கோன்னி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

கோன்னி (Konni) இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரம் மற்றும் தாலுக்காவின் தலைநகரமும் ஆகும். யானை குகைகள், அடர்த்தியான காடுகள், இரப்பர் பயிரிடுதல் போன்ற காரணங்களுக்காக கோன்னி நகரம் நன்கு அறியப்படுகிறது. "ஆனைகூடிண்டெ நாடு" என்ற பெயாராலும் கோன்னி நகரம் அறியப்படுகிறது.

கண்ணோட்டம்

தொகு

கோன்னி நகரம் பிரதான கிழக்கு நெடுஞ்சாலையில் மாநில நெடுஞ்சாலை எண் 08 இல் ஒரு முக்கியமான நகரமாக அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகத்திலிருந்து . சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கோன்னி நகரம் உள்ளது. கோன்னி சட்டசபை தொகுதி பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். [1].

இங்குள்ள பசுமையான நிலப்பகுதி காட்டு யானைகளின் புகலிடமாகவும், யானைகள் பயிற்சி மையமாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காட்டு விலங்குகளுடன் அடர்ந்த காடுகளின் பெரிய பகுதி கோன்னியை வேட்டை மற்றும் மலையேற்றத்திற்கான மற்றொரு சுற்றுலா இடமாக வெளிப்படுத்தியது. கேரளாவில் இரண்டு யானை பயிற்சி மையங்கள் உள்ளன. மற்றொன்று கோடநாட்டில் அமைந்துள்ளது. இது அடூர் வருவாய் பிரிவில் அமைந்துள்ளது மற்றும் இது அதன் அருகில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும்.

அரசியல்

தொகு

இது கோன்னி சட்டமன்றத் தொகுதிக்கும், [பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2].

போக்குவரத்து

தொகு

அருகில் உள்ள முக்கிய இரயில் நிலையம் புனலூர் இரயில் நிலையம் ஆகும். இது 25 கி.மீ தொலைவிலுள்ளது. கோட்டயத்திலுள்ள செங்கன்னூர் இரயில் நிலையம் 60 கி.மீ.தொலைவில் இடம்பெற்றுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையம் ஆகும் இது பத்தனம்திட்டாவிலிருந்து சுமார் 99 கி.மீ தொலைவில் உள்ளது.. கொச்சின் பன்னாட்டு விமான நிலையம் கோன்னி நகரிலிருந்து சுமார் 124 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புனலூர்-பத்தனம்திட்டா-மூவாற்றுப்புழை வழித்தடத்தை கேரளத்தின் மாநில நெடுஞ்சாலை எண் எட்டு இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை கோன்னி நகரத்தின் வழியே செல்கிறது. கோன்னி நகரம் பத்தனம்திட்டாவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, இவை இரண்டும் ஒரே பாதையில் உள்ளன. கோன்னி-கல்லேலி-அச்சன்கோவில் சாலை- பொதுப்பணித் துறையால் அமைக்கப்பட்ட ஒரு புதிய சாலை ஆகும். இது அச்சன்கோவில் வழியாக தமிழ்நாட்டின் தென்காசியை எளிதாக அணுகக்கூடியது. இது சித்தார்-அச்சன்கோவில் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த பாதை சபரிமலை முதல் தென்காசி வரையிலான தூரத்தை சுமார் 21 கிலோமீட்டர் அளவுக்குக் குறைக்கிறது. கோன்னி முதல் அச்சன்கோவில் வரை 39 கிலோமீட்டர் தொலைவு ஆகும். கோன்னி-சந்தனப்பள்ளி சாலை கோன்னி நகரை அடூர், பாண்டலம் மற்றும் திருவல்லா போன்ற மாவட்டங்களின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. கோன்னி-வழாமுட்டம்-வள்ளிகோடு-சந்தனப்பள்ளி-கொட்டுமோன்-அடூர் சாலை மொத்தம் 24 கிலோமீட்டர் ஆகும். கோன்னி-வள்ளிகோடு-கைப்பாட்டூர்-தும்பமோன்-பாண்டலம் சாலை மொத்தம் 22 கிலோமீட்டர் ஆகும். கோன்னி-தன்னித்தோடு-சித்தார் சாலை சபரிமலைக்கு செல்லும் மாற்று பாதையாகும். [3]. அருகிலுள்ள பேருந்து நிலையம் பத்தனம்திட்டாவின் கோன்னியில் அமைந்துள்ளது.

யானைகள் பயிற்சி மையம்

தொகு
 
கோன்னி யானை கூண்டு விவரப் பலகை

கோன்னி நகரத்தில் ஒரு பெரிய யானைகள் பயிற்சி மையம் உள்ளது. இது பத்தனம்திட்டாவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யானைகளை வளர்ப்பதற்காக கட்டப்பட்ட மரத்தாலான பெரிய கூண்டுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பிரதான ஈர்ப்புக் காட்சிகளாகும். இந்த கூண்டுகள் உள்நாட்டில் ஆனை கூடு என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஒரே நேரத்தில் 3 முதல் 4 யானைகளுக்கு இக்கூட்டில் இடமளிக்க முடியும். இங்குள்ள பயிற்சியாளர்கள் மந்தைகளிலிருந்து பிரிக்கப்பட்ட குழந்தை யானைகளுக்கு பயிற்சியளிக்கிறார்கள்., அல்லது காயமடைந்து காட்டில் சுற்றித் திரியும் குட்டி யானைகளை பயிற்றுவிக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் தங்களது முறையான பயிற்சி முறைகளைப் பயன்படுத்தி, குழந்தை யானைகளின் முரட்டுத்தனத்தை அகற்றி நன்கு பழக்கப்படுத்துகிரார்கள். பார்வையாளர்கள் இந்த யானைகளை அருகிலிருந்து உற்று நோக்கலாம் மற்றும் அவற்றின் நடத்தை பற்றி நிறைய அவதானிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும், குறிப்பாக குழந்தை யானைகளின் நடத்தை, பெரும்பாலும் குறும்புத்தனமானவையாக இருக்கும்.

 
கோன்னி யானைக் கூண்டில் வளர்க்கப்படும் மூலிகை வாழைப்பழம்.

கோன்னி நகரம் பழங்காலத்திலிருந்தே யானை பயிற்சி மையத்திற்கு பெயர் பெற்றது.. யானைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகள் / சயாத்ரியின் அடர்ந்த காடுகளிலிருந்து பிடிக்கப்பட்டு கோன்னியில் உள்ள யானைப் பயிற்சி கூண்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த காட்டு யானைகள் யானை பயிற்சியாலர்களால் சிறப்பாக அடக்கமாக பயிற்சியளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சியாளர்கள் மற்ற யானைகளின் உதவியையும் இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கொன்னியேல் கொச்சாயப்பன், இரஞ்சி பத்மநாபன், பாலகிருஷ்ணன், சோமன், வேணு, ரமேசன் மற்றும் மணி போன்ற யானைகள் வனப்பகுதிகளின் பயிற்சியாளர்களுக்கு உதவி செய்யும் பழக்கப்பட்ட அடக்கமான யானைகள் ஆகும்.

பயிற்சி மையத்திலுள்ள யானைகள்

தொகு
 
சோமன் யானை

கோன்னி யானை பயிற்சி மையத்தின் தற்போதைய உறுப்பினர்களாக சோமன், பிரியதர்சினி, மீனா, சுரேந்திரன், ஈவா மற்றும் கிருட்டிணா, இதில் கிருட்டிணாவுக்கு 6 வயதுதான் ஆகிறது.

யானை பயிற்சியின் வரலாறு

தொகு
 
ஒரு பழைய பயிற்சிக் கூண்டு

கோன்னியில் கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட யானைகளின் வரலாறு கி.பி 1810 இல் தொடங்குகிறது. முண்டம் மூழி, மன்னரப்பாரா மற்றும் துரா ஆகியவை யானைகளை கைப்பற்றும் முக்கிய இடங்களாக இருந்தன. இப்போது இருக்கும் யானை பயிற்சி கூண்டு 1942 இல் கட்டப்பட்டது. இதற்கு "கம்பகம்" மரம் பயன்படுத்தப்பட்டது. தற்போதைய பயிற்சி கூண்டுக்குள் 6 யானைகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் உள்ளது. பயிற்சி கூண்டின் பரிமாணங்கள் 12.65 × 8.60 × 7 மீட்டர் ஆகும்.. யானை பயிற்சி கூண்டு மற்றும் அதன் வளாகத்தின் மொத்தப் பரப்பளவு 9 ஏக்கர்கள் (36,000 m2) ஆகும்.

யானை பிடிப்பதை 1977 ஆம் ஆண்டில் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது: அது சுற்றறிக்கைதான் என்றாலும் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அது யானை பிடிப்பது நிறுத்தப்பட்டிருந்த்து.

தற்போது யானை பயிற்சி கூண்டு ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இது ஒரு வரலாற்று அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது. யானை பயிற்சி மையம் யானை நல மையமாக செயல்படுகிறது. மந்தைகளிலிருந்து பிரிக்கப்பட்ட மற்றும் காட்டில் தொலைந்து காணப்பட்ட யானைக் குட்டிகள் இங்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ வசதிகளும் முறையான பராமரிப்பும் வழங்கப்படுகின்றன.

கோன்னி யானை பயிற்சி மையம் மற்றும் பயிற்சி கூண்டு பற்றிய விவரங்கள் சிறீ கோட்டரதி சங்குன்னியின் புகழ்பெற்ற "அத்திகயயமாலாவின் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கேரள வரலாற்றின் அரிய கட்டுரைகளின் தொகுப்பாக "அத்திகயயமாலா கருதப்படுகிறது.

போர்ச்சுகலுக்கு பரிசு

தொகு

இந்திய குடியரசுடன் நட்பு மற்றும் ஒத்துழைப்பு நல்கியதன் அடையாளமாக சம்யுக்தா என்ற யானை போர்ச்சுகல் குடியரசிற்கு பரிசளிக்கப்பட்டது. இந்த பெருமையை கோன்னி யானை பயிற்சி மையம் கொண்டுள்ளது.

கோன்னி நகரம் பிரதான கிழக்கு நெடுஞ்சாலையில் புனலூர்-பத்தனம்திட்டா-முவாற்றுப்புழா வழித்தடத்தில் நெடுஞ்சாலை எண் -08 இல் உள்ளது, மேலும் பத்தனம்திட்டா வழியாக கேரளாவின் முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே இவழித்தடங்களில் சென்றால் எளிதாக கோன்னி நகரத்தை அடையலாம்.

கோன்னி வனக் கோட்டம்

தொகு

1887 ஆம் ஆண்டு திருவாங்கூர் வனச் சட்டத்தின்படி 1888 அக்டோபர் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி கோன்னி வனப் பிரிவு கேரளாவின் முதல் பாதுகாக்கப்பட்ட காடு ஆகும்[4]. இந்த பிரிவு மூன்று எல்லைகளில் எட்டு நிலையங்களைக் கொண்டுள்ளதுref>"Konni Forest Division". Forest.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.</ref>. கோன்னி கோட்டம்: •வடக்கு குமாரம்பூர் நிலையம் •தெற்கு குமாரம்பூர் நிலையம் நடுவத்துமூழி கோட்டம்: •கொக்கத்தோடு நிலையம் •கரிப்பந்தோடு நிலையம் •பதோம் மன்னாரபாரா கோட்டம்: •செம்பலா நிலையம் •மன்னாரபாரா நிலையம் •பச்சகானம்

பிற சுற்றுலா தலங்கள்

தொகு

அச்சன்கோவில் ஆறு

தொகு

நீண்ட நீட்சியுடன் கூடிய அச்சன்கோவில் ஆறு கோன்னி நகரில் பம்பா நதியுடன் இணைகிறது. இந்த பிராந்தியத்தில் இதற்கு பல துணை நதிகள் உள்ளன.

முரிங்கம் நாகலம் சிறீமகாதேவர் கோயில்

தொகு

இந்த கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலானது ஆகும். கோன்னி சந்திப்பிலிருந்து கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. பாண்டலம் அரச குடும்பத்தைச் சேர்ந்தது. என அறியப்படுகிறது. பத்தனம்திட்டா மாவட்டத்தின் கிழக்கில் உள்ள மிகப்பெரிய கோயில் மற்றும் , பத்தனம்திட்டாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்ற சிறப்பையும் இக்கோயில் கொண்டுள்ளது. 999 மலை தெய்வங்களின் சார்பாக கல்லேலி ஊரலி அப்பூப்பன் அனைத்துக் கடவுள்களுக்கமான தெய்வமாக இங்கு ஆட்சி செய்கிறார். கோன்னி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் உள்ள புனித தோப்பில், பண்டைய காலங்களுக்கும் முந்தைய ஒரு சடங்கு கலை வடிவமான கும்ப பாட்டூ மூலம் அவர் விழித்துக் கொள்கிறார். மூங்கில் மற்றும் கற்கள் ஒன்றிணைந்து அவற்றின் மர்மமான இசையை உருவாக்குகின்றன, இது ஒரு காட்டு பழங்குடி தாளமாகும், இது இரவின் ஆரம்ப அமைதியில் எதிரொலிக்கிறது. இந்த கலை இன்னும் நிகழ்த்தப்படும் ஒரே வழிபாட்டுத் தலம் கல்லேலி காவு என்கிறார் கோயில் குழுத் தலைவர் பி.வி.சந்தகுமார். ஒரு பழமையான விவசாய கலாச்சாரத்திலிருந்து உருவாகும் ஒரு சடங்கு, கும்பா பாட்டு ஆகும், உள்நாட்டு கருவிகளின் துணையுடன் பாடல்களை வழங்குவதை இது உள்ளடக்கியுள்ளது. கும்பம் என்பது சில விவரக்குறிப்புகளின்படி வடிவமைக்கப்பட்ட மூங்கில் குச்சியைத் தவிர வேறில்லை.எனலாம்.

பின்னர் இரும்பு அரிவாள், உலர்ந்த பாக்கு இலைகள் மற்றும் மரத் தோல்கள் போன்ற பண்ணை கருவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் அவர்கள் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து, ஓராலி அப்பூப்பனின் புகழைப் பாடுவார்கள், என்று அவர் கூறுகிறார். கும்பப் பாட்டுக்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து மென்மையான, பூசணி வடிவ கற்பாறைகள் எடுக்கப்படுகின்றன. உலர்ந்த மூங்கில் துண்டால் தட்டும்போது அவை மிகவும் தனித்துவமான ஒலியை உருவாக்குகின்றன. இரவின் அமைதியில் அது உடனடியாக உங்கள் கவனத்தை ஈர்க்கும், என்று மேலும் அவர் கூறுகிறார்.

இந்த சடங்கு பஞ்ச பூதங்களுக்கும் மரியாதை செலுத்துகிறது, அதன் வரிகள் கோயிலைச் சுற்றியுள்ள காட்டு சூழலியல். பாடல் அடிப்படையில் அனைத்து தீய மற்றும் அறியப்படாத ஆற்றல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான வேண்டுகோளாகவும் அமைகிறது. விலங்கு தாக்குதல்கள் மற்றும் காடுகளின் பிற அச்சுறுத்தல்களுக்கு பயந்து அப்பகுதியில் குடியேறியவர்கள் சடங்கின் மூலம் அவர்களின் பாதுகாவல் தெய்வமான ஓராலி அப்பூப்பனை அழைத்தனர். கும்ப பாட்டு உங்கள் மனதில் இருந்து எல்லா அச்சங்களையும் அழித்து, உங்கள் இதயத்தையும் ஆவியையும் புதுப்பிக்கும் என்று நம்பப்படுகிறது, என்றும் அவர் கூறுகிறார். கல்லேலி காவு என்பது திராவிட கலாச்சாரத்தை கொண்டாடும் ஒரு இடமாகும், மேலும் அதன் நடைமுறைகள் வழக்கமான தாந்தரீக நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையுமாகும்.

நாங்கள் பூசையின் வேத பாணியைப் பின்பற்றுவதில்லை. பாதயனை, பொங்கலா, முதியாட்டம் மற்றும் ஆழி பூசை ஆகியவை முக்கிய சடங்குகள் ஆகும். மூங்கில் அரிசியால் செய்யப்பட்ட கஞ்சியுடன் வறுக்கப்பட்ட கிழங்குகளும் பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றன. பண்டைய பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம். திருவிழா நாட்களில் கூட நடனம் அல்லது இசை நிகழ்ச்சிகள் இல்லை, "என்று அவர் கூறுகிறார். கும்ப பாட்டு அனைத்து நல்ல சந்தர்ப்பங்களிலும் நடத்தப்படுகிறது, பொதுவாக இது மாலையில் தொடங்குகிறது, விடியற்காலை வரை தொடர்கிறது. "பாடலில் தெய்வத்தின் பிறப்பு முதல் அவரது அவதாரத்தின் நோக்கம் வரை அனைத்தும் விளக்கப்படுகின்றன. இப்போது நாங்கள் விசு நாளில் தொடங்கி 10 நாள் சடங்கை நடத்துகிறோம், என்று அவர் கூறுகிறார்.

வாய்மொழி வழியாக தலைமுறைகளுக்கு கடத்தப்பட்ட கும்ப பாடலில் வழக்கற்றுப் போன பல பெயர்களும் சொற்களும் உள்ளன.இதில் மலநாடு மற்றும் துலுநாடு போன்ற முந்தைய புவியியல் பகுதிகளை நீங்கள் காண்பீர்கள், என்று அவர் கூறுகிறார். ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பின்பற்றப்படும்,இச்சடங்கு பொதுவாக சமூகத்தின் ஒரு வயதான உறுப்பினர் மற்ற பாடகர்களை வழிநடத்துகிறார்.

கொக்கத்தோடு கோபாலன் ஆசன்தான்.இப்போது அணிக்கு தலைமை தாங்குகிறார். பல நூற்றாண்டுகள் பழமையான பழங்குடி ஒழுங்கை கற்றுக்கொள்வது எளிதல்ல என்பதால் கும்ப பாட்டு கடினமான சடங்கு பாடல்களில் ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன். கலையை முழுமையாக கற்றுக் கொள்ள நிறைய நேரம் மற்றும் அர்ப்பணிப்பு தேவை, என்று அவர் மேலும் கூறுகிறார். அச்சன்கோவில் மற்றும் ஆலுவாம்குடி ஆகியவை இங்கு அமைந்துள்ள இரண்டு பழங்கால கோயில்கள் ஆகும். கொக்காத்தோடிலுள்ள கட்டாத்திபாரா சில கிலோமீட்டர் தொலைவில் அருகிலுள்ள ஒரு சுற்றுலாத்தலமாகும். கட்டாத்திபாரா அதன் பிரம்மாண்டமான பாறைகள் மற்றும் மூன்று எதிரொலி நிகழ்வுகளால் குறிப்பாக கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. கும்பாவுருத்தி என்பது அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.

அடவி சூழ் சுற்றுலா: குட்டா வஞ்சி படகோட்டம் இங்கு ஒரு முக்கிய ஈர்ப்பாகும். கோன்னி நகரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.

கல்லேலி ஊரலி அப்பூப்பன்காவு, பத்தனம்திட்டா கவி என்பது கோன்னி சட்டசபை தொகுதியில் உள்ள ஒரு சுற்றுலா மையமாகும். சிறீ கல்லேலி ஊரலி அப்பூப்பன்காவு என்பது கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் கோன்னியில் உள்ள கல்லேலித்தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால கோயில்.ஆகும். இங்குள்ள தெய்வம் நீண்ட காலமாக இயற்கையின் உன்னத சக்தியாகவும், சுமார் நூறுக்கும் ம்ற்பட்ட மலை கடவுள்களின் ஆண்டவராகவும் வணங்கப்படுகிறது. . கேரளத்தின் பருவகாலத்தில் வருகின்ற திருவிழா என்பதாலும் இந்த கோயில் புகழ்பெற்றது. இந்த கோவிலில் செய்யப்படும் முக்கிய சடங்கு கார்கிடகா வாவு விழாவாகும், ஒது முன்னோர்களின் புறப்பட்ட ஆத்மாக்களின் நினைவாக அனுசரிக்கப்படும் இந்துமத சடங்காகும். பகலில், இந்த கோயிலின் தலைமை தெய்வத்திற்கு மென்மையான தேங்காய் மற்றும் வெற்றிலை போன்றவற்ரை வைத்து சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனையூட்டு (யானைகளுக்கு உணவளித்தல்), வானரவூட்டு (குரங்குகளுக்கு உணவளித்தல்) மற்றும் மீனூட்டு (மீன்களுக்கு உணவளித்தல்) போன்றவை இவ்விழாவில் மேற்கொள்ளப்படும் சடங்குகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 30 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-20.
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "State Highways in Kerala". Archived from the original on 2008-01-08. பார்க்கப்பட்ட நாள் 2008-01-17.
  4. "History - Travancore". Forest.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோன்னி&oldid=3265673" இலிருந்து மீள்விக்கப்பட்டது