கோபதி ஜானகிராம் செட்டி

இந்திய அரசியல்வாதி

கோபதி ஜானகிராம் செட்டி (G. Janakiram Chetty)(பிறப்பு 13 மே 1906) ஒரு இந்திய வணிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1941மே முதல் நவம்பர் வரை சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஜானகிராம் செட்டி 1906 மே 13 அன்று இந்திய வணிகர் மற்றும் அதிகாரியான கோபதி நாராயணசுவாமி செட்டிக்கு மகனாகப் பிறந்தார்.[1] சென்னையில் படித்த இவர் பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

பொது வாழ்க்கை

தொகு

ஜானகிராம் செட்டி 1934இல் சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே முதல் நவம்பர் 1941வரை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இவரது தந்தையைப் போலவே, ஜானகிராம் செட்டியும் 1934 முதல் 1949 வரை பச்சையப்பன் அறக்கட்டளைகளின் அறங்காவலராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. The Who's who in Madras. Pearl Press. 1935. p. 42.
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1941
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபதி_ஜானகிராம்_செட்டி&oldid=3147599" இலிருந்து மீள்விக்கப்பட்டது