கோனோஃபைட்டம் கால்குலசு

கோனோஃபைட்டம் கால்குலசு (Conophytum calculus) என்பது ஐசோஏசியே என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க இனச் சதைப்பற்றுள்ள தாவர இனமாகும்.

கோனோஃபைட்டம் கால்குலசு
கோனோஃபைட்டம் கால்குலசு துணை இனம். கால்குலசு இரவில் மலரும் பூவுடன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கோனோஃபைட்டம்
இனம்:
C. calculus
இருசொற் பெயரீடு
Conophytum calculus
(ஆல்வின் பெர்கர்) ஏ. ஈ. பிரவுன்
வேறு பெயர்கள் [2]

Conophytum komkansicum L.Bolus
Mesembryanthemum calculus A.Berger

முட்டை இலைச்செடி

விளக்கம்

தொகு
 
சாகுபடியிலுள்ள கோனோஃபைட்டம் கால்குலசு, துணை இனம் கால்குலசின் சிறிய மாதிரி
 
வாழ்விடத்தில் கோனோஃபைட்டம் கால்குலசு துணைப்பிரிவின் கொத்து. வாழ்விடத்தில்
 
கோனோஃபைட்டம் கால்குலசு துணைப்பிரிவின் பூ விவரங்கள்

உருண்டையான பந்து வடிவ சதைப்பற்றுள்ள செடியானது பிரிக்கப்பட்டு அடர்த்தியான கொத்துகளை உருவாக்குகிறது. சதைப்பகுதி பார்ப்பதற்கு கூழாங்கலைப் போலவும் சதை உறுதியானதாகவும் இருப்பதால் கால்குலசு என்ற பெயர் இதற்கு வந்தது. கூழாங்கல்லுக்கு இலத்தின் மொழியில் கால்குலசு என்பது பெயராகும். இலையுதிர்காலத்தில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப் பூக்களை உற்பத்தி செய்கிறது. இவை இரவில் மலர்கின்றன. கிராம்புகளின் நறுமணத்தைக் கொண்டிருக்கும்.

மேலே ஒரு சிறிய பிளவை மட்டுமே விட்டு விட்டு தாவரத்தின் இலை-இணை முழுவதுமாக ஒன்றிணைந்து பந்தின் வடிவத்தை உருவாக்குகிறது. இப்பிளவில்தான் பூவும் அடுத்தடுத்த இலை இணையும் வெளியே முளைக்கின்றன. பந்தின் உள்ளே புதிய இலை இணை உருவாகிறது. இது தயாரானதும், புதிய இலை-இணை பந்து மூலம் பிளவுபடுவதற்கு முன்னதாக பழைய இலை-இணை பந்து சுருங்கி உலர்ந்துவிடும். மேல்தோல் (இதனால் உலர்ந்த இலை உறை) தடிமனாகவும் வலுவாகவும் இருக்கும்.

தாவரங்கள் மிக நீண்ட காலம் வாழ்கின்றன, மேலும் தனீனங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடியில் வைக்கப்பட்டுள்ளன. இவை மெதுவாக ஈடுசெய்யப்பட்டு, கொத்துக்களை உருவாக்குகின்றன.

துணை இனங்கள்

தொகு
  • கோனோஃபைட்டம் கால்குலசு துணை இனம் கால்குலசு: இவ்வகை கிளையினங்கள் வட்டமாக ஒரே மாதிரியான சாம்பல்-பச்சை தலைகள், மென்மையான உறைகள் மற்றும் மேடுகளை உருவாக்குவதற்கு கிளைக்குறுத்துகளைக் கொண்டுள்ளன.
  • கோனோஃபைட்டம் கால்குலசு துணை இனம் வான்சிலி:இவ்வகை கிளையினங்கள் சிறிய வடிவம், வெளிர் நிறம், குறைந்த வாசனை பூக்கள், குறிக்கப்பட்ட உறைகள், மிகவும் மாறுபட்ட நிறம் மற்றும் மிகவும் தாழ்ந்த, தட்டையான வடிவம் என்ற மாறுபாடுகளுடன் கோள வடிவத்தைக் கொண்டுள்ளன.

பரவல்

தொகு

கோனோஃபிட்டம் தாவரங்கள் அனைத்தும் தென்னாப்பிரிக்காவின் குளிர்கால மழைப்பொழிவுப் பகுதிகளுக்குச் சொந்தமானவையாகும். கோனோஃபைட்டம் கால்குலசு துணை இனமான கால்குலசு தாவரங்கள் தென்னாப்ப்பிரிக்காவின் மேற்கு கேப் மாகாணத்தின் வடமேற்கில் உள்ள "நெர்சுவுலேகட்டு பகுதியில் மட்டும் காணப்படுகின்றன. இங்கேயும் கூட இவை பிட்டர்ஃபோண்டைன் கிராமத்திற்கும் ஓல்சுவியருக்கும் இடையே உள்ள பகுதியில் மட்டுமே உள்ளது. புசுமன்லாந்தின் மேற்குப் பகுதிக்கு வடக்கே 100 கிமீ தொலைவில் வான்சிலி என்ற கிளையினத் தாவரங்கள் காணப்படுகின்றன.

நெர்சுவுலேகட்டு பகுதி வெண்மையான குவார்ட்சு கூழாங்கற்கள் நிறைந்த பகுதியாகும். எனவே, அரை வறண்ட காலநிலை மற்றும் வறண்ட சூரியன் இருந்தபோதிலும், குவார்ட்சு கூழாங்கல்-வயல்களின் பிரதிபலிப்பு வெள்ளை காரணமாக இப்பகுதியிலுள்ள மண் பொதுவாக மிகவும் குளிராக இருக்கும். கிராம்பு வாசனை கொண்ட பூக்கள் இரவில் அந்துப்பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.

சாகுபடி

தொகு

கோனோஃபைட்டம் இனத் தாவரங்கள் சாகுபடியில் பிரபலமானவையாகும். இருப்பினும், இச்சாகுபடிக்கு மிகவும் பிரகாசமான ஒளி, நன்கு வடிகட்டிய மணல் மற்றும் குறிப்பிட்ட குளிர்கால-நீர்ப்பாசன நிலைமைகள் தேவை.

இவை பூந்நொட்டிகளில் மிதமான அமிலத்தன்மை கொண்ட, கரடுமுரடான, நன்கு வடிகட்டிய, மண்-மணல் கலவையில் செழித்து வளரும். வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரையான குளிர்காலத்தில் இவற்றுக்கு காலை முதல் பிற்பகல் வரும் வரை இலேசாக நீர்ப்பாய்ச்சலாம். கோடையில் இவை செயலற்ற நிலையில் இருக்கும். பெரும்பாலும் இவை உலர்ந்த நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றாலும் ஓரளவு நிழலாடலாம்.

அதிக தண்ணீர் தேவைப்படும் போது தாவரங்கள் வெளிப்படையான சுருக்கங்களை உருவாக்குகின்றன. அதிக தண்ணீர் வரும்போது விரிசல் ஏற்பட்டு பிளவுபடுகிறது. போதுமான வெளிச்சத்தைப் பெறவில்லை என்றால், அது நீண்டு, பல இலை இணைகளை வைத்திருக்கும்.

தாவரத்தை வெட்டி நடுதல், கொத்துக்களை உட்பிரிவு செய்தல் அல்லது விதை மூலம் இவை இனப்பெருக்கம் செய்கின்றன.[3]


மேற்கோள்கள்

தொகு
  1. Young, A.J. (2022). "Conophytum calculus". IUCN Red List of Threatened Species 2022: e.T202851531A202872562. doi:10.2305/IUCN.UK.2022-1.RLTS.T202851531A202872562.en. https://www.iucnredlist.org/species/202851531/202872562. பார்த்த நாள்: 1 August 2023. 
  2. "Conophytum calculus (A.Berger) N.E.Br". Plants of the World Online. The Trustees of the Royal Botanic Gardens, Kew. n.d. பார்க்கப்பட்ட நாள் August 22, 2020.
  3. Conophytum calculus - Information page

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனோஃபைட்டம்_கால்குலசு&oldid=4055674" இலிருந்து மீள்விக்கப்பட்டது