_அமரேசுவரி&oldid=3940273" இலிருந்து மீள்விக்கப்பட்டது