சி. பசுதேவ்

இந்திய அரசியல்வாதி

சி. பசுதேவ் (C. Basudev) என்பவர் ஒரு இந்திய தொழிற் சங்கவாதி ஆவார். இவர் 1930 முதல் 1937 வரை தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராகவும், சென்னை மாநகரத் தந்தையாகவும் பணியாற்றினார்.

மெட்ராஸ் சட்டமன்றம்

தொகு

பசுதேவ் 1930 ஆம் ஆண்டில் மெட்ராஸ் சட்ட மேலவை உறுப்பினராக நீதிக் கட்சிசார்பில் நியமிக்கப்பட்டார். பசுதேவ் மெட்ராஸ் பணக்காரர்களின் மசோதாவை 31 அக்டோபர் 1932 அன்று விவசாயிகளின் கடனை நீக்குவதற்காகத் தாக்கல் செய்தார்.[1] இந்த மசோதா, கணிசமான மாற்றங்களுடன், கடனாளிகள் பாதுகாப்பு மசோதாவாக மாறியது மற்றும் சபையால் நிறைவேற்றப்பட்டது. சபையில் பசுதேவின் உரையினை ஆங்கிலம் தெரியாத மக்களின் நலனுக்காக கா. ந. அண்ணாதுரை தமிழில் மொழிபெயர்த்தார். இரண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு, 1937 தேர்தலில் பசுதேவ் இந்திய தேசிய காங்கிரசின் ஆலை மேற்பார்வையாளர் என்.ஜி.ராமசாமி நாயுடுவால் தோற்கடிக்கப்பட்டார்.[2]

மேயர்

தொகு

பசுதேவ் மே 1940 இல் சென்னை மாநகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 1941 வரை பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. A Colonial Economy in the Great Depression, Madras (1929–1937). Orient Blackswan. 2003. p. 149.
  2. Economic and Political Weekly. Sameeksha Trust. 1992. p. 1497. https://archive.org/details/dli.bengal.10689.15486. 


முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1940-1941
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பசுதேவ்&oldid=3147597" இலிருந்து மீள்விக்கப்பட்டது