கோனியம்மன் கோயில்
கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார்.
கோனியம்மன் கோவில் | |
---|---|
கோனியம்மன் கோவில் உட்கோபுரம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவு: | கோயம்புத்தூர் |
ஆள்கூறுகள்: | 10°59′36″N 76°57′49″E / 10.99333°N 76.96361°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோனியம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | மாசிமாதத் தேர்த் திருவிழா |
இணையதளம்: | கோவை கோனியம்மன் கோவில் |
கோயில் அமைவிடம்
தொகுஇக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.
கோயில் வரலாறு
தொகுசிற்றரசன் கோயன் வணங்கி வந்த கோயம்மாவே கோனியம்மா என மருவியது. கோயம்புத்தூர் என்ற இந்நகரத்தின் பெயரும் கோவையம்மா என்ற பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[1] இக்கோவிலானது கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.[2] இக்கோவிலானது 2011இல் ₹1.75 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட 84 அடி (24 மீ) உயர கோபுரமே, இச்சுற்றுவட்டாரத்தின் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.[3]
திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா
தொகு2008 ஆம் ஆண்டு இத்திருக்கோயிலின் நுழைவாயிலில் 83 3/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன.[4]
திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய இராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Whitehead, Henry (1921). The Village Gods of South India. Read Books. pp. 121–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-406-73214-6.
- ↑ "Koniamman Temple" (in Tamil). தினமலர்.
- ↑ "Rajagopuram for Kovai Koniamman temple too". இந்தியன் எக்சுபிரசு. 2 March 2010 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304093640/http://www.newindianexpress.com/states/tamil_nadu/article253830.ece.
- ↑ குமுதம் ஜோதிடம்; 25.01.2008; பக்கம் 4-6
வெளி இணைப்புகள்
தொகு