கோத்தி (பாலினம்)

இந்திய துணைக்கண்டத்தின் கலாச்சாரத்தில் கோத்தி, என்பவர் ஒரு பாலின உறவுகளில் " பெண்பால் " பாலினத்தை தேர்வு செய்யும் அல்லது விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு ஆண் அல்லது இளைஞன் ஆவார். இவர்கள் பெரும்பாலும் பாலுறவில் ஊடுருவக் கொடுக்கும் தன்மையுனராக இருப்பார்கள்[1][2]. அதே நேரம் ஊடுருவும் செயல்களைச் செய்யும் சக ஆண் பங்காளிகள் பந்தி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[3][4]

கோத்தி என்ற வார்த்தையின் தோற்றம் தெளிவாக ஆவணங்களிலோ குறிப்புகளிலோ காணப்படவில்லை. இதன் உண்மையான பொருள் "ஃபாக்(fag)" அல்லது "சிஸ்ஸி(sissy)" போன்ற ஒரு அவதூறுத்தன்மையாகும். [5] இதற்கு இணையாக துரானி ( கொல்கத்தா), மேனகா[6] ( கொச்சி), மேடி ( நேபாளம் ) மற்றும் ஜெனானா ( பாகிஸ்தான் ) ஆகியவை அந்தந்த பகுதிகளில் பயன்படுத்தப்ப்டுகிறது.

கோத்திகள், ஹிஜ்ராக்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார்கள், கோத்தீக்கள் ஹிஜ்ராக்கள்போன்று திட்டக் குமுகமாக வாழமாட்டார்கள். மேலும், எல்லா கோத்திகளும் ஹிஜ்ராவாக மாறுவதற்கான துவக்க சடங்குகள் அல்லது உடல் மாற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. அவர்கள் ஹிஜ்ராவைப் போலவே இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் மனதளவில் மட்டுமே பெண்தன்மையை உணர்ந்து, தங்களது தற் பாலின காதலருடன் தற்பால்சேர்க்கை உடலுறவில் பெண்ணியப் பாத்திரத்தை மட்டுமே விரும்புவார்கள் மாறாக பெண்ணியத் தன்மையை வெளிப்புற அடையாளங்களில் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால் சிலசமயங்களில் அவர்கள் ஆண் விபச்சாரத்தின் மூலம் சக தன்மையுள்ள ஆண்களுக்கு அல்லது இருபால் விரும்பும் ஆண்களுக்கு பாலியல் உதவி செய்யலாம். [1]

கோத்தி என்ற சொல் இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு அவர்களின் மூன்றாம் பாலினத்திற்கு இணங்கிய அல்லது தொடர்புடைய அனைத்தையும் உள்ளடக்கிய சொல் என்றே பிற ஆதாரங்களும் கூறுகின்றன. எனவே கோத்தி என்ற சொல்லில் ஹிஜ்ராவின் அடையாளமும் அடங்கும். [7]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Knight, Kyle G.; Flores, Andrew R.; Nezhad, Sheila J. (2015-02-01). "Surveying Nepal's Third Gender: Development, Implementation, and Analysis". TSQ: Transgender Studies Quarterly 2 (1): 101–122. doi:10.1215/23289252-2848904. பன்னாட்டுத் தர தொடர் எண்:2328-9252. https://doi.org/10.1215/23289252-2848904.  பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
  2. Wong, Angela, தொகுப்பாசிரியர் (2016-04-30) (in en). The Wiley Blackwell Encyclopedia of Gender and Sexuality Studies. Singapore: John Wiley & Sons, Ltd. doi:10.1002/9781118663219. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-66321-9. http://doi.wiley.com/10.1002/9781118663219. 
  3. Chatterjee, Shraddha (2018-08-01). "Transgender Shifts" (in en). TSQ: Transgender Studies Quarterly 5 (3): 311–320. doi:10.1215/23289252-6900696. பன்னாட்டுத் தர தொடர் எண்:2328-9252. https://read.dukeupress.edu/tsq/article/5/3/311/135246/Transgender-ShiftsNotes-on-Resignification-of. 
  4. Sharma, Preetika (2018-10-26), "In-between the planned grid", The Production of Alternative Urban Spaces, Routledge, pp. 153–168, doi:10.4324/9781315103952-9, ISBN 9781315103952, பார்க்கப்பட்ட நாள் 2021-10-22
  5. . 
  6. Naz Foundation International, Briefing Paper 3: Developing community-based sexual health services for males who have sex with males in South Asia. August 1999. Paper online பரணிடப்பட்டது 18 அக்டோபர் 2015 at the வந்தவழி இயந்திரம் (Microsoft Word file).
  7. Stief, Matthew (January 2017). "The Sexual Orientation and Gender Presentation of Hijra, Kothi, and Panthi in Mumbai, India" (in en). Archives of Sexual Behavior 46 (1): 73–85. doi:10.1007/s10508-016-0886-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-0002. பப்மெட்:27878410. http://link.springer.com/10.1007/s10508-016-0886-0. 

வார்ப்புரு:LGBT in India

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தி_(பாலினம்)&oldid=3892055" இலிருந்து மீள்விக்கப்பட்டது